தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.10.10

அமெரிக்க - ஈராக் படையினரின் சித்திரவதைகள் - ஆயிரக்கணக்கில் வீடியோ வெளியானது!

ஈராக் சிறைக்கைதிகளை ஈராக் மற்றும் அமெரிக்க படைகள் துன்புறுத்தும் 391,831 புதிய ஆதாரங்களை விக்கிலீக்ஸ் இணையத்தளம் நேற்று வெளியிட்டுள்ளது.

DAT 36 என்ற படை நடவடிக்கை மூலம், 2006 ஜூலை 7ம் திகதி வடபக்தாத்தின் டார்மியா எனும் தடுப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டகைதிகள், அன்றைய இரவு பொழுதில் மணிக்கணக்கில் மிக மோசமாக துன்புறுத்தபப்ட்ட சம்பவங்கள், இவ் ஆதாரங்களில் பெரும் பங்கு வகிக்கின்றன.

கண்களை கட்டிவைத்து அடித்தல், முக உறுப்புக்களையும், ஏனைய உடல் அங்கங்களையும் மிகக்கொடூரமாக சிதைத்தல், மின்சாரம் பாய்ச்சல், வெந்நீர் பாய்ச்சல் என கட்டுக்கடங்காத சித்திரவதைக்காட்சிகள் 'the Secret Iraq Files' எனும் இவ்வெளியீட்டில் இடம்பெற்றுள்ளன.

எனினும் இப்பதிவுகளில், அமெரிக்க இராணுவத்தினர் இருப்பதை, பெண்டகன் இராணுவ தலைமையகம் முற்றுமுழுதாக மறுத்துள்ளது.
இச்சித்திரவதைகளுக்கும் தமக்கும் தொடர்புமில்லை என அறிக்கைவெளியிட்டுள்ளது.

2004 ஜனவரி 1 ம் திகதி தொடக்கம், 2010 ஜனவரி 1ம் திகதி வரை ஈராக்கில் சந்தேகத்தின் பெயரில் தடுத்துவைக்கப்பட்ட அனைத்து சிறைக்கைதிகள் அனுபவித்த சித்திரவதைகளும் குறித்த தொகுப்பில் இடம்பிடித்துள்ளன.

இவற்றில் அதிகமானவற்றில், ஈராக்கின் கடைநிலை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படுகின்றன. 15,000 படுகொலை சம்பவங்களும் இதில் அடங்குகின்றன.

இத்தொகுப்பில் ஆயிரக்கணக்கான குற்றச்செயல்கள் வீடியோ காட்சிகளாக இடம்பெற்றுள்ளன. (இதயம் பலவீனமானோர் பார்க்க வேண்டாம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் செல்போன் மூலம் கல்வி

அமீரகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு புதிய வசதி அறிமுகம். இனி மாணவர்கள் தங்கள் செல்போனிலேயே பாடங்களை படித்துக்கொள்ளலாம், M-Education என்ற இந்த சேவை விரைவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்படுத்தப்படவுள்ளது.

அமீரகத்தின் அரசு செல்போன் நிறுவனமான எதிசலாத், கல்வி கற்கும் முறையில் நவீன நுட்பங்கள் மூலம் புதுமைகளைப் புகுத்திவரும் பிளாக் போர்டு (Blackboard Inc) என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த M-Education சேவையை வழங்கப்போகிறது, அபுதாபி பல்கலைகழகத்தில் வரும் ஜனவரி 2011ஆம் ஆண்டில் இருந்து இது சோதனை முறையில் நடைமுறைக்கு வருகின்றது.

இந்த Blackboard Mobile Learn solution மூலம் மாணவர்களும் ஆசிரியர்களும் பாடங்களையும், பாடம் சம்பந்தப்பட்ட பிற தகவல்களையும் நினைத்த நேரத்தில் தங்களின் செல்போன் மூலம் பெறலாம்.

அமீரகத்தில் 99 சதவிகிதத்தை அடைந்துள்ள எதிசலாத் நிறுவனத்தின் 3.5G மொபைல் அலைவரிசை மூலம் இந்த சேவை வழங்கப்படவுள்ளது. மேலும் Android phone, BlackBerry, iPhone மற்றும் iPad. போன்ற அனைத்து மொபைல் சாதனைகள் மூலமும் எளிதில் பயன்படுத்தத்தக்கது.

இதற்கான் ஒப்பந்தம் எதிசலாத், பிளாக் போர்ட் மற்றும் அபுதாபி பல்கலைக் கழக அதிகாரிகளிடையே கையெழுத்திடப்பட்டுள்ளது.

இது குறித்து எதிசலாத் உயரதிகாரி அப்துல்லா ஹஷிம் தெரிவிக்கையில் இந்த திட்டம் எதிசலாதிற்கு மட்டுமல்ல அமீரக கல்வி சமுதாயத்திற்கே ஒரு மிகமுக்கிய நிகழ்வு. இதன் மூலம் அமீரகத்தின் கல்வி முறை அதன் அடுத்த கட்டத்திற்கு புதிய பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது என்று கூறினார்

அயோத்தி ராமர் கோயில் - காவி Vs காவி!

அயோத்தியில் ராமர் கோயில் ராம் ஜன்மபூமி நியாஸ் என்ற அமைப்பால் கட்டப்படும் என்ற சாந்த் உச்சதிகார் சமிதியின் அறிவிப்புக்கு நிர்மோகி அகாரா தலைவர் மஹந்த் பாஸ்கர் தாஸ் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்.ஸும் அதன் மத அமைப்புமான விசுவ இந்து பரிஷத்தும் இந்தப் பிரச்சனையில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று தாஸ் எச்சரித்துள்ளார். சாந்த் உச்சதிகார் சமிதி என்ற விசுவ இந்து பரிஷத்தின் சாமியார்கள் பிரிவுதான் ராமர் கோயில் இயக்கதத்தை நடத்தி வருகிறது.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நிர்மோகி அகாரா அமைப்பும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் என்று கூறிய தாஸ், பிரச்சனைக்குரிய இடத்தின் எந்த ஒரு நடவடிக்கைக்கும் நிர்மோகி அகாராவுக்கே உரிமை உண்டு என்று கோருவோம் என்றும் அவர் கூறினார். செப்டம்பர் 30ஆம் தேதியன்று அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், தற்போதைய கோயில் ராம் லாலா விராஜ்மான் அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். அந்த அமைப்புக்காக நீதிமன்றத்தில் வாதாடியவர் ஆர்எஸ்எஸ்சைச் சார்ந்தவர் என்றும் தாஸ் கூறினார்.

பிரச்சனைக்குரிய இந்த இடத்தை உயர் நீதிமன்றம் எந்த தனி நபருக்கோ அல்லது ஆர்எஸ்எஸ்ஸிற்கோ வழங்கவில்லை என்பதை சங்பரிவாரத்திற்கு நான் நினைவூட்ட விரும்புகிறேன் என்றும் தாஸ் கூறினார். மத்திய டுமிற்குக் கீழே உள்ள பகுதிகள் ஹிந்துக்களுக்கு என்றுதான் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

பிரச்சனைக்குரிய நிலத்தின் உரிமை தங்களுக்குக் கிடைத்துவிட்டதாக எண்ணிக் கொள்ளும் இந்துக்களில் மிகச்சிலரை மட்டுமே பிரதிநிதித்துவப் படுத்தும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் விசுவ இந்து பரிஷத் ஆகியவை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மீண்டும் ஒரு முறை நன்றாக ஆய்ந்து கொள்ளட்டும் என்றும் தாஸ் கூறினார்.

ராம் சபுதரா மற்றும் சீதா ரஸோய் ஆகியவை நிர்மோகி அகாராவுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றில் ஒரு பாகம் ராம் லாலாவுக்கும் பொதுவாக இந்துக்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே எங்களிடம் மூன்றில் ஒரு பாகம் உள்ளது. ராம் லாலா விராஜ்மானுக்கு நெருக்கமான இந்துக்கள் நாங்கள்தான் என்பதால், ராமர் கோயிலைக் கட்டும் உரிமை எங்களுக்கே உள்ளது என்றும் தாஸ் கூறியுள்ளார்.

சாந்த் உச்சதிகார் சமிதி மற்றும் ராம் ஜன்மபூமி நியாஸ் கோவா மற்றும் புது டில்லியில் விசுவ இந்து பரிஷத்தால் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டவை. அவை இரண்டும் ஆர்எஸ்எஸ்ஸின் நிழல் அமைப்புகள் என்று குற்றம் சாட்டிய தாஸ், இத்தகைய குழுக்களை நாங்கள் அங்கீகரிப்பதில்லை. அயோத்தியில் உள்ள மக்களுக்கோ, பொதுவாக இந்துக்களுக்கோ அவர்களால் எந்த நன்மையும் விளையப் போவதில்லை என்றும் தாஸ் கூறினார்.

தன்னுடைய நிலையை அகில இந்திய அகாரா பரிஷத்தின் தலைவர் மஹந்த் கியான் தாஸும் ஆதரிப்பதாக பாஸ்கர தாஸ் கூறினார். இந்த வழக்குக்கு சம்பந்தமில்லாதவர்கள், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தவறாக விங்கிக் கொண்டு ராமர் கோயிலை கடத்திச் செல்ல முயல்கின்றனர். அத்தகையோர் தொடக்கம் முதலே இதற்காக முயன்று கொண்டுள்ளனர். தற்போது நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு புதிய வியாக்கியானங்களை அவர்கள் அளிக்கிறார்கள். அவர்கள் வெற்றி பெறமாட்டார்கள் என்றும் பாஸ்கர தாஸ் கூறினார்