தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.5.11

அருணாசல பிரதேச முதல்வர் விபத்தில்


அருணாசல பிரதேச முதல்வர் டோர்ஜிகாண்டு சென்ற ஹெலிகாப்டர் மாயமாகி 30 மணி நேரத்தை கடந்து விட்ட தருணத்தில் எவ்வித சிறிய சமிக்ஞையும் கிடைக்காததால் அவர் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியிருக்கும் என அஞ்சப்படுகிறது. மோசமான வானிலை காரணமாக டோர்ஜிகாண்டுவும் அவரோடு பயணித்த 4 பேரும் விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கக்கூடும் என்ற யூகங்கள் கிளம்பியுள்ளன. நேரம் அதிகரிக்க, அதிகரிக்க மீட்பு படையினர் இந்திய விமானப்படை, மற்றும் ராணுவத்தினர் என 5 ஆயிரத்திற்கும் ‌மேற்பட்டோர் ஹெலிகாப்டரை கண்டுபிடிக்கும் பணியில் பதட்டத்துடன் ஈடுபட்டுள்ளனர். மோசமான வானிலை காரணமாக தேடுதல் வேட்டை பாதிக்கப்பட்டுள்ளது.

பின்லேடனை கொன்ற ‘சிஐஏ’ – சில குறிப்புகள்


அல்கொய்தா தீவரவாதிகளின் தலைவன் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் அமெரிக்க உளவுத்துறை சிஐஏ அதிகாரிகளால் கொல்லப்பட்டுள்ளார்.
சிஐஏ பற்றிய சில குறிப்புகள்:
மத்திய புலனாய்வு நிறுவனம் (சிஐஏ ) என்பது மூத்த அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்களுக்கு தேசிய பாதுகாப்புப் புலனாய்வை வழங்குவதற்காக செயல்பட்டு வரும் அமெரிக்க அரசின் பாதுகாப்புத் துறை புலனாய்வு நிறுவனமாகும். சிஐஏ அமெரிக்க அதிபரின் கட்டுப்பாட்டின் கீழ் இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

ஒசாமா பின்லாடன் சுட்டு கொலை ! அமெரிக்கா தகவல்

வாஷிங்டன், மே.2 -அமெரிக்காவின் சிம்மசொப்பனமாக விளங்கிய ஒசாமா பின் லாடன் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது அமெரிக்க உளவுப்படையினரின் அதிரடி ஆப்ரேஷன் திட்டத்தில் குறி வைத்து காலி செய்யப்பட்டார். அமெரிக்காவின் நீண்டகால ஆசையும், முக்கிய நோக்கமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இவரது பலி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிபர் பராக்ஒபாமா டி.வி.,யில் தோன்றி அறிவித்தார்.
சவுதியில் பிறந்து ஒசாமா பின்லாடன் போராளி அமைப்பான அல்காயிதாவின் தலைவராவார். இவருக்கு வயது 54. ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு போராளி
அமைப்பை உலகமே கண்டு அச்சுறும் வகையில் மிக ரகசியமாக நடத்தி வந்தார்.  இவரது அமைப்பில்

நேட்டோ படைகள் தாக்குதலில் கடாபியின் மகன், பேரப்பிள்ளைகள் பலி!


235892-gadafi
நேட்டோ படைகள், லிபிய அதிபர் கடாபியைக் குறிவைத்து நடத்திய தாக்குதலில், கடாபியின் மகன் மற்றும் பேரக்குழந்தைகள் பலி ஆயினர். எனினும், அதிபர் கடாபி இந்த தாக்குதலில் இருந்து தப்பினார் என்று தகவல்கள் கூறுகின்றன. மேலும், இது நேட்டோ நாடுகளின் போர்க்குற்றம் என்றும் லிபியா தெரிவித்து உள்ளது.

தாக்குதலை மீண்டும் வலுப்படுத்துவோம் தாலிபான் எச்சரிக்கை


taliban
காபூல்:ஆப்கானிஸ்தானில் முக்கிய இடங்களில் மீண்டும் தாக்குதலை வலுப்படுத்தப்போவதாக தாலிபான் போராளிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.’பத்ர்’ என்று பெயரிடப்பட்டுள்ள இத்தாக்குதல் அந்நிய ஆக்கிரமிப்பு படையினரின் அலுவலகங்கள், ராணுவ மையங்கள்,விமானப்படை மையங்கள், ஆயுத கிடங்குகள், மக்கள் திரளும் இடங்கள் ஆகியவற்றின் மீது நடத்தப்படும்.

34,343 பள்ளிகள் ஆர்.எஸ்.எஸி​னால் இந்தியாவில் நடத்தப்படு​கிறது


Ekal_Vidyalaya_Logo
ஏகல் வித்யாலயா என்ற அமைப்பு ஏப்ரல் 2008 கணக்கெடுப்பின் படி 34343 பள்ளிக்கூடங்களை இந்தியா முழுவதும் நடத்திவருகின்றது. இது இந்து பாசிச அமைப்பான ஆர்.எஸ்.எஸ் மற்றும் வி.எச்.பி. தொடர்புடையது.
ஏகல் வித்யாலயா என்பது இந்துச் சிறுவர் சிறுமியருக்கு இந்துமதக் கலாச்சார மரபுகளைக் கற்பிப்பதற்காக, குறிப்பாக பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் ஒரேயோர் ஆசிரியரைக் கொண்டு, குருகுல பாணியில் ஆர்எஸ்எஸ் நடத்தும் தொடக்கநிலை பள்ளிக்கூடங்களாகும்.

எம்.ஐ.எம் தலைவர் அக்பருத்தீன் உவைஸி மீது துப்பாக்கிச்சூடு-கவலைக்கிடம்


Akbar_Owaisi_(6)
ஹைதராபாத்:ஆந்திரபிரதேச மாநிலத்தில் மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான அக்பருத்தீன் உவைஸி மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.இதில் கவலைக்கிடமான அக்பருத்தீன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தனது சட்டமன்றத்தொகுதியில் சந்திரயானா குட்டாவில் ஒரு நிகழ்ச்சியி பங்கேற்றுவிட்டு காரில் திரும்புவேளையில் 4 மர்ம நபர்கள் அக்பருத்தீன் உவைஸியை நோக்கி