தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.5.11

நீதிக்குப் புறம்பான தமிழினப் படுகொலைகள், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் காணொளிகளாக காண்பிக்கப்படவுள்ளன!



சரணடைந்த தமிழ் மக்களை சிறீலங்கா இராணுவத்தினர் கோரமாக படுகொலைசெய்யும் காட்சிகள் அடங்கிய காணொளி நாளை முப்பதாம் திகதி ஆரம்பமாகும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் காண்பிக்கப்படவுள்ளதாக ஐ.நா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நீதிக்குப் புறம்பான படுகொலைகள்

அமைச்சர் மரியம் பிச்சையின் மர்ம மரணம்...அவிழும் மர்ம முடிச்சுகள்.. ஜூ வி கட்டுரை


மைச்சர் மரியம்பிச்சையின் மரணத்துக்குக் காரணமான லாரி எங்கே?’- இந்த ஒற்றைக் கேள்விக்கு விடை கிடைத்தால்தான், அவரது மரணத்தின் மர்ம முடிச்சுகள் அவிழும். ஆரம்பத்தில், விபத்துதான் என்று அடித்துச் சொல்லிய பலரும், 'அமைச்சர் மரணத்தில் மர்மம் இருக்கலாம்’ என்று மாற்றிச் சொல்வதற்குக் காரணம்... விபத்துக்கான லாரி இன்னமும் சிக்கவில்லை! 

 சி பி - அப்போ லாரி சிக்கிடுச்சுன்னா மரணத்துல மர்மம் இல்லைன்னு முடிவுக்கு வந்துடுவீங்களா?

பிரதமர் நல்லவர், ரிமோர்ட் கண்ட்ரோல் போல அவரை இயக்குபவர் தான் பிரச்சினை : அனா ஹஸாரே


பிரதமர் மன்மோகன் சிங் நல்ல மனிதனர். ஆனால் அவரை ரிமோர்ட் கண்ட்ரோல் போல இயக்குபவர்கள் தான் பிரச்சினைக்குரியவர்கள் என லோக்பால் சட்ட மசோதா குழுவின் தலைவர்களில் ஒருவரும், காந்தியவாதியுமான அனா ஹசாரே குற்றம் சாட்டியுள்ளார்.
பெங்களூரில் நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு மாநாடு ஒன்றில் கலந்துகொண்ட போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். இம்மாநாட்டை ஊழலுக்கு எதிரான இந்திய அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

முதல்வரா இருந்தவர் உறுப்பினர் ஆகிறார்? இதுதான் காலச்சக்கரமோ!?


சென்னை, மே 30: முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி, திங்கள்கிழமை சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவி ஏற்கிறார். திருவாரூர் தொகுதியில் இருந்து சட்டப் பேரவைக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி ஏற்ற மே 23-ம் தேதி கருணாநிதி தில்லியில் இருந்தார். அவரும், முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் அன்று பதவி ஏற்கவில்லை. இவர்கள் தவிர அதிமுக தரப்பில் சிவபதி, மனோகரன் ஆகியோர்

மாநில புதிய தேர்தல் ஆணையாளராக சோ.அய்யர் நியமனம்!


தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையாளராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சோ.அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக ஆட்சியின் போது மாநில தேர்தல் ஆணையாளராக நியமிக்கப்பட்ட சையத் முனீர் ஹோடா, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, மே.27ம் திகதி முதல் அடுத்து வரும் இரண்டு வருடங்களுக்கு சோ.அய்யர் தேர்தல்

ஆப்கானில் நேட்டோ படைகளது இராணுவ கூட்டத்தில் தற்கொலை குண்டு தாக்குதல்!


ஆப்கானிஸ்தானில் பொலிஸ் அதிகாரியின் சீருடையில் தலிபான் தீவிரவாதி ஒருவன் நடத்திய தற்கொலை குண்டு தாக்குதலில், இராணுவ உயர் அதிகாரிகள்
இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், ஜேர்மனிய ஜெனரல் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.