தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.2.12

காரைக்கால் உயர்நிலைப்பள்ளிக்கு அப்துஸ் ஸமத் பெயர்-புதுவை முதல்வர் அறிவிப்பு!


காரைக்கால் பெண்கள் அரசினர் உயர்நிலைப் பள்ளிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மறைந்த தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் பெயர் சூட்டப்படும் என புதுவை மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.புதுவை மாநில வக்ஃபு வாரியம் சார்பில் காரைக்காலில் நடைபெற்ற மீலாதுந் நபி விழாவில் ஏ.எம்.எச்.நாஜிம் எம்.எல்.ஏ., விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்த முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இவ்விழாவிற்கு புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் எம்.சந்திரகாசு, காரை மாவட்ட வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப் புக்குழு தலைவர் வி.எம்.சி.சிவக் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.எச்.நாஜிம் தொடக்க

ரஷிய மசூதியில் உலகின் மிகப்பெரிய குரான்

ரஷ்யாவின் கஸன் நகரில் உள்ள கோல்ஷரிப் மசூதியில் உள்ள குரான்தான் உலகத்திலேயே மிகப்பெரிய குரான் என்று உலக கின்னஸ் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
150X200 செ.மீ. நீள அகலமுள்ள இந்த குரான் 632 பக்கங்களைக் கொண்டதாகும். இதன் எடை எவ்வளவுத் தெரியுமா 800 கிலோ.பெரிய படம் உள்ளே

மேலாடையின்றி இந்திய தேசிய கொடியை அவமதித்த 4 உக்ரைன் பெண்கள் கைது

உக்ரைன் உள்பட மத்திய ஆசிய நாடுகளை சேர்ந்த பெண்களுக்கு விசா வழங்க கடும் கட்டுப்பாடுகளை இந்தியா கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் பெண்கள் அரை நிர்வாணமாக வந்து இந்திய தேசிய கொடியை கிழித்து எறிந்தனர். இதில் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிகிறது.பாலியல் தொழிலுக்காக பல பெண்கள் நாடு விட்டு நாடு கடத்தப்படுகின்றனர். சுற்றுலா, வீட்டு வேலைக்காக என்று பல காரணங்களை சொல்லி விசா

மத்தியதரைக்கடல் பகுதியில் ஈரான் கப்பல்கள் விரைகின்றன. போர்ப்பதட்டம் அதிகரிப்பு.


ஈரானின் போர்க் கப்பல்கள், சூயஸ் கால்வாயைக் கடந்து, மத்திய தரைக் கடலுக்கு சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து ஈரான், இஸ்ரேல் இடையேயான பதட்டம் அதிகரித்துள்ளது. இதற்கிடையில், "ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு, மத்திய ஆசியாவில், பனிப் போரை உருவாக்கும்' என பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹாக் எச்சரித்துள்ளார்.இந்தியா, தாய்லாந்தில் சமீபத்தில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதல்கள், ஜார்ஜியாவில் தாக்குதலுக்கான முயற்சி ஆகியவற்றின் பின்னணியில், ஈரான் இருப்பதாக, இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது.

ஈரான்,பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் கூட்டாக அமெரிக்காவிற்கு எச்சரிக்கை.

தங்களது உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வே ண்டாம் என அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடு களுக்கு ஈரான், பாகிஸ்தான், அஃப்கனிஸ்தான் ஆகி ய நாடுகள் கூட்டாக மறைமுக எச்சரிக்கை விடுத்து ள்ளன. ஈரான், பாகிஸ்தான், அஃப்கனிஸ்தான் ஆகிய 3 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற முத்தரப்பு மாநா டு, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வெள் ளிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டின்போது பாகிஸ்தான் அதிபர்

உலகின் மிகப்பெரிய Rope Swing : வீடியோ


உலகின் மிகப்பெரிய Rope Swing சாகசத்தை செய்துள் ளனர் இக்குழுவினர். அதை சுவாரஷ்யமாக படம்பிடி த்து தொகுத்துயூடியூப்பில் தரவேற்றம் செய்ததன் மூ லம் இன்னமும் பிரபலமாகிவிட்டார் டேவின் எனும் இளைஞர். இவருக்கு இது தான் தொழிலாம். யார் யா ர் வித்தியோசமான திரில்லிங் சாகசங்களை செய்ய நினைக்கிறார்களோ, அதை அப்படியே படம்பிடித்து வீடியோ கிளிப் ஆக்கிவிடுகிறார். தயவு செய்து இது போன்ற சாக்சங்களை, முறையான பாதுகாப்பின்றி இவற்றை வீட்டிலோ

புதிய போர்க்குற்ற ஆவணப்படத்தை சனல்-4 அடுத்தமாதம் வெளியிடுகிறது – குழப்பத்தில் சிறிலங்கா!


சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்தை தயாரித்து வெளியிட்ட பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி, சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும் மற்றொரு ஆவணப்படத்தை அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடவுள்ளது.கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே இந்த ஆவணப்படம் வெளியிடப்படவுள்ளது. சனல்-4

சீனாவில் களிமண் கப்பல் மூழ்கி 11 பேர் பலி.


சீனாவின் குவாங்ஸி மாகாணத்திலிருந்து 5 ஆயிரம் டன் களிமண்ணை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த சீன சரக்கு கப்பல், பியூஜியான் மாகாணத்தில், உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணியளவில் கடலில் மூழ்கியது.
இந்த கப்பலில், 11 பேர் பயணம் செய்த நிலையில், பலியான 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டள்ளன. மற்ற 3 பேரது உடல்களை தேடும் பணியை மீட்புப் படையினர் முடுக்கிவிட்டுள்ளதாகமீட்புப்படையினரின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.