தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.11.10

ஈராக் மீதான போர்: ஜார்ஜ் புஷ் வருத்தம்

வாஷிங்டன்: ஈராக் மீது போர் தொடுத்தது தவறு என்று அமெரிக்க முன்னாள் அதிகபர் ஜார்ஜ் புஷ் வருத்தம் தெரிவித்துள்ளார். புஷ், டெசிஷன் பாய்ண்ட்ஸ் என்ற பெயரில் தன்னுடைய சுயசரிததைய புத்தகமாக எழுதி இருக்கிறார். இப்புத்தகம் அடுத்தவாரம் வெளிவர உள்ளது. இதில் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் ஈராக் மீதான போர் குறித்தும் எழுதியுள்ளார். அந்நாட்டின் மீது போர் தொடுத்தது, நான் செய்த தவறு என்று அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நடு வானில் வெடித்த விமான என்ஜின்-சிங்கப்பூரில் தரையிறங்கிய ஆஸி. விமானம்

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இருந்து ஆஸ்திரேலியாவுக்குச் சென்று கொண்டிருந்த ஆஸ்திரேலியாவி்ன் குவாண்டாஸ் நிறுவனத்தின் ஏ-380 ரக ஏர்பஸ் சூப்பர் ஜம்போ விமானத்தின் என்ஜின் நடு வானில் வெடித்துச் சிதறியது. இதையடுத்து அந்த விமானம் மீண்டும் சிங்கப்பூர் [^] விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.​

இதைத் தொடர்ந்து அனைத்து ஏ-380 ரக ஏர்பஸ் விமானங்களையும் ஆஸ்திரேலியா தரையிறக்கிவிட்டது.

நேற்று சிட்னிக்கு புறப்பட்ட இந்த இரட்டை அடுக்கு விமானத்தில் 4 என்ஜின்கள் உள்ளன.​ அதில் 433 பயணிகளும் 26 விமானப் பணியாளர்களும் பயணித்தனர்.

கிளம்பிய 6வது நிமிடத்தல் இந்த விமானம் ஒரு தீவின் மீது பறந்து கொண்டிருந்த போது இடது பக்கத்தில் உள்ள ஒரு என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அந்த என்ஜின் வெடித்தது. இதையடுத்து பைலட் உடனடியாக விமானத்தை தரையிறக்க மீண்டும் சிங்கப்பூருக்கு திருப்பினார்.​

அந்த விமானம் பத்திரமாக சிங்கப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கியது.​ ஒரு என்ஜின் முழுவதும் கருகிவிட்டது. அது வெடித்துச் சிதறியதில் அதன் பல பாகங்களைக் காணவில்லை.

இதற்கிடையே அந்த விமானம் பறந்து சென்ற இந்தோனேசியாவின் பாதம் தீவுப் பகுதியில் வசிக்கும் மக்கள்,​​ விமானம் பறந்தபோது மிகப் பெரிய வெடிச் சத்தம் கேட்டதாகக் கூறியுள்ளனர். பாதம் தீவு சிங்கப்பூருக்கு அருகில் உள்ள இந்தோனேசிய பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

பாதம் தீவில் குடியிருப்பு பகுதிகளிலும் வணிக வளாகங்களிலும் என்ஜின் பாகங்கள் விழுந்துள்ளன.​

இதையடுத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள ஆஸ்திரேலிய அரசு, அந்த அறிக்கை வரும் வரை அனைத்து ஏ-380 ரக விமானங்களையும் பயன்பாட்டில் இருந்து தாற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது.
  Read:  In English 
சிங்கப்பூர் ஏர்லைன்சுக்கு செந்தமான ஏ-380 ரக விமானம் கடந்த 2007ம் ஆண்டும், ஏர் பிரான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஏ-380 ரக விமானம் சென்ற ஆண்டும் நடு வானில் என்ஜின் கோளாறு ஏற்பட்டு தரையிறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விமானத்தில் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவன என்ஜின்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன.