தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.4.11

வடிவேலு பிரசார வேன் மீது செருப்பு வீச்சு; தி.மு.க.வினர் சாலை மறியல்


திருச்சி திருவானைக்காவலில் வடிவேலு பிரசார வேன் மீது செருப்பு வீசப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலும் தே.மு.தி.க. அலுவலகம் சூறையாடப்பட்டது.
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நகைச்சுவை நடிகர் வடிவேலு தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அவர் திருச்சி மாவட்டத்தில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

தேசத்தை சீர்குலைத்து விட்டனர் : மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை: அண்ணா ஹசாரே

புதுதில்லி, ஏப்.8    ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்ட மசோதாவை அமல் படுத்தக்கோரி தில்லியில் காந்தியவாதி அன்னா ஹசாரே தொடர்ந்து 4வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.  உண்ணாவிரதம் குறித்துப் பேசிய அவர், தன்னால் நிச்சயம் ஒருவாரம் நலமுடன் இருக்க முடியும் என்பதால் தனது உடல்நிலை குறித்து மக்கள் கவலைப்பட வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

தில்லியில் இன்று  (ஏப்.7) அவர் அளித்த பேட்டியில் : தனது அறப்போராட்டத்துக்கு திரண்டுள்ள பெரும் ஆதரவு உத்வேகத்தை அளிக்கிறது. இன்றும் நிறைய பேர் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். நிர்வாக சீர்திருத்தம்

லிபியா மீது விமான தாக்குதலை நிறுத்துங்கள் ஒபாமாவுக்கு கடாபி கடிதம்


திரிபோலி, ஏப். 7- லிபியா நாட்டில் அதிபர் கடாபி பதவி விலக கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை ஒடுக்க கடாபி ராணுவத்தை ஏவி விட்டுள்ளார். ராணுவம் பொது மக்கள் மீது கண் மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது. இதில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து அமெரிக்கா, பிரான்சு, இங்கிலாந்து ஆகிய நாடுகள் லிபியா மீது தாக்குதல் நடத்தின. விமானங்கள் மூலம் குண்டு வீசின. ஆனாலும் கடாபி தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது

சூடானில் இஸ்ரேல் விமானத் தாக்குதல் – 2 பேர் பலி


2826965657
கார்த்தூம்:வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலின் நோக்கம் தெரிவிக்கப்படவில்லை.
சூடான் கடற்கரைக்கு அருகே போர்ட் சூடான் நகரத்தில் இத்தாக்குதலை நடத்தியுள்ளது இஸ்ரேல். இத்தாக்குதலில் 2 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
போர் விமானத்திலிருந்து தொடுக்கப்பட்ட ஏவுகணை காரில் தாக்கியதால் இருவர் மரணமடைந்துள்ளனர். இத்தாக்குதலை நடத்தியது இஸ்ரேல் என

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை நேற்று துவக்கம்


madani
பெங்களூர்:கேரள மாநில பி.டி.பி தலைவர் அப்துந்நாஸர் மஃதனி குற்றம் சாட்டப்பட்டுள்ள பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை நெற்று துவங்குகியது. கர்நாடகா மாநிலம் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் 34-ஆம் எண் நகர சிவில் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும்.நீதிபதி ஹெச்.எல்.ஸ்ரீனிவாசன் வழக்கை பரிசீலிப்பார்.
வழக்கின் குற்றப்பத்திரிகை தொடர்பாக நடவடிக்கைகளை பூர்த்திச்செய்து விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதில் ஏற்பட்ட தாமதத்தினால் விசாரணை துவங்க காலதாமதமானது.

கஷ்மீர் உள்பட உலகில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணம் பிரிட்டனின் காலனியாதிக்கக் கொள்கை – டேவிட் காமரூன் ஒப்புதல்


david-cameron_6_jpg
இஸ்லாமாபாத்:இந்தியா-பாகிஸ்தானுக்கிடையேயான கஷ்மீர் தர்க்கம் உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவும் மோதல்களுக்கு காரணம் பிரிட்டனின் காலனியாதிக்கக் கொள்கைதான் என பிரிட்டனின் பிரதமர் டேவிட் காமரூன் ஒப்புக்கொண்டுள்ளார்.
பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கிடையே சர்வதேச சமூகத்தை அதிர்ச்சியடையச் செய்யும் வகையில், பிரிட்டனின் கடந்த கால வீழ்ச்சிகளை வெளிப்படையாக தெரிவித்துள்ளார் காமரூன்.

தேர்தல் பணம் ஐந்து கோடி பறிமுதல் ?


ஷெட்டில் நின்றிருந்த தனியார் ஆம்னி பஸ்சின் மேற்கூரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 5.11 கோடி ரூபாயை, திருச்சி ஆர்.டி.ஓ., சங்கீதா, தனி ஆளாக சென்று பறிமுதல் செய்து, சாதனை படைத்துள்ளார். இது தொடர்பாக, ஆம்னி பஸ் உரிமையாளர் உள்ளிட்ட மூவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுப் போடுபவர்களுக்கு வீடு, வீடாக பணம் வினியோகம் செய்ய, இந்த பணத்தை திருச்சிக்கு கடத்தி வந்த பிரமுகர் யார் என்பது இன்னமும் புதிராக உள்ளது.
போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரு போட்டியிடும், திருச்சி மேற்கு தொகுதிக்கு பணம் கடத்தப்படுவதாக நேற்று முன்தினம் நள்ளிரவில், திருச்சி ஆர்.டி.ஓ.,வும் தேர்தல் நடத்தும்

எனக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசினால் எனக்கு சந்தோசம்தான்: விஜயகாந்த்


தஞ்சை, ஏப். 6- என்னைப்பற்றி என்ன சொன்னாலும் கவலைப்பட மாட்டேன் என்று தே.மு.திக. தலைவர் விஜயகாந்த் கூறினார்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளராக போட்டியிடும் நடிகர் அருண்பாண்டியனை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று பேராவூரணி தொகுதியில் உள்ள பெருமகளூர், பேராவூரணி, திருச்சிற்றம்பலம் ஆகிய இடங்களில்