தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.8.11

அன்னா ஹஸாரே குழுவில் பிளவு


35KR6IO1_aug16v8
புதுடெல்லி:ஜனலோக்பால் மசோதாவை இன்று மக்களவையில் விவாதிக்க இருக்கும் வேளையில் அன்னா ஹஸாரே குழுவில் பிளவு ஏற்பட்டுள்ளது.
அன்னா ஹஸாரேவின் உடனிருப்பவர்கள் அவரை துஷ்பிரயோகம் செய்வதாக சுட்டிக்காட்டி ஹஸாரே குழுவில் முக்கிய நபரும், கர்நாடாக லோகாயுக்தாவின் முன்னாள் தலைவருமான நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூறியுள்ளார்.

ஹஜ்:இந்தியாவுக்கான பங்கு ஒதுக்கீடு(quota) 10 ஆயிரம் அதிகரிப்பு


haj_devil4
புதுடெல்லி:இந்தியாவுக்கான ஹஜ் பங்கு ஒதுக்கீட்டை சவூதி அரேபியா அதிகரித்துள்ளது. 10 ஆயிரம் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இத்துடன் ஹஜ்ஜுக்கான இந்தியாவுக்குரிய ஒதுக்கீடு 1,70,491 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,60,491 இடங்களே ஒதுக்கப்பட்டிருந்தன.
புதிதாக கிடைத்துள்ள ஒதுக்கீட்டு இடங்களை மத்திய ஹஜ் கமிட்டி மாநில ஹஜ் கமிட்டிகளுக்கு பங்கீடுச்செய்யும்.

துபாயில் சட்டவிரோதமாக போராட்டம் நடத்திய இந்தியர்களுக்கு ஜாமீன் மறுப்பு


DPPSMS_thumb2
துபாய்:இந்தியாவில் ஊழலுக்கு எதிராக போராடுவதாக கூறி களமிறங்கியிருக்கும் அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் மாகாணமான துபாயில் அதிகாரிகளின் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக பேரணி நடத்திய இந்தியர்கள் எட்டு பேர் கைதுச் செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கான ஜாமீன் மனுவை துபாய் பப்ளிக் ப்ராஸிக்யூசன் நிராகரித்துவிட்டது.

முஸ்லிம்களை கண்காணிக்க நியூயார் போலீஸிற்கு உதவிய சி.ஐ.ஏ


ebm_78004
வாஷிங்டன்:அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லிம்களை கண்காணிக்க நியூயார்க் போலீசுக்கு அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ உதவியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க குடிமகன்களில் ஒரு பகுதியினரை கண்காணிக்க சி.ஐ.ஏ முயன்றதாக அசோசியேட் ப்ரஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.
இச்சம்பவம் சர்ச்சையை கிளப்பியதையடுத்து

அன்னா ஹசாரே - காந்தி தாத்தாவா அல்லது பாசிச தாதாவா


ஜன் லோக்பால் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வரும் அன்னா ஹசாரேவின் போராட்டத்தை வெள்ளையர்களை விரட்ட மகாத்மா காந்தியின் தலைமையில் நடந்த முதல் சுதந்திரப் போருக்கு ஒப்பானதாக ஊடகங்கள் சித்தரிக்கின்றன.

தற்போது இந்தியாவின் தாத்தாவாக, காந்தியின் அவதாரமாக ஊடகங்களால் சித்தரிக்கப்படும் அன்னா ஹசாரேவின் தலைமையில் நடக்கும் போராட்டத்தை இரண்டாம் சுதந்திர போராட்டமாக மீடியா

மூவருக்கு செப். 9ந்தேதி தூக்கு தண்டனை: போராட்டங்கள் தீவிரம்


ராஜிவ் கொலையாளிகள் 3 பேரையும் செப்டம்பர் 9ம் தேதி தூக்கில் இடுவதற்கான உத்தரவு சிறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைதாகி தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி குடியரசுத் தலைவர் பிரதிபா

ஜன் லோக்பால் மசோதாவில் பல குறைகள் அத்வானி பல்டி


அன்னா ஹசாரே குழு உருவாக்கியுள்ள ஜன் லோக்பால் மசோதாவில் நிறைய குறைபாடுகள் உள்ளதால் அதை அதே வடிவிலேயே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவது கஷ்டம் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி இன்று கூறினார்.
முன்னதாக நேற்று அன்னா ஹசாரேவின் ஜன் லோக்பால் மசோதாவை முழுமையாக