தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.3.11

இன்று பூமிதினம் (‘எர்த் அவர்’)


உலகில் சுற்றுசூழல் மீதான அத்துமீறல் வரம்பு மீறிய சூழலில், இயற்கை பேரிடர்கள் தொடர் கதையாகும் வேளையில்  128 உலக நாடுகள் மரணித்துக் கொண்டிருக்கும் பூமிக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இன்று ‘பூமி தினம்’(எர்த் அவர்) கடைப்பிடிக்கப்பிடிக்கின்றன.
இதையொட்டி இன்று இரவு 8.30 மணி முதல் ஒரு மணி நேரம் மின் விளக்குகள் மற்றும் மின் சாதனங்களின் இயக்கத்தை நிறுத்தி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வச்ச ஐஸ்லே ஜனி புரந்திடுச்சி கொஞ்சம் அடக்கிவாசி !! முடியல

சென்னை, மார்ச்.26-தமிழக பா.ஜ.க. தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. பா.ஜ.க. முன்னாள் அகில இந்திய தலைவர் பங்காரு லட்சுமணன் இந்த அறிக்கையை வெளியிட்டார். அதை விவசாயி, மீனவர், தாழ்த்தப்பட்டோர் ஆகிய 3 பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர். மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பற்றி கூறியதாவது:-

தமிழ்நாட்டில் 44 ஆண்டுகளாக நடந்து வரும் இருண்ட ஆட்சியை அகற்றி

சிரியாவில் துப்பாக்கி சூட்டில் 100 பேர் பலி (வீடியோ)


நிகோசியா,  சிரியாவில் போராட்டக்காரர்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் 100 பேர் பலியானார்கள். (வீடியோ )
சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கர் நகரில் இருந்து 120 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் "தரா" என்ற ஊரில், ஏறத்தாழ 75 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். அவர்களில் ஒரு பகுதியினர் அரசை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 100க்கும்

கடாபியின் எண்ணெய்ப் பணம் பறிமுதலாகிறது


நேற்று புறுக்சல்சில் கூடிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதிநிதிகள் சபை லிபிய சர்வாதிகாரி கேணல் கடாபியின் எண்ணெய் விற்ற பணத்தை பறிமுதல் செய்வதாக தெரிவித்தது. கடாபியுடன் தொடர்பு கொண்டு, எண்ணெய், காஸ் போன்றவற்றை யாரெல்லாம் வாங்கினார்கள் என்ற நெடிய பட்டியல் ஒன்றையும் அது வெளியிட்டுள்ளது. இதில் தனி நபர்கள், தனியார் நிறுவனங்கள் என்று பலருடைய பெயர்களையும் தந்துள்ளது. இவர்கள் அனைவரும் கடாபிக்கு வழங்க

ஜெ. ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு!!


மார்ச் 25, திருச்சி: அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் மரியம் பிச்சையை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், தி.மு.க., அரசு முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியிருந்தாலும் அது முறையாக செயல்படுத்தப்படவில்லை.

நேட்டோ சுழற்றியுள்ள நாணயத்தின் இரண்டு பக்கங்களும் வானில் பளபளக்கின்றன..


லிபியாவிற்குள் மேலை நாடுகளின் தரைப்படைகள் ஆங்காங்கு இறங்கிவிட்டனஎன்ற செய்தியை அறிந்து கொண்டு அப்பால் செல்வது நல்லது..
.
.
.
.
.
.
.
.
.
லிபியப் போர் ரஸ்யாவில் பிரதமர் – அதிபர் இருவருக்கும் இடையே மோதலை

பிரபாகரனைக் காப்பாற்ற அமெரிக்க முயற்சி செய்தது - இலங்கை அமைச்சர்


விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைக் காப்பற்றுவதற்கு
அமெரிக்க முன்றது என இலங்கை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் இது தொடர்பில் விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய  கடற்படையை இலங்கைக்கு

ராமதாஸ் எப்பொழுது முஸ்லிம்களுக்கு நல்லது செய்தார்?


பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ளார். தேர்தலுக்கு தேர்தல் கூடு விட்டு கூடு தாவும் ராமதாசுக்கு இம்முறை தி.மு.க 31 இடங்களை ஒதுக்கியது. இத்தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட சூழலில், ஒரு முஸ்லிம் வேட்பாளரைக்கூட ராமதாஸ் அறிவிக்கவில்லை எனக்கூறி அவரது கட்சியைச் சார்ந்த முஸ்லிம்கள் சிலரும், காயிதேமில்லத் பேரவையைச் சார்ந்தவர்களும் ராமதாஸின் உருவப் பொம்மையை நெல்லையில் எரித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

லிபியா சிக்கலை தீர்க்க லண்டனில் சர்வதேச மாநாடு


லிபியா மீது நடாத்தப்படும் தாக்குதல்களுக்கு தலைமை தாங்க முடியாத அவலத்தில் தடுமாறிய நேட்டோ ஒருவாறாக நேற்றிரவு தன்னை நிலைப்படுத்திக் கொண்டது. துருக்கியின் கடும் எதிர்ப்பு, வெளிநடப்பு போன்ற நெருக்கடிகளுக்கு பின்னர் நேற்றிரவு ஓர் உடன்பாட்டை எட்டித் தொட்டுள்ளது.
இதன்படி ஐ.நாவால் விதிக்கப்பட்ட லிபியாவிற்கு எதிரான விமானப்பறப்பு தடை வலயத்தை நேட்டோ விமானப்படைகள் கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்படுகிறது.

பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு


மதுரை, மார்ச். 23- மதுரை மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற கல்லூரி மாணவர்களுக்கு, தேர்தல் கமிசன் அழைப்பு விடுத்து உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 13-ந் தேதி நடைபெற உள்ளதால், அதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் கமிசன் தீவிரமாக இறங்கி உள்ளது. இந்த நிலையில் தற்போது புதிய உத்தரவாக தமிழ்நாட்டில் முதன் முறையாக கல்லூரி மாணவர்களையும் தேர்தல் பணியில் ஈடுபட தேர்தல் கமிசன் அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பதற்றமான வாக்குச்சாவடிகளிலும் லேப்-டாப் கம்ப்யூட்டருடன் இணைந்த கண்காணிப்பு