தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.1.11

லால்செளக்கில் கொடியேற்றும் திட்டத்தை பாஜக ஒத்திவைக்க கோரிக்கை

புதுதில்லி, ஜன.6: குடியரசு தினத்தன்று ஸ்ரீநகரின் லால்செளக் பகுதியில் தேசியக் கொடியேற்றும் பாரதிய ஜனதா கட்சியின் திட்டத்துக்கு அதன் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதாதளம் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. 
 லால்செளக்கில் தேசியக் கொடியேற்றும் திட்டத்தை பாஜக ஒத்திவைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். இப்போது அங்கு அமைதியை நிலைநாட்டும் வகையிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமே தவிர அதை சீர்குலைக்கும் எதையும் செய்யக்கூடாது என ஐக்கிய ஜனதாதளத் தலைவர் சரத்யாதவ் தெரிவித்தார்
ஜனவரி 12-ம் தேதி பாஜகவின் இளைஞர் பிரிவினர் கொல்கத்தாவில் இருந்து ஸ்ரீநகருக்கு யாத்திரை மேற்கொள்வார்கள் என்றும், அதன் முடிவில் குடியரசு தினத்தன்று லால்செளக்கில் தேசியக் கொடியை ஏற்றிவைப்பார்கள் என்றும் பாஜக முன்னதாக அறிவித்திருந்தது

தமிழர்கள் விசயத்தில் மிக தெளிவாக இருக்கும் இலங்கை சிங்களவர்கள்…


Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema
இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் அல்ல. அவர்கள் சிறு மக்கள் பகுதியினர் மட்டுமேயாவர். அதாவது ஜப்பானில் உள்ள கொரியர்கள் போன்ற மற்றும் தாய்லாந்தில் உள்ள சீனர்கள் போன்றவர்களே இலங்கையில் உள்ள தமிழர்கள். அவர்களினால் சுய நிர்ணய உரிமையையோ சுயாட்சியையோ கோர முடியாது.
ஆனால் தமிழகத்தில் உள்ள தமிழர்கள் அந்நாட்டில் தேசிய இனமாகும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகரும் மேல் மாகாண சபையின் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
எதிர்காலத்தில் மூன்று முக்கிய இடங்களில் தமிழ் பிரிவினைவாதத்தின் தலைமைத்துவம் உருவாகலாம். கொழும்பில் எனது நண்பர் சுமந்திரன் அவ்வாறு உருவாகலாம். வடக்கு கிழக்கில் அரச சார்பற்ற நிறுவனங்கள் அவ்வாறு உருவாகலாம். புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் அலி ஜின்னா போன்றதொரு கதாபாத்திரத்தைக் கொண்ட ஒரு தலைவர் உருவாகலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அமர்வில் கலந்து கொண்டு சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வு நேற்று நடைபெற்றபோது அதில் ஆணைக்குழுவின் தலைவர் சி. ஆர். டி. சில்வா கலந்து கொண்டிருக்கவில்லை. ஆணைக்குழுவின் ஐந்து உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
உதய கம்மன்பில அங்கு தொடர்ந்து கூறியதாவது
இலங்கையை பொறுத்தமட்டில் சிங்கள மக்களை மட்டுமே ஒரு இனமாக கருத முடியும். அந்த வகையிலேயே எமது வரலாறு மற்றும் கலாசாரம் அமைந்துள்ளது. ஆனால் இந்தியாவின் தமிழகத்தில் உள்ள தமிழ் மக்கள் அங்கு தம்மை ஒரு தேசிய இனமாக பார்க்கலாம். அதாவது தாய் மக்களின் நாடு தாய்லாந்து போன்று ஜப்பானியர்களின் நாடு ஜப்பான் இலங்கையின் தேசிய இனமாக சிங்கள மக்களை மட்டுமே பார்க்கலாம்.
தமிழ்நாட்டு தமிழர்கள்
அதன்படி தமிழ்நாட்டில் உள்ள தமிழ் மக்கள் அங்கு தேசிய இனமாகின்ற அதேவேளை ஏனைய நாடுகளான இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா, மடகஸ்கார், கென்யா போன்ற நாடுகளில் தமிழ் மக்கள் ஒரு சிறு மக்கள் பிரிவினர் மட்டுமேயாகும். அதாவது ஜப்பானில் உள்ள கொரியர்கள் போன்றும் தாய்லாந்தில் உள்ள சீனர்கள் போன்றவர்களே இலங்கையில் உள்ள தமிழர்கள்.
அதிகம் செய்துள்ளோம்
எனவே அவர்களினால் சுயாட்சியையோ சுய நிர்ணய உரிமையையோ கோர முடியாது. சிறு மக்கள் பிரிவினருக்கு உரிய உரிமைகளை மட்டுமே அனுபவிக்க முடியும். சிறிய மக்கள் பிரிவினர்களுக்கான உரிமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளதை விட அதிகளவில் எமது நாட்டில் நாங்கள் செய்துள்ளோம்.
தமிழ் மக்களின் தாயகமான இந்தியாவில் கூட தமிழ் மொழி அரச கரும மொழியாக இல்லை. ஆனால் இலங்கையில் உள்ளது. அந்த வகையில் நாங்கள் இந்தியாவைவிட முன் சென்றுள்ளோம். செல்வநாயகம் உள்ளிட்ட எந்த தலைவரும் வடக்கு கிழக்கு எவ்வாறு தமிழ் மக்களின் தாயகமாக இருக்கும் என்பதனை நிரூபிக்கவில்லை. தமிழ் மக்கள் எவ்வாறு தேசிய இனமாக வருவார்கள் என்பதனை நிரூபிக்கவில்லை.
செல்வநாயகம் அகிம்சைவாதியா?
செல்வநாயகம் அகிம்சைவாதி என்று குறிப்பிடப்படுகின்றார். ஆனால் அவரின் உண்மையான விடயத்தை பார்க்கும்போது அவர் அந்தளவுக்கு அகிம்சைவாதி அல்ல என்பது புரியும்.
ஒரு சந்தர்ப்பத்தில் செல்வநாயகத்தின் கொள்கைகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் சிதம்பரம் கனகசிங்கம் மற்றும் நேசைய்யா உள்ளிட்ட பலர் கூட்டம் ஒன்றை நடத்தினர். அந்த கூட்டத்துக்கு குண்டர்களை அனுப்பி செல்வநாயகம் குழப்பியிருந்தார். செல்வநாயகத்தின் அகிம்சை போராட்டங்களில் பங்கெடுக்காதவர்களை குண்டர்களை கொண்டு தாக்கியிருந்தார்.
இற்றைக்கு 12 வருடங்களுக்கு முன்னர் புலிகளை தோற்கடிக்க முடியும் என்று எமது கட்சி கூறியது. அதாவது புலிகள் தோற்கடிக்கப்படவேண்டும் என்பதனை அனைவரும் ஏற்றுக்கொண்டாலும் அது முடியாத காரியம் என்றே நம்பினர். நாங்கள் அதனை உடைத்தோம். விளைவாக புலிகள் தோற்கடிக்கப்பட்டனர். நாங்கள் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் தெரிவித்த விடயம் ஒன்று உள்ளது.
தமிழீழம் சரியானது என நிரூபித்தால் ஏற்போம்
அதாவது நாங்கள் செல்வநாயகத்தின் அகிம்சை ரீதியான அச்சுறுத்தலுக்கு பிரபாகரனின் அச்சுறுத்தலுக்கோ ஒரு போதும் அடி பணிந்ததில்லை. மாறாக தர்க்கங்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றோம். நாங்கள் பௌத்தர்கள். தர்க்கவியல் ரீதியில் நிரூபிக்கப்படும் விடயங்களை ஏற்றுக்கொள்வோம். தமிழீழம் சரியான கோரிக்கை நிரூபித்ததால் அதற்காக முன்னிற்க தயார் என்று நாங்கள் கூறிவந்தோம். ஆனால் யாரும் அதனை நிரூபிக்க முன்வரவில்லை. மாறாக அச்சுறுத்தல் மட்டுமே இருந்தது.
வால் மட்டுமே இலங்கையில் இருந்தது
தற்போது மக்களுக்கு ஒரு விடயத்தை கூறவேண்டும். அதாவது புலிகளை தோற்கடித்த வெற்றிக்களிப்பில் தொடர்ந்து இருக்க வேண்டாம். அதற்கடுத்த பிரிவினைவாத சவாலை எதிர்கொள்ள முன்வாருங்கள். நவீன முறையில் எதிர்காலத்தில் பிரிவினைவாதம் உருவாகலாம். புலியின் வால் மட்டுமே இலங்கையில் இருந்தது. அதனை வெட்டியுள்ள நாங்கள் புலிகள் தோற்கடிப்பட்டுள்ளதாக கூறுகின்றோம்.
கால்கள் வெளிநாடுகளில்
ஆனால் அந்த புலியின் வாய் நோர்டிக் நாடுகளில் உள்ளது. முன் கால்கள் கனடாவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் உள்ளன. பின் கால்கள் தென்னாபிரிக்காவிலும் அவுஸ்திரேலியாவிலும் உள்ளன. எனவே தற்போது எமக்கு ஒரு இடைவெளி மட்டுமே கிடைத்துள்ளது.
இஸ்ரேல் எப்படி உருவானது?
இற்றைக்கு 100 வருடங்களுக்கு முன்னர் இஸ்ரேல் என்று ஒரு நாடு இருக்கவில்லை. 86 நாடுகளில் யூதர்கள் பரந்து காணப்பட்டனர். எனினும் ஒரு கட்டத்தில் 86 நாடுகளிலும் இருந்த யூதர்கள் ஒன்று கூடி இயக்கம் ஒன்றை ஆரம்பத்து பலஸ்தீனத்துக்குள் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கினர்.
இந்தியாவில் முதலில் ஏற்பட்ட பிரிவு முஸ்லிம் அல்ல. மாறாக 1919 ஆம் ஆண்டில் சுயநிர்ணய அரச>யலமைப்பு வந்ததும் கன்னடம் மலையாளம் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய பகுதிகள் ஒரு வலயமாக இருக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் 1935 ஆம் ஆண்டு அரசியலமைப்பின்போது அந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பின்னர் நாம் தமிழர்கள் இயக்கம் உருவானது. ஆனால் 1962 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தின் இராணுவத்தினால் அந்த இயக்கம் அழிக்கப்பட்டது.
லண்டன் மாநாடு
இதனையடுத்து 1962 ஆம் ஆண்டு லண்டனில் உலக தமிழ் சங்கத்தினால் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. இலங்கையில் சிறைப்படுத்தப்பட்டிருந்த செல்வநாயகம் சிகிச்சை பெறுவதற்காக லண்டன் சென்றிருந்தபோது அந்த மாநாட்டில் கலந்துகொண்டார். அப்போது அவர் அந்த மாநாட்டில் என்ன கூறினார்? இந்தியா பெரிய நாடு. அதனுடன் மோதி நாட்டை பெற முடியாது என்றார். அதனையடுத்து இலங்கை தெரிவு செய்யப்பட்டது. செல்வநாயகம் மலேஷியாவில் இருந்து இலங்கைக்கு குடி பெயர்ந்தவர்.
தமிழ் அலி ஜின்னா வரலாம்
அன்று சர்வதேச நாடுகள் பிரிவினைவாத போராட்டத்துக்கு இரகசியமாக ஆதரவு வழங்கின. இன்று வெளிப்படையாக ஆதரவு வழங்குகின்றன. எதிர்காலத்தில் மூன்று முக்கிய இடங்களில் தமிழ் பிரிவினைவாதத்தின் தலைமைத்துவம் உருவாகலாம். கொழும்பில் எனது நண்பர் சுமந்திரன் அவ்வாறு உருவாகலாம். வடக்கு கிழக்கில் அரச சார்பற்ற நிறுவனங்கள் அவ்வாறு உருவாகலாம். புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் அலி ஜின்னா போன்றதொரு கதாபாத்திரத்தைக் கொண்ட ஒரு தலைவர் உருவாகலாம்.
எனவே தற்போதைய நிலைமையில் தமிழ் அலி ஜின்னா ஒருவரை எதிர்கொள்ள நாம் தயாராகவேண்டும். இதற்காக சட்டம் அறிவு தொல்பொருள் உள்ளிட்ட விடயங்கள் சார்ந்த அறிவுடைய இராஜதந்திர படை ஒன்றை நாங்கள் உருவாக்கவேண்டும்

மு.க அழகிரியின் ராஜினாமா கடிதம்…திமுகவுக்கே ஆப்பா


Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema
மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, புத்தாண்டு அன்று தன்னை சந்திக்க வந்த பத்திரிக்கை நிருபர்களிடம், “நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டேன் என செய்தி போடுங்கள்” என்று கூறியதாக தகவல் பரவியுள்ளது.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சனை. சட்டசபை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் வேளையில், தொடரும் ஊழல் பிரச்சனைகளால் கட்சியின் மதிப்பு மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாக தி.மு.க., வினர் இடையே குமுறல்கள் எழுந்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின் ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சனையால், தி.மு.க., வின் சாதனைகள் அனைத்தும் அழிந்து வருகிறது. அதனால் ராஜாவின் அமைச்சர் பதவியை பறித்தது போலவே, கட்சியின் கொள்கை பரப்புச் செயலர் பதவியையும் பறித்து, அவரை கட்சியின் நடவடிக்கைகளில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும்.
மேலும், தமிழக அமைச்சர் பூங்கோதையின் பதவியையும் பறிக்க வேண்டும். கனிமொழிக்கு கட்சியில் கொடுத்து வரும் முக்கியத்துவத்தினை குறைக்க வேண்டும். சென்னையில் நடைபெறுவதாக இருந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சியை நடத்தக் கூடாது போன்ற பல கோரிக்கைகளையும் மத்திய அமைச்சர் அழகிரி, முதல்வரிடம் வந்ததாக கூறப்படுகிறது.
தற்போது, ராஜாவின் கட்சிப் பதவியை நாமாக பறித்தால் அவர் செய்த ஊழலினை நாமே முன்வந்து ஒப்புக் கொண்டது போல் ஆகிவிடும். அதனால், பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை, சி.பி.ஐ., விசாரணை, உச்ச நீதிமன்ற முடிவு இதையெல்லாம் பார்த்து விட்டு நாம் முடிவெடுப்போம். என தி.மு.க., கட்சித் தலைமை அழகிரியை சமாதானப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், புத்தாண்டு தினத்தன்று தன்னை சந்திக்க வந்த நிருபர்களிடம், நான் அமைச்சர் பதவியை ராஜிமானா செய்து விட்டேன் என செய்தி போடுங்கள் என்று கூறியதாகவும், இது குறித்த கடிதத்தை முதல்வர் கருணாநிதிக்கும், அன்பழகனுக்கும் அவர் அனுப்பியதாக வதந்தி பரவியுள்ளது.
பரபரப்பான சூழ்நிலையில் கடந்த 3ம் திகதி பின் நேரப்பொழுதின் போது, மதுரையில் இருந்து சென்னை சென்ற அழகிரி முதல்வரைச் சந்தித்தார். அப்போது, தன் மூன்று கோரிக்கைகளையும் அவர் வலியுறுத்தினார். இதை கட்சியின் உயர் மட்டக்குழுவினை கூட்டித் தான் முடிவு எடுக்க முடியும் என்று கூறிய முதல்வர், அவசர அவசரமாக உயர் மட்டக்குழுவினை கூட்டியதாக தி.மு.க. வட்டாரங்கள் செய்தி தெரிவித்துள்ளன.
முதல்வரின் பதிலால் சமாதானமடையாத அழகிரி உயர் மட்டக்குழுவை புறக்கணித்து விட்டு மதுரைக்குச் சென்றுவிட்டார். இருப்பினும், உயர் மட்டக்குழு தொடர்ந்தது. அதில், அழகிரியின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த விடயத்தில் உடனடியாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக பொதுக்குழுவினை கூட்டலாம் என்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர். இதனால், பிப்ரவரி 3ம் திகதி தி.மு.க., பொதுக்குழு கூடுவது குறித்த தகவல் வெளியாகியுள்ளது என்று செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது

ரேடார் கண்ணில் மண்ணைத் தூவும் போர் விமானத்தைத் தயாரித்தது சீனா

பெய்ஜிங்: ஸ்டெல்த் எனப்படும் ரேடார் உள்ளிட்ட எந்த கழுகுப் பார்வையிலும் சிக்காமல் பறக்கக் கூடிய அதி நவீன போர்விமானத்தை உருவாக்கியுள்ளதாம் சீனா. இந்த விமானம் குறித்த படங்கள் சீன இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இது தற்போது சோதனைக் கட்டத்திற்குத் தயாராகி வருவதாகவும் அச்செய்தி கூறுகிறது.

stealth எனப்படும் யார் கண்ணிலும் (ரேடார், சோனார், அகச்சிவப்பு கதிர்) படாமல் செயல்படும் தொழில்நுட்பம், 2வது உலகப் போரின்போதுதான் முதல் முறையாக நடைமுறைக்கு வந்தது. இத்தகைய தொழில்நுட்பத்தில் இயங்கும் போர் விமானங்களை எதிரிகளால் கண்டுபிடிக்கவே முடியாது. இதனால் இவற்றுக்கு மாயாவி விமானங்கள் என்றும் செல்லப் பெயர் உண்டு.

இத்தகைய விமானத்தைத்தான் இப்போது சீனா உருவாக்கியுள்ளதாம். இந்த செய்தி இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் தற்போது வெளியாகியுள்ள படங்களைப் பார்க்கும்போது அது சோதனை ரீதியான விமானமாக இருக்கும் என கருதப்படுகிறது.

இதுகுறித்து வால்ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள முதல் பக்கச் செய்தியில், ஜே20 என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த போர் விமானம், சோதனைக் கட்டத்திற்கு முந்தைய கட்டமான ஹை ஸ்பீட் டாக்சி டெஸ்ட் நிலையில் இருப்பதாக தெரிகிறது.

இந்த போர் விமானத் தயாரிப்பு உண்மையாக இருக்குமானால், சீனாவின் அதிவேக வளர்ச்சியை இது நிரூபிப்பதாக அமையு்ம். ஏற்கனவே விண்வெளித்துறையிலும், ரயில்வே துறையிலும் மிகப் பெரிய வளர்ச்சியை சந்தித்து வருகிறது சீனா. இந்த நிலையில் மாயாவி போர்விமானங்களை அது வெற்றிகரமாக தயாரித்து விட்டால் மிகப் பெரிய வல்லரசாக அது உயரும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே இப்போதைக்கு ஒரே ஒரு மாயாவி போர்விமானம்தான் செயல்பாட்டில் உள்ளது. அது அமெரிக்காவின் எப்-22 போர் விமானமாகும். அந்த விமானத்துக்குப் போட்டியாக சீனாவின் ஜே20 உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு இதன் மூலம் அதிகரித்துள்ளது.

ஆனால் இதை மறுக்கிறார் சீன பாதுகாப்புத் துறை நிபுணர் ஒருவர். இதுகுறித்து சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக நிபுணர் லி டகுவாங் கூறுகையில், இந்த செய்திகள் வெறும் யூகச் செய்திகளே. எப்22 விமானத்தைப் பொறுத்தவரை அது ஒரு ஆக்கிரமிப்பு போர் விமானம். உலகத்தை தனது கையில் வைத்துக் கொள்ள நினைக்கும் ஒரு சக்தியின் கையில் இருக்கும் அபாயகரமான ஆயுதம்.

ஆக்கிரமிப்பு மனோபாவத்தில் வளர்ந்தது அமெரிக்காவின் ஆயுத பலம். ஆனால் சீனாவின் ராணுவ வளர்ச்சி என்பது இயற்கையானது, சுய பாதுகாப்பை மட்டுமே கருத்தில் கொண்டது. எனவே எங்களுக்கு மிகப் பெரிய அளவிலான போர் விமானங்கள் தேவை இல்லை என்கிறார் அவர்.

இவர் இப்படிச் சொன்னாலும் கூட ஸ்டெல்த் போர் விமானத் தயாரிப்பில் சீனா படு மும்முரமாக இருப்பது உண்மைதான் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. பல சீன இணையதளங்களில் ஜே20 போர் விமானம் ரன்வேயில் செல்வது போன்றும், அதன் முன்பக்கத்தில் பாராசூட்கள் விரிவது போன்றும் உள்ள செல்போன் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

சீனாவின் இந்த மாயாவி விமானத்தால் அமெரிக்கா பயப்படுகிறதோ இல்லையோ நிச்சயம் இந்தியா கவனமுடன் இருந்தாக வேண்டும் என்பதில் சந்தேகமில்லை.