தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.3.11

ஜப்பான்:மீண்டும் பூகம்பம், புகுஷிமாவில் வெடிக்கத் தயாராகும் 4வது அணுஉலை

டோக்கியா,மார்ச்.15:ஜப்பானில் மீண்டும் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. 6.3 ரிக்டர் ஸ்கேல் அளவில் பதிவாகியுள்ளது.

பூகம்பத்தைத் தொடர்ந்து வடகிழக்கு கடற்பகுதியில் 3 மீட்டர் உயரத்தில் அலைகள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே புகுஷிமாவில் மீண்டும் மற்றொரு அணுஉலை வெடிப்பு ஏற்படப் போகிறது. ஏற்கனவே மூன்றாவது அணுஉலையின் மேல் பகுதியில் ஹைட்ரஜன் வாயு அடைந்து மூடியதால் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. மூன்றாவது அணு உலையிலிருந்தும் புகை வெளிவரத் துவங்கியுள்ளது

ஈராக்:ராணுவ தலைமையகத்திற்கு அருகே குண்டுவெடிப்பு - 10 ராணுவ வீரர்கள் பலி

பாக்தாத்,மார்ச்.15:ஈராக்கில் ராணுவ தலைமையகத்திற்கு அருகே நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 10 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 14 ராணுவ வீரர்கள் உள்பட 29 பேருக்கு காயமேற்பட்டுள்ளது.

குண்டுவெடிப்பின் அதிர்ச்சியில் கட்டிடம் தகர்ந்து வீழ்ந்து ஏராளமான ராணுவத்தினர் உள்ளே சிக்கியுள்ளனர். இவர்களை வெளியேக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தியாலா மாகாணத்திற்கு அருகில் காரில் வந்த நபர் ராணுவ தலைமையகத்திற்கு அருகே

ஜப்பானின் இரண்டாவது அணு உலையில் வெடிப்பு


டோக்கியோ ஜப்பானின் புகுசிமா டாய்ச்சி அணுசக்தி நிலையத்தின் இரண்டாவது உலையும் வெடித்தது. இதனால் சுற்றுப்புறப் பகுதியிலிருந்து 6 லட்சத்துக்கும் அதிகமாக மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இரண்டாவது அணு உலை வெடிப்பு காரணமாக 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜப்பானுக்கு மேலும் ஒரு சோதனை: எரிமலை வெடித்தது


டோக்கியோ, சுனாமி, பூகம்பத்தால் சோகத்தில் ஆழ்ந்துள்ள ஜப்பானில் நேற்று எரிமலை வெடித்து சிதறியது. 4 கி.மீ. உயரத்துக்கு பாறைகள் பறந்தன.
ஜப்பானில் கடந்த 11-ந் தேதி அன்று 9 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, பெரிய அளவில் சுனாமி ஏற்பட்டு அந்த நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், தலைநகர் டோக்கியோவில் இருந்து 240 கி.மீ. தொலைவில் உள்ள புகுஷிமா அணுஉலையில் ஒரு பகுதி வெடித்து கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இரண்டு அணு உலைகள் வெடிக்கும் நிலையில் இருக்கின்றன.

ஹிந்துத்துவா தலைவர்கள் நேபாளத்தில் தலைமறைவு!!!

புதுடெல்லி, சம்ஜோத எக்ஸ்பிரஸ் உள்பட இந்தியாவில் நடந்த பல்வேறு தொடர் குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர்களை தேடி தேசிய புலனாய்வு ஏஜன்சி நேபாளத்திற்கு சென்றுள்ளது. குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய பயங்கரவாதிகள் சிலர் நேபாளத்தில் தலைமைறை வாகியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில் என்.ஐ.ஏ நேபாளம் சென்றுள்ளது.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ், அஜ்மீர் தர்கா, மக்கா மஸ்ஜித், மொடாஸா, மலேகான் ஆகிய தொடர் குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளான சந்தீப்

போலீஸ் பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும்: பிருந்தா காரட்.

ஸ்ரீநகர், மார்ச்.13: கஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு நடந்த போராட்டத்திற் கிடையே 114 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளான பாதுகாப்பு படையினரை தண்டிப்பதற்கு நேர்மையான, பாரபட்சமற்ற கமிஷனை மத்திய அரசு நியமிக்க வேண்டுமென சி.பி.எம் கட்சியின் தலைவர்களில் ஒருவரான பிருந்தா காரட் வலியுறுத்தியுள்ளார்.

நீதிக் கிடைக்காமல் சமாதானத்தை குறித்து பேச இயலாது என பிருந்தா காரட் தெரிவித்தார். கஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அரசு நியமித்த மத்தியஸ்தர்

அமெரிக்கா:பி.ஜே.க்ரவ்லி ராஜினாமா

வாஷிங்டன்,மார்ச்.13:அமெரிக்க அரசுத்துறை செய்தித் தொடர்பாளர் பி.ஜே.க்ரவ்லி தனது பதவியை ராஜினாமாச் செய்துள்ளார்.

விக்கிலீக்ஸிற்கு அமெரிக்க தூதரக ஆவணங்களை கசியவிட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார் பிராட்லி மானிங். இவர் அமெரிக்க ராணுவ உளவுத்துறையில் பகுப்பாய்வாளராக பணியாற்றியவர். இவரை அமெரிக்க ராணுவம் நடத்தும் முறை குறித்து பி.ஜே.க்ரவ்லி நேற்று முன்தினம் விமர்சித்திருந்தார்

மத்திய கிழக்கு : பகரெய்னில் மாபெரும் ஆர்பாட்டம் வெடித்தது


ஜப்பானிய சுனாமி மத்திய கிழக்கு வடக்கு ஆபிரிக்க போராட்ட செய்திகளின் மீதும் சுனாமி போல பாய்ந்துள்ளதால் கடந்த இரண்டு தினங்களாக முதன்மை குறைந்திருந்த மத்திய கிழக்கு ஆர்பாட்டங்கள் இன்று மறுபடியும் சூல் கொண்ட மேகமாக திரும்பியுள்ளன. இந்த அல்லோல கல்லோலத்தில் மத்திய கிழக்கு பகரெய்னில் மாபெரும் ஆர்பாட்டம் இன்று ஞாயிறு அதிகாலை வெடித்தது. பகரெய்ன் தலைநகர் மனாமாவில் உள்ள பாரல் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான ஆர்பாட்டக்காரர் திரண்டு வந்தனர். பெருந்தொகையாகக் குவிக்கப்பட்ட படையினர் கண்ணீர்புகை, இறப்பர் குண்டுகளை சுட்டபடி ஆர்பாட்டக்காரரை தாக்கினார்கள். கண்ணீர் புகையால் பாதிக்கப்பட்ட 350 பேர்