தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.7.11

தன் காலே தனக்குதவி என்று சாதிக்கும் மாற்றுத்திறனாளி

பட்டப்படிப்பை முடித்து, அரசு வேலையை எதிர்பார்த்து காருத்திருப்போருக்கு மத்தியில், தனது கால்களையே கைகளாக்கி, மொபைல்போன் ரிப்பேர் செயய்யும் சுயதொழில் மூலம் சாதித்து காட்டி வருகிறார் மாற்றுத்திறனாளி ஒருவர்.

சென்னை, கிழக்கு கொளத்தூர் சாலையில் மொபைல்போன் சர்வீஸ் கடையை நடத்துபவர் கே.முகமது ஹசன் , 32. பிறவியிலேயே இரண்டு கைகள் இன்றி பிறந்ததால், மனம்

மும்பை:ஏ.டி.எஸ்ஸின் சித்திரவதையில் அப்பாவி முஸ்லிம் வாலிபர் மரணம்

guj_blast_brother1_271x181
மும்பை:மும்பை தொடர் குண்டுவெடிப்பின் பழியைபோட முஸ்லிம் ஃபோபியாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய புலனாய்வு ஏஜன்சிகளும், ஊடகங்களும் முஸ்லிம்களை சுற்றியே வட்டமிட்டுக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மஹராஷ்ட்ரா தீவிரவாத தடுப்பு படையினரின் மிருகத்தனமான சித்திரவதையில் ஓர் அப்பாவி முஸ்லிம் வாலிபர் தனது உயிரை இழந்துள்ளார்.

14 முன்னாள் தாலிபான் தலைவர்களை ஐ.நா கறுப்புப்பட்டியலில் இருந்து நீக்கியது

Taliban_261208
ஐ.நா:ஐக்கிய நாடுகள் சபையால் தடை விதிக்கப்பட்ட 14 முன்னாள் தாலிபான் தலைவர்களின் பெயரை கறுப்பு பட்டியலில் இருந்து ஐ.நா நீக்கம் செய்துள்ளது.
ஆப்கான் அரசுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த தாலிபானை தூண்டுவதற்காக இந்நடவடிக்கை. ஆப்கான் அரசு கடந்த செப்டம்பரில் உருவாக்கிய அமைதி குழுவின் நான்கு உறுப்பினர்கள் அடங்கிய ஐ.நாவின் சிறப்பு தடை குழு இம்முடிவை மேற்கொண்டுள்ளது.

ஜாமீன் கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்கள்; சி.பி.ஐ. மீது கனிமொழி புகார்

ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவைத் தொடர்ந்து கனிமொழி எம்.பி. கடந்த மே மாதம் 20-ந்தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுக்கள் சி.பி.ஐ. கோர்ட்டிலும் தொடர்ந்து டெல்லி ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டிலும் நிராகரிக்கப்பட்டு விட்டன. இதனால் கனிமொழி கடந்த 2 மாதமாக ஜெயிலில் இருக்கிறார்.
இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட பின் சி.பி.ஐ. கோர்ட்டில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
சி.பி.ஐ. இன்னும் 3-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. 3-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்புதான் குற்றச்சாட்டு பதிவாகும். இதனால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே சி.பி.ஐ. வேண்டுமென்றே தேவையில்லாமல் வழக்கை இழுத்தடிப்பதாக

ரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைத்தாரா நித்யானந்தா?

பெங்களூர்: நடிகை ரஞ்சிதாவை அந்தரத்தில் மிதக்க வைப்பதாக பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தா நடத்திக் காட்டிய வித்தை படுதோல்வி அடைந்தது. 

வெளிநாட்டு சீடர்கள் உட்பட அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர். மக்களை ஏமாற்றுவதாக நித்யானந்தாவுக்கு எதிராக ஒரு நிருபர் ஆவேசமாக கூச்சல் போட்டார்.

பொக்கிஷ ரகசியத்தை வெளிக் கொணர்ந்த வக்கீல் சுந்தரராஜன் மரணம்

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் உள்ள பாதாள அறைகளைத் திறந்து அதில் குவித்து வைக்கப்பட்டுள்ள பல லட்சம் கோடி அரிய வகை பொக்கிஷங்கள் வெளியுலகுக்குத் தெரிய வர காரணமாக இருந்த வழக்கறிஞர் சுந்தரராஜன் மரணமடைந்தார்.
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் இதுவரை ரூ. 1லட்சம் கோடி அளவிலான நகைகள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு அறையைத் திறக்காமல் உள்ளனர். அதில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மதிப்பை