தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.2.11

எகிப்தில் ஆட்சியை பிடிக்க இராணுவ அதிகாரிகள் இடையே போட்டி



கெய்ரோ, பிப். 13 அதிபர் முபாரக் பதவி விலகியதைத் தொடர்ந்து எகிப்தில் ஆட்சியை பிடிக்க 2 இராணுவ அதிகாரிகள் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது.
எகிப்தில் ஆட்சி நடத்தி வந்த அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து 18 நாட்களுக்கு பிறகு முபாரக் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு கெய்ரோவில் இருந்து குடும்பத்துடன் தப்பி சென்று விட்டார். இதையடுத்து எகிப்தில் ஆட்சியை பிடிக்க இராணுவ அதிகாரிகள் பீல்டு மார்ஷல் உசேன் கந்தாவி (75), லெப்டினனட்ட் ஜெனரல் சமி ஹபீஸ் எனான் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது. அவர்களில் பீல்டு மார்ஷல் கந்தாவி முபாரக்கின் ஆதரவாளர் ஆவார். அதே நேரத்தில் எனான் அமெரிக்காவின் ஆதரவாளராக உள்ளார். எனவே இவரிடம் பொறுப்பை ஒப்படைக்க அமெரிக்கா விரும்புகிறது

இனி இஸ்ரேலும், அமெரிக்காவும் இல்லாத மேற்காசியா - அஹ்மத் நஜாத்

டெஹ்ரான்,பிப்.12:அமெரிக்காவும், இஸ்ரேலும் இல்லாத மேற்காசியா எதிர்காலத்தில் உருவாகும் என ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் அறிவித்துள்ளார்.

'எத்தனை தந்திரங்களை கையாண்டாலும் மக்கள் புரட்சியின் மூலமாக அமெரிக்காவும், சியானிஷ நாடும் இல்லாத ஒரு மேற்காசியாவை உருவாக்கலாம் என்பதை உங்களால் உறுதிப்படுத்த முடியும்' - ஈரான் இஸ்லாமிய புரட்சியின் 32-வது நினைவு தினத்தையொட்டி டெஹ்ரானின் ஆசாத்(சுதந்திர) சதுக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையில் அஹ்மத் நஜாத் தெரிவித்தார்.

'இப்பிராந்தியத்தில் எகிப்து மற்றும் துனீசியாவின் விவகாரங்களில் வெளிநாட்டு சக்திகள் தலையிடக் கூடாது. ஆஃப்கானில் இவர்கள் என்னச் செய்தார்கள்? இப்பிராந்தியத்தில் ஏன் இவர்கள் ராணுவ தளங்களை அமைக்கின்றார்கள்?' -நஜாத் கேட்கிறார்.

இரண்டு நாடுகள் என்று கூறும் பொழுதே இஸ்ரேலின் மேலாதிக்கத்திற்காக அமெரிக்கா செயல்படுவதாக நஜாத் குற்றஞ்சாட்டினார்.

எகிப்திய புரட்சியை வாழ்த்திய நஜாத், எச்சரிக்கையோடு இருக்குமாறு அந்நாட்டு மக்களை கேட்டுக்கொண்டார். சுதந்திரத்தை பெறுவது உங்களுடைய உரிமையாகும். உங்களை ஆட்சிபுரிபவர் யார்? என்பதை தீர்மானிக்க வேண்டியதும் நீங்களே!

சுதந்திர நாட்டைக் குறித்தும், உலக நாடுகளைக் குறித்தும் கருத்துத் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. ஊழல் அரசாங்கத்தை எதிர்த்து அஞ்சாமல் உறுதியுடன் நில்லுங்கள்.வெற்றி உங்களின் அருகில் உள்ளது' என நஜாத் எழுச்சிப் போராட்டத்தில் கலந்துக் கொண்ட எகிப்திய மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


பாக்கிஸ்தானில் இருவரைச் சுட்டுக்கொன்ற அமெரிக்க தூதரக அதிகாரிக்கு சிறை

US - Pak உறவில் விரிசல்.
பாகிஸ்தானின் லாகூர் நகரில், கடந்த மாதம் 27ம் தேதி அமெரிக்க தூதரக அதிகாரிகள் சென்ற காரை வழிமறித்து சிலர் கொள்ளையடிக்க முயன்றனர். அவர்களை தூதரக அதிகாரி ரேமாண்ட் டேவிஸ் சுட்டுக்கொன்றார். இதையடுத்து பாகிஸ்தானிய போலீசார் ரேமாண்ட் டேவிசை கைதுசெய்துள்ளனர். தற்காப்புக்காக தான் டேவிஸ் இவர்களை சுட்டுக்கொன்றார், எனவே, அவரை விடுவிக்க வேண்டும், என அமெரிக்கா வற்புறுத்தி வருகிறது. 

'இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கோர்ட்டில் உள்ளதால், டேவிசை விடுவிப்பது கோர்ட்டின் முடிவில் தான் உள்ளது'என, அதிபர் சர்தாரி தெரிவித்துள்ளார். இதனால், அமெரிக்க - பாகிஸ்தானிய உறவில் நெருடல் ஏற்பட்டுள்ளது. 

இதற்கிடையே ரேமாண்ட் டேவிசால் சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டு பேர், ஐ.எஸ்.ஐ., உளவாளிகள் என பாகிஸ்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டு பேரின் மொபைல்போன் கேமராவில் டேவிசின் நடமாட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது, என பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த கருத்தை அமெரிக்கா ஏற்க மறுத்துள்ளது. தூதரக அதிகாரி டேவிசை விடுவிக்காவிட்டால், பாகிஸ்தானில் உள்ள மூன்று தூதரக அலுவலகங்களை மூடப் போவதாக அமெரிக்கா, மறைமுகமாக எச்சரித்துள்ளது.

ரேமண்ட் கைது செய்யப்பட்டதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ள அ மெரிக்கா வெளிநாட்டின் தூதரக அதிகாரி என்ற சலுகை அடிப்படையில் உடனே அவரை விடுதலை செய்யும்படி வலியுறுத்திவருகின்றது. ஆனால் பாகிஸ்தான் பணியவில்லை. அமெரிக்க தூதரக அதிகாரியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்ததும் உள்ளது. 

இது அமெரிக்காவுக்கு ஆத்திரத்தையும், எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானுடனான தூதரக உறவை துண்டிக்க முடிவு செய்துள்ளது. அதன் முதல் கட்டமாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டாம் டோனிலான் பாகிஸ்தான் தூதர் ஹூ சைன் ஹக்கானியை வெள்ளை மாளிகைக்கு அழைத்து பேசினார்.

அப்போது எங்கள் தூதரக அதிகாரி ரேமண்ட்டை விடுதலை செய்யாவிட்டால் உங்களை (ஹக்கானியை) அமெரிக்காவில் இருந்து வெளியேற்றுவோம். அடுத்த மாதம் (மார்ச்) பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி அமெரிக்கா வருகை தர உள்ளார். அவரது வருகையையும் ரத்து செய்வோம் என மிரட்டல் விடுத்தார்.

இந்த தகவலை அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகை தெரிவித்துள்ளது. ஆனால் இதை ஹக்கானி மறுத்துள்ளார். அமெரிக்க அதிகாரிகள் தன்னிடம் இது போன்று மிரட்டல் விடுக்கவில்லை என்று கூறியுள்ளார். அமெரிக்காவின் மிரட்டலுடனான கோரிக்கையை பாகிஸ்தான் ஏற்கவில்லை.

லாகூர் மாடல் டவுன் பகுதியில் உள்ள குற்றவியல் மாஜிஸ்திரேட்டு அமெரிகக் தூதரக அதிகாரி ரேமண்ட் டேவிஸ் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீண்டும் 14 நாள் காவலில் வைக்கப்பட்டார்

பாக் நீதிமன்றம் :முஷாரஃபிற்கு பிடிவாரண்ட்

இஸ்லாமாபாத்,பிப்.12:பெனாசிர் பூட்டோ கொலைவழக்கில் தொடர்புடையவர் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரஃபிற்கு ஜாமீன் இல்லாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றம் இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளது. ஃபெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜன்சி சமர்ப்பித்த விரிவான குற்றப்பத்திரிகையைத் தொடர்ந்து இந்நடவடிக்கையை நீதிமன்றம் மேற்கொண்டது.

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோவுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை என முஷாரஃப் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. 2007-ஆம் ஆண்டு ராவல்பிண்டியில் நடந்த தேர்தல் பிரச்சார பேரணியின் போது பெனாசிர் கொல்லப்பட்டார். 2009-ஆம் ஆண்டுட் முதல் முஷாரஃப் பிரிட்டனில் வசித்துவருகிறார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


யாசின் மாலிக் மீது பா.ஜனதா குண்டர்கள் ஷூ வீச்சு


அஜ்மீர், பிப். 12 காஷ்மீர் விடுதலை முன்னணி" தலைவர் யாசின் மாலிக் மீது பா.ஜனதா தொண்டர் ஒருவர் ஷூவை வீசினார்.
காஷ்மீரில் இயங்கும் பிரிவினைவாத இயக்கங்களில் ஒன்றான "காஷ்மீர் விடுதலை முன்னணி" தலைவர் யாசின் மாலிக் ராஜஸ்தான் மாநிலத்தின் புனித நகரமான அஜ்மீர் சென்றுள்ளார். அங்குள்ள தர்காவில் பிரார்த்தனை நடத்திய அவர் ஒரு ஓட்டலில் தங்கியுள்ளார். அவரது வருகைக்கு பா.ஜனதா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டம் நடத்தினார்கள். எம்.எல்.ஏ. வாசுதேவ் தேவ்னானி தலைமையில் கூடிய தொண்டர்கள் மாலிக்கின் கொடும்பாவியை எரித்தனர். அப்போது ஓட்டல் மாடியில் நின்று இதை பார்த்த மாலிக் மீது ஒரு தொண்டர் ஷூவை வீசினார். ஆனால் அது அவர் மீது படவில்லை. மேலும் மாலிக்குக்கு எதிராக அவர்கள் கோசமும் போட்டனர்.
காஷ்மீரில் நமது தேசிய கொடியை ஏற்ற அனுமதிக்காத பிரிவினைவாதி ஒருவர் இந்த நாட்டில் சுதந்திரமாக நடமாட அனுமதிக்க முடியாது. அவரை உடனடியாக அஜ்மீரில் இருந்து வெளியேற்றுங்கள் என்று ஒரு மனுவை பா.ஜனதா கட்சியினர் கலெக்டரிடம் கொடுத்தனர்

கைது செய்யப்பட்ட அதிகாரியை விடுவிக்காவிட்டால் தூதரை வெளியேற்றுவோம்: அமெரிக்கா

பாகிஸ்தானில் போலீசாரால் கைது செய்யப்பட்ட அமெரிக்க அதிகாரி ரேமாண்ட் டேவிஸ் (36) உடனடியாக விடுவிக்கப்படாவிட்டால், பாகிஸ்தான் தூதரை வாசிங்டனிலிருந்து வெளியேற்றுவோம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில், டேவிசை 14 நாள் காவலில் வைக்க பாகிஸ்தான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருப்பதால், இருதரப்பு உறவில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.