தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.9.10

லைலத்துல் கத்ரின் புண்ணியந்தேடி மஸ்ஜிதுல் ஹரமில் 30 லட்சம் முஸ்லிம்கள்

மக்கா,செப்.8:ஆயிரம் மாதங்களை விட புண்ணியமான ரமலானின் லைலத்துல் கத்ர் இரவின் பலனை அடைவதற்காக நபி(ஸல்...)அவர்கள் அவ்விரவை தேட கட்டளையிட்ட ரமலானின் கடைசி ஒற்றைப்படை இரவுகளில் ஒன்றான 27 ஆம் இரவு மஸ்ஜிதுல் ஹரமில் 30 லட்சம் முஸ்லிம்கள் வருகை புரிந்திரிந்தனர்.
தராவீஹ்,கியாமுல் லைல் (இரவுத்தொழுகை) ஆகிய வணக்கங்களுக்காக உம்ராவிற்கு வந்த முஸ்லிம்களின்பெரும் எண்ணிக்கையினால் ஹரமின் உள்புறம் மூச்சுத் திணறியது.

மஸ்ஜிதுல் ஹரமிற்கு வருகைத் தந்த முஸ்லிம்களை வரவேற்க சவூதி அரசு எல்லாவித வசதிகளையும் ஏற்படுத்தியிருந்தது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க 4500 போலீஸ்காரர்களும், மஸ்ஜிதுல் ஹரமையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக பாதுகாக்க பத்தாயிரம் தொழிலாளர்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

புண்ணிய யாஸ்திரிகர்களுக்கு குடிநீருக்காக 20 ஆயிரம் வாட்டர் கூலர்களும் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளன. பெரும் மக்கள்திரள் மஸ்ஜிதுல் ஹரமில் கூடியபொழுதும் எவ்வித போக்குவரத்து இடைஞ்சலோ விபத்துக்களோ பதிவுச் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மக்காவிலுள்ள அனைத்து ஹோட்டல்களும், அபார்ட்மெண்டுகளும் புண்ணிய யாஸ்திரீகர்களால் நிரம்பி வழிந்தன. மஸ்ஜிதின்உள்புறத்தில் இடமில்லாததால் முஸல்லாக்கள் (தொழுகை விரிப்புகள்) வாங்குபவர்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில்அதிகரித்திருந்தது. முஸல்லாக்களின் தேவை அதிகமானதால் அதன் விலையும் 15 ரியாலிலிருந்து 20 ரியாலாக உயர்ந்தது.

மதீனாவில் மஸ்ஜிதுல் நபவியிலும் தராவீஹ்,கியாமுல் லைல் தொழுகைகளுக்காக பெரும் மக்கள் கூட்டம் காணப்பட்டது. இதில் பெரும்பாலும் தொழிலாளர்களும், வெளிநாடுகளை சார்ந்த புண்ணிய யாத்ரீகர்களுமாவர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கரூரில் 4 சர்ச்சுகள் மீது தாக்குதல் -இந்து முன்னணி மீது புகார்

கரூர்: கரூர் மாவட்டத்தில் நான்கு சர்ச்சுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்து முன்னணியினரே இதற்குக் காரணம் என புகார் கூறப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் புகளூர் பெந்தகொஸ்தே சபை, சிஎஸ்ஐ திருச்சபை, பைபாஸ் சாலை ஆர்.சி. சர்ச், இசிஐ சர்ச் ஆகியவற்றின் முன் பகுதியில் இருந்த சிலைகள், உண்டியல்கள், கண்ணாடி ஜன்னல்கள், கதவுகளை ஒரு கும்பல்
தாக்கி சேதப்படுத்தியுள்ளது.

அதேபோல,வேலாயுதம்பாளையம் எம்ஜிஆர் நகரில் உள்ள ஏஜி சர்ச்சின் முன்பகுதியில் மலம் போய் அசிங்கப்படுத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்து முன்னணியினரே இதற்குக் காரணம் என கிறிஸ்தவ அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

இந்த தாக்குதல் சம்பவங்கள் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

அல்குர்ஆன் பிரதியை எரிக்கும் திட்டம்: அமெரிக்க ராணுவத்தினருக்கு அச்சுறுத்தல்

காபூல்,செப்.9:அல்குர்ஆனின் பிரதியை எரிக்க திட்டமிட்டிருக்கும் அமெரிக்க சர்ச்சின் தீர்மானம் ஆப்கானில் அமெரிக்க ராணுவத்தினருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என ஆப்கானில் அமெரிக்க ராணுவ கமாண்டர் ஜெனரல் டேவிட்
பெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

காபூலில் மட்டுமல்ல உலகின் அனைத்துப் பகுதிகளிலும் அமெரிக்காவிற்கு சவாலை உருவாக்கும் என பெட்ரோஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செப்டம்பர் 11 தாக்குதல் நினைவு தினத்தில் அல்குர்ஆனின் பிரதியை எரிக்கப்போவதாக ஃப்ளோரிடாவில் டோவ் வேர்ல்டு அவ்ட்ரீச் செண்டர் தலைவன் பாஸ்டர் டெரி ஜோன்ஸ் அறிவித்திருந்தான்.

அல்குர்ஆனின் பிரதியை எரிப்பதுக் குறித்து அதிக அளவிலான பிரச்சாரத்தை இவன் இணையதளத்தில் நடத்தியிருந்தான். இதற்கெதிராக ஆஃப்கானின் தலைநகரான காபூலில் நூற்றுக்கணக்கானோர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

காபூலில் அமெரிக்க தூதரகமும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. "இது ராணுவத்தை ஆபத்தில் சிக்கவைக்கும். இஸ்லாமிய சமூகத்துடன் நெருக்கத்தை ஏற்படுத்த முயற்சி நடந்துக் கொண்டிருக்கும் வேளையில் இச்செயல் சிக்கலை ஏற்படுத்தும்." என அமெரிக்க ஊடகங்களிடம் பெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

குர்ஆன் முஸ்லிம்களின் புனித வேதமாகும். அதன் பிரதியை எவரேனும் அழிப்பேன் என பிரகடனப்படுத்தினால் அது முஸ்லிம்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தும் என ஆஃப்கானில் நேட்டோ பயிற்சிப் பிரிவு தலைவர் லெஃப்டினண்ட் ஜெனரல் வில்லியம் காட்வெல் கூறியுள்ளார்.

காபூலில் எதிர்ப்புப் போராட்டம் நடத்திய 500 பேர் இஸ்லாம் நீண்டநாள் வாழட்டும்! அமெரிக்கா அழியட்டும்! உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியதுடன் ஜோன்ஸின் உருவப்படத்தை கொளுத்தினர்.

செப்டம்பர் 11 தாக்குதல் நடைபெற்ற இடத்தில் மஸ்ஜித் கட்டுவது அமெரிக்காவில் சர்சையை கிளப்பிக் கொண்டிருக்கும் சூழலில் இஸ்லாத்திற்கெதிரான புதிய முயற்சி நடந்துக்கொண்டிருக்கிறது.

பெட்ரோஸின் அறிக்கைக்கு பதிலளிக்கையில் ஜோன்ஸ் கூறியதாவது: "இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளுக்கு நாம் தெளிவான செய்தியை கொடுத்துவருகிறோம். அவர்களின் மிரட்டல்களுக்கு கீழ்படியக்கூடாது." என வால்ஸ்ட்ரீட் ஜெர்னல் என்ற பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளான்.

ஏற்கனவே அமெரிக்க ராணுவத்தினர் குர்ஆனை அவமதித்தது ஈராக்கிலும், ஆப்கானிலும் கடும் எதிர்ப்பைக் கிளப்பியிருந்தது.

இதுத்தொடர்பாக நடைபெற்ற தாக்குதல்களில் ராணுவத்தினர் உள்பட ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

செய்தி:தேஜஸ் ம