தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.11.11

மைக்கேல் ஜாக்சனை கொலை செய்தது அவரது குடும்ப டாக்டர்தான்: அமெரிக்க கோர்ட் தீர்ப்பு


மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மறைவிற்கு, அவரது குடும்ப டாக்டரின் கவனக்குறைவே காரணம் எனவும், அவர் கொலையாளி எனவும் அமெரிக்க கோர்ட் தெரிவித்துள்ளது. பாப் இசை உலகின் அழியா புகழ்பெற்ற பிரபல பாடகர் மறைந்த மைக்கேல் ஜாக்சன், 52. கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ம் தேதி
அமெரிக்காவின் உள்ள தனது பண்ணைவீட்டில் காலமானார். அளவுக்கு அதிகமாக வலி நிவாரணி மருந்து உட்கொண்டதால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக கூறப்பட்டது. இவரது மரணத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
ஜாக்சனின் குடும்ப டாக்டராக கன்ட்ராடு முர்ரே என்பவர் தான், அவருக்கு சிகிச்சை அளித்தும், அவரது உடல்நிலையை கவனித்து வந்தார். அப்படியிருந்தும் ஜாக்சன் இறந்தார். இது தொடர்பாக கன்ட்ராடு முர்ரே மீது கோர்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையில் ஜாக்சன் இறப்பதற்கு முன்பு அவரை பரிசோதித்து சென்றார் முர்ரே. ஆயினும் வலிநிவாரண மருந்தினை உட்கொள்ள முர்ரே சொன்னதன் காரணமாக ஜாக்சன் இறந்தார். 6 வார காலமாக நடந்த இந்த வழக்கில் 45 பேர் சாட்சி அளித்தனர். 300-க்கும் மேற்பட்ட ஆதாரங்கள் டாக்டருக்கு எதிராக இருந்தன. இதனையடுத்து அவர் கொலை குற்றவாளி என, லாஸ்ஏஞ்சல்ஸ் கோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்தது.
இதையடுத்து டாக்டர் முர்ரேவை போலீஸ் ரிமாண்ட் செய்துள்ளது. அவருக்கு ஜாமீனும் மறுக்கப்பட்டுள்ளது. இவர் மீதான தண்டனை விபரம் வரும் 29-ம் தேதி வெளியிடப்படவுள்ளது.
ரசிகர்கள் வரவேற்பு: லாஸ்ஏஞ்சல்ஸ் கோர்ட், ஜாக்சனின் குடும்ப டாக்டர் முர்ரே, மீது கொலை குற்றச்சாட்டினை கூறிய செய்தி கேட்டு அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்த தீர்ப்பினை வரவேற்பதாக கூறினர்.

0 கருத்துகள்: