தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.3.11

கதறல்கள் அடங்காத மியாகி கடலோரம்

டோக்கியோ,மார்ச்.14:எனது அருகிலேயே இருக்கவேண்டுமென்ற தாயின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டிருந்தால், இவ்வளவுதூரம் துயரத்திற்கு ஆளாக வேண்டியதில்லை. வீடும், குடும்பமும் எல்லாவற்றையும் இழந்துவிட்டு நான் மட்டும் உயிரோடு வாழ்ந்து என்ன பயன்? ஜப்பானின் மியாகியில் ஷின்டோனா கிராமத்தில் ஹரூமிவதனாபெயின் வார்த்தைகள்தாம் இவை.

எச்சரிக்கை தகவல் கிடைத்த உடனேயே, பூகம்பம் ஏற்படுவதற்கு ஏறத்தாழ அரைமணி நேரம் முன்பே கடையை பூட்டிவிட்டு விரைவாக வீடு திரும்பினார் அவர். வீட்டு கதவை தகர்த்தெறிந்த பேரலை வயோதிகரான பெற்றோரை தூக்கி வீசிய காட்சிகளைத்தான் அவரால் பின்னர் காணமுடிந்தது.

ஆயுத இறக்குமதியில் இந்தியாவுக்கு முதலிடம்

புதுடெல்லி,மார்ச்.14:உலகில் அதிக அளவு ஆயுதங்களை இறக்குமதிச் செய்யும் நாடாக இந்தியா மாறியுள்ளது. சீனாவை முந்திய இந்தியா ஆயுத இறக்குமதியில் முதலிடத்தை பிடித்துள்ளது.

ஸ்டாக்ஹோம் இண்டர்நேசனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்ட்யூட்டின் ஆய்வில் இந்தியாவை ஆயுத இறக்குமதியில் முதலிடத்திலிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

2006-ஆம் ஆண்டு முதல் 2010-ஆம் ஆண்டுவரை ஒன்பது சதவீதம் அனைத்து சர்வதேச ஆயுதங்களையும் இந்தியா இறக்குமதிச் செய்துள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது. அதேவேளையில், சீனா ஆறு சதவீதம் மட்டுமே சர்வதேச அளவில் ஆயுதங்களை இறக்குமதிச் செய்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. சீனா
உள்நாட்டில் ஆயுதங்களை தயாரிப்பதாக ரிசர்ச் இன்ஸ்ட்யூட்டின் ஃபெலோ ஸீமன் வெஸ்மான் கூறுகிறார்.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கு: ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை தேடி நேபாளத்தில் என்.ஐ.ஏ

புதுடெல்லி,மார்ச்.13:சம்ஜோத எக்ஸ்பிரஸ் உள்பட இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர்களை தேடி தேசிய புலனாய்வு ஏஜன்சி நேபாளத்திற்கு சென்றுள்ளது.

குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய பயங்கரவாதிகள் சிலர் நேபாளத்தில் தலைமைறைவாகியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில் என்.ஐ.ஏ நேபாளம் சென்றுள்ளது.

லிபியா மோதல்:அல்ஜஸீரா கேமராமேன் பலி

திரிபோலி,மார்ச்.13:கிழக்கு லிபியாவில் எதிர்ப்பாளர்களுக்கு அதிக செல்வாக்கு மிகுந்த நகரமான பெங்காசியில் நடந்த தாக்குதலில் அல்ஜஸீரா தொலைக்காட்சியின் கேமராமேன் கொல்லப்பட்டுள்ளார். அவருடைய பெயர் அலி ஹஸன் அல் ஜபேர்.

பெங்காசிக்கு அருகே ஹவாரி பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. லிபியாவில் அரசுக்கெதிராக போராட்டம் துவங்கி முதல் முறையாக ஒரு வெளிநாட்டு பத்திரிகையாளர் கொல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேட்டோ தாக்குதலை நிறுத்த கர்ஸாயி கோரிக்கை

காபூல்,மார்ச்.13:ஆப்கானில் நேட்டோ படையினர் தனது தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென அந்நாட்டின் அதிபர் ஹமீத் கர்ஸாயி வலியுறுத்தியுள்ளார்.

முதல்முறையாக கடுமையான வார்த்தைகளால் அமெரிக்காவை விமர்சித்துள்ளார் கர்ஸாயி. ஆப்கானிஸ்தானில் பல்வேறு பகுதிகளில் அந்நிய ஆக்கிரமிப்பு அமெரிக்கா மற்றும் கூட்டுப்படையினர் நடத்தும் பயங்கரவாதத் தாக்குதல்கள் ஹமீத் கர்ஸாயியை கோபத்திற்குள்ளாக்கியது.

நேற்று முன்தினம் நேட்டோ நடத்திய விமானத் தாக்குதலில் கர்ஸாயியின் உறவினர் ஒரு கொல்லப்பட்டிருந்தார். நேட்டோ தாக்குதலில் ஒன்பது சிறுவர்கள் கொல்லப்பட்டிருந்ததுக்

தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவை தடை செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவு


மும்பை,மலேகான் குண்டுவெடிப்பு போன்ற நாட்டின் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவை தடை செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "பல்வேறு சட்ட விரோத தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சனாதன் சன்ஸ்தாவை தடை செய்வதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு தொடங்கி இருக்கிறது. இது தொடர்பான திட்டம் மத்திய அரசுக்கு விரைவில் அனுப்பப்படும் என்றார்.

தஹ்ரீர் சதுக்கத்தில் மத நல்லிணக்க பேரணி

கெய்ரோ,மார்ச்.12:எகிப்தில் சமீபத்தில் நடந்த முஸ்லிம்-கிறிஸ்தவ சமூகங்களிடையேயான மோதலைக் கண்டித்து தஹ்ரீர் சதுக்கத்தில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

திருக்குர்ஆனை கையில் ஏந்தியவாறு பேரணியில் அகலந்துக் கொண்டவர்கள் எகிப்தில் அனைத்து மதத்தினரும் ஒன்றே என முழக்கமிட்டனர்.

எகிப்தில் அண்மையில் நடந்த கலவரத்தில் 13 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

செய்தி:மாத்யமம்