தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.11.10

இந்திய தூதர்களை உளவு பார்க்க உத்தரவிட்ட ஹில்லாரி-விக்கிலீக்ஸ்


வாஷிங்டன் ஐ.நா. நிரந்தர உறுப்பினர் பதவியைப் பெற இந்தியா தீவிரமாக இருப்பதால், அதுதொடர்பாக ஐ.நா.வில் என்னவிதமான முயற்சிகளை இந்தியா மேற்கொள்கிறது என்பது குறித்து உளவு பார்க்குமாறு தனது தூதர்களை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் கேட்டுக் கொண்டதாக விக்கிலீக்ஸ் குண்டைப் போட்டுள்ளது.

அமெரிக்காவே ஆடிப் போயிருக்கிறது, விக்கிலீக்ஸ் விவகாரத்தில். ஒவ்வொரு நாட்டுக்கும் 'விக்கிலீக்ஸ்' என்னவேண்டுமானாலும் சொல்லும்... தயவு செய்து நம்பிவிடாதீர்கள்', என்கிற ரீதியில் கோரிக்கை விடுத்துவருகிறது அந்த நாடு.

ஆனால் அமெரிக்கா உலக நாடுகள் ஒவ்வொன்றுடனும் டபுள் டபுளாக கொள்கைகளை வகுத்து செயல்பட்டு வந்த பச்சோந்தித்தனம் தற்போது படிப்படியாக அம்பலமாகி வருகிறது. அமெரிக்காவை நம்பவே கூடாது என்ற கருத்துக்கு ஆணித்தரமாக ஆதாரம் தருவது போல உள்ளது இந்த கசிவுகள்.

என்ன அது விக்கிலீக்ஸ்?

2006-ம் ஆண்டு ஜூலியன் அஸாங்கே என்ற ஆஸ்திரேலியரால் தொடங்கப்பட்டது விக்கிலீக்ஸ். இது ஒரு லாப நோக்கற்ற இணையதளம். இங்கே உலகின் அத்தனை அரசியல், வர்த்தக சாம்ராஜ்யங்களின் ரகசியங்களும் சேகரித்து பின் வெளிப்படுத்தப்படும்.

சர்வதேச அளவில் பத்திரிகையாளர்கள், புலனாய்வாளர்களுக்கு மிகப் பெரிய ஆதாரதளமாக விக்கிலீக்ஸ் மாறி வருகிறது. மேலும் சமூகத்தில் வெளிப்படைத் தன்மை நிலவ வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என அறிவித்துள்ளது விக்கிலீக்ஸ்.

இந்த தளம், கடந்த 5 ஆண்டுகளாக, உலகமெங்கும் உள்ள அமெரிக்கா தூதரகங்கள், துணைத் தூதரகங்கள் வாஷிங்டனுக்கு அனுப்பி வைத்த முக்கிய ரகசிய ஆவணங்களை, அதிகாரிகள் மூலம் பெற்று சேகரித்தது.

அப்படி சேகரித்த லட்சக்கணக்கான சர்வதேச அரசியல் ஆவணங்களை இப்போது தொகுதி தொகுதியாக வெளியிட்டு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை அதிர வைத்துள்ளது விக்கிலீக்ஸ்.

அமெரிக்கா ஒவ்வொரு நாட்டிலும் வெறும் தூதரகங்களை மட்டும் வைத்திருக்கவில்லை. அதிகாரப்பூர்வமாக உளவுத் துறையையே நடத்தி வருகிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது விக்கிலீக்ஸ்.

கடந்த 2009-ல் முதல் முறையாக அமெரிக்கா தொடர்பான பல்வேறு இராணுவ ரகசியங்களையும், ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் விவகாரங்களில் அந்நாடு மேற்கொண்ட முடிவுகள் தொடர்பாகவும் பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது விக்கிலீக்ஸ்.

பின்னர் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22-ம் தேதி The Iraq War Logs என்ற தலைப்பில் 391,832 ஆவணங்களை வெளியிட்டு அதிர வைத்தது. உலகில் வெளியான மிகப் பெரிய ரகசிய ஆவண தொகுப்பு என்ற பெருமையும் இதற்குண்டு.

ஈராக் போரில் அமெரிக்கா வெண்டுமென்றே செய்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை இதில் அம்பலமாக்கியது விக்கிலீக்ஸ். அமெரிக்காவின் நோக்கம் அங்குள்ள வளங்களைச் சுரண்டுவதே என்றும் அதற்குத் தடையாக இருப்பவர்களை ஒழிப்பதுதான் முதல் வேளை என்றும் இந்த ஆவணங்கள் அழுத்தமாக வெளிப்படுத்தின.

இந்தப் போரில் 2004-ம் ஆண்டி்லிருந்து 2009-ம் ஆண்டுவரை 109,032 பேர் உயிரிழந்த உண்மை அப்போதுதான் வெளியானது. இதில் சிவிலியன்கள் மட்டும் 66,081 பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாளொன்றுக்கு 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர் இந்தப் போரில். ஆனால் இதனை அப்படியே அமுக்கி வைத்திருந்தது அமெரிக்கா.

இந்தியாவைப் பற்றி...

இந்தியாவைப் பற்றி அமெரிக்காவின் உண்மையான அபிப்பிராயம் மற்றும் பிற நாடுகள் எப்படி பார்க்கின்றன என்ற உண்மையும் வெளிவந்துள்ளது.

இந்தியாவை இன்றுவரை சந்தேகத்துக்குரிய நாடாகவே அமெரிக்கா பார்ப்பதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. இதுவரை டெல்லியில் உள்ள தூதரகம் மூலம் 3,038 ரகசிய ஆவணங்கள் வாஷிங்டனுடன் பரிமாறப்பட்டுள்ளது. ஆனால், ஆவணங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. இந்த ஆவணங்களில் உள்ள தகவல்களை அறிவதில் சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், அது சரி செய்யப்பட்டபின்னர் அது தொடர்பான தகவலும் வெளியிடப்பட்டுவிடும் என்று விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

தவிர, துருக்கி ஏற்பாடு செய்த ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்த ஆலோசனக் கூட்டத்தில் இந்தியாவுக்கு அழைப்பு அனுப்பாமல் தவிர்க்கப்பட்டது ஏன் என்பது குறித்த தகவலையும் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் வேண்டுகோளை ஏற்றே இந்தியாவை துருக்கி தவிர்த்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் தொடர்பான அனைத்து சர்வதேச கருத்தரங்கம் மற்றும் ஆலோசனைக் கூட்டங்களில் இந்தியா தவிர்க்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவிடம் துருக்கி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்தே, இந்த ஆண்டு தொடக்கத்தில் துருக்கி ஆதரவில் நடைபெற்ற "தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவது குறித்த ஆப்கானிஸ்தான் நட்பு நாடுகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள இந்தியாவுக்கு அழைப்பு அனுப்பப்படாமல் போனதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்தியா குறித்த அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

இந்திய தூதர்களை உளவு பார்க்க உத்தரவிட்ட ஹில்லாரி

இந்தியா ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு முயன்று வருகிறது. இதனால் அதன் செயல்பாடுகள் குறித்துஅறிய இந்தியத் தூதர்களை உளவு பார்க்குமாறு ஹில்லாரி கிளிண்டன் உத்தரவிட்டதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக 2009ம் ஆண்டு ஜூலை 31ம்தேதி ஹில்லாரி அமெரிக்கத் தூதர்களுக்கு அனுப்பிய தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

இந்திய அணு ஆயுத ஒப்பந்தம், ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக எடுத்து வரும் முயற்சிகள் உள்ளிட்டவை குறித்து உளவு பார்க்குமாறு அதில் ஹில்லாரி அறிவுறுத்தியுள்ளார். இந்த பணியை தனது உளவு அமைப்புகளுக்கும் அவர் ஒதுக்கியுள்ளார்.

இந்தியா தவிர பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளும் ஐ.நா. பாதுகாப்பு சபை நிரந்தர உறுப்பினர் பதவிக்காக மோதி வருவதால் அவர்களையும் உளவு பார்க்க உத்தரவிட்டுள்ளார் ஹில்லாரி.

இதற்காக ஐ.நா. பாதுகாப்பு சபை விரிவாக்கத்தை எதிர்த்து வரும் மெக்சிகோ, இத்தாலி, பாகிஸ்தான், ஆப்பிரிக்க நாடுகள், ஐரோப்பிய யூனியன், ஐ.நா. பொதுச் செயலகத்தில் உள்ள சிலரையும் தனக்கு கூட்டு சேர்த்து செயல்பட்டுள்ளது அமெரிக்கா.

மேலும் அணி சேரா நாடுகள் கூட்டமைப்பு, ஜி77 கூட்டமைப்பு, இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு குறித்தும் அது உளவு பார்த்துள்ளது.

உலகத் தலைவர்களை கேவலமாக கிண்டலடித்த அமெரிக்கா

பிரான்ஸ் தொடங்கி ரஷ்யா வரை பல்வேறு நாட்டு தலைவர்களை ஏளனமாக பட்ட பெயர் சூட்டி அழைப்பது 'பெரியண்ணன்' அமெரிக்க ஸ்டைல் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. தனது நட்பு நாடுகளையும் கேவலமாகவே பார்த்து வந்துள்ளது அமெரிக்கா என்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுதான் அமெரிக்காவுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானுடன் சவூதி அரேபியா நட்பு பாராட்டினாலும், உள்ளுக்குள் அதிபர் சர்தாரி மீது கடும் காழ்ப்புணர்ச்சியுடன் இருப்பதும் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

பாக் பிரதமர் சர்தாரியை அழுகிப் போனவராக சவூதி மன்னர் அமெரிக்காவிடம் வர்ணித்துள்ளாராம். "பாகிஸ்தானின் வளர்ச்சிக்கு சர்தாரிதான் பெரும் இடையூறாக இருக்கிறார். தலையே அழுகிப் போனதாக இருந்தால், உடல் முழுவதையும் அது பாதிக்கத்தான் செய்யும்" என்று வர்ணித்துள்ளார் சவூதி மன்னர்.

இதுதவிர ‌‌பி‌ரி‌ட்ட‌ன் அரச குடு‌ம்ப‌த்தை சே‌ர்‌ந்த ஒருவ‌‌ரி‌ன் ஒழு‌ங்‌கீனமான செய‌ல்பாடுகளை ‌‌‌தின‌ந்தோறு‌ம் அமெ‌ரி‌க்க தூதரக அ‌திகா‌ரிக‌ள் வா‌ஷி‌ங்டனு‌க்கு அனு‌ப்‌பி வ‌ந்து‌ள்ளதும் அம்பலமாகியுள்ளது.

"லிபியா தலைவர் மொம்மர் அல் கடாபி பெண் பித்தர். யாரையும் நம்ப மாட்டார். எங்கு சென்றாலும் உக்ரைன் நர்ஸ் ஒருவருடன் செல்கிறார். நர்சுக்கும், இவருக்கும் அந்தரங்க தொடர்பு உள்ளது. ஐநா செல்ல உரிய நேரத்தில் நர்சுக்கு விசா கிடைக்கவில்லை. பின்னர், இருவரும் தனியாக விமானத்தில் ஐ.நா. சென்றனர்...", என அமெரிக்கா குறிப்பிட்டதும் அம்பலமாகியுள்ளது.

இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியை, "இவர் அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியங்களை மறைக்க அடிக்கடி இரவு விருந்து அளிக்கிறார். இதனால், இவருக்கு ஓய்வே கிடையாது. இவர் மாடர்ன் ஐரோப்பிய உலகின் திறமையற்ற, ஆடம்பர தலைவர்.." என்றும் கூறியுள்ளனர்.

'டாக் புடின்'

மேலும் ர‌ஷ்ய ‌பிரதம‌ர் ‌விளாடி‌‌மி‌ர் பு‌‌தினு‌க்கு, 'அ‌ல்பா டா‌க்' என்ற நா‌யி‌ன் பெயரை (அடங்காத நாய்) அடையாள பெயராக கு‌றிப்பி‌ட்டு, மா‌ஸ்கோ‌வி‌ல் இரு‌ந்து அமெ‌ரி‌க்க தூதரக அதிகாரிகள் தகவ‌ல்க‌ள் ப‌‌ரிமா‌றி‌க் கொ‌ண்டது தெரிய வந்துள்ளது.

அத்துடன் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கெல் சிக்கல்களை கையாளாமல் தவிர்ப்பவர் என்றும், ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் மனநிலை பிறழ்ந்தவர் என்றும், இதேபோல பல்வேறு உலகத் தலைவர்களுக்கு பல்வேறு பெயர்களையும் சூட்டி அமெரிக்கத் தரப்பு தகவல்களைப் பரிமாறிக் கொண்டுள்ளதாம்.

ஈரான் ஹிட்லர்

ஈரான்அதிபர் அகமதி நிஜாத்தை "ஹிட்லர்" என்ற பெயரில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் வர்ணித்து தகவல் அனுப்பியுள்ளனர்.

பிரான்ஸ் அதிபர் சர்கோஸிக்கு நிர்வாண ராஜா என்றும், வடகொரிய அதிபர் கிம் ஜோங் 2 க்கு எபிலெப்சி, லிபிய அதிபர் கடாபிக்கு ஹாட் பிளான்ட், ஜெர்மனி அதிபர் மெர்க்கலுக்கு டெப்லான், ஆப்கன் அதிபர் கர்சாய்க்கு பரோனியாவால் பாதிக்கப்பட்டவர் என பல கேவலமான அடைமொழிகளைச் சூட்டியுள்ளனர் தங்கள் தகவல் பரிமாற்றங்களின்போது.

பாகிஸ்தானிடம் தோற்ற அமெரிக்கா...

2009 ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்க தூதர் அன்னி பேட்டர்சன், இஸ்லாமாபாத்தை அணுகி, அமெரிக்க அணு ஆயுத நிபுணர்கள் பாகிஸ்தானுக்கு வருவதாக கூறியுள்ளார்.

ஆனால் அவர்கள் வருவது பாகிஸ்தானிய ஊடகங்களுக்குத் தெரிந்தால், பாகிஸ்தானின் ஆயுதங்களை அமெரிக்கா தனது கையில் எடுத்துக்கொள்வதாக செய்தி பரவி விடும் என்று கூறி அதனை ஏற்க மறுத்து தடுத்து விட்டதாம் பாகிஸ்தான்.

உண்மையில்,பாகிஸ்தான் அணு உலையில், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஏற்றுவதைத் தடுக்கவே அந்த நிபுணர் குழு வருவதாக இருந்தது. ஆனால் பாகிஸ்தானின் கடுமையான எதிர்ப்பு காரணமாக அமெரிக்காவின் முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டதாக அதில் குறிப்பிட்டுள்ளது விக்கிலீக்ஸ்.

சவூதி கோரிக்கையை அமெரிக்கா தட்டிக் கழித்தது ஏன்?

அதேபோல ஈரானின் அணு ஆயுத திட்டத்தால் பெரும் கவலை அடைந்த சவூதி அரேபிய அரசு, ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியதாம். இதுதொடர்பாக சவூதி மன்னர் அமெரிக்காவுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தாராம்.

அதேசமயம், அல் கொய்தா அமைப்புக்கு தேவையான அனைத்து நிதிகளையும் சவூதி அரேபியாதான் தொடர்ந்து கொடுத்து வருவதாகவும் அமெரிக்காவுக்குத் தெரிய வந்துள்ளது. இதனால் சவூதி அரேபிய மன்னரின் கோரிக்கைகளை ஏற்காமல் அமெரிக்கா தட்டிக் கழித்ததாம்.

மேலு‌ம் ‌சீனாவு‌ட‌ன் இணை‌ந்து கொ‌ரிய ‌தீபக‌ற்ப‌த்‌தி‌ல் அமைதியை ‌‌நிலைநா‌ட்ட தெ‌ன் கொ‌ரியா மே‌ற்கொ‌ண்ட முய‌ற்‌சிகளை, அமெ‌ரி‌க்க உளவு‌த் துறை த‌டு‌த்து ‌நிறு‌த்‌தியது ப‌ற்‌றிய தகவ‌ல்களு‌ம் அதில் வெ‌ளி‌யி‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இதேபோ‌ன்று ஆ‌ப்கா‌‌னி‌ஸ்தா‌‌ன் துணை ‌பிரதம‌ர் சவூ‌தி ‌விமான‌ ‌நிலை‌‌த்‌தி‌ல் சுமா‌ர் 20 கோடி ரூபா‌ய் ம‌தி‌ப்புடைய அமெ‌ரி‌க்க டாலருட‌ன் ‌பிடி‌ப‌ட்டதும், ‌பி‌ன்ன‌ர் அமெ‌‌ரி‌க்கா தலை‌யி‌ட்டு அ‌ந்த ‌விவகார‌த்தை ‌‌தீ‌ர்‌த்து வை‌த்தது‌ம் ‌வி‌க்‌கி‌லீ‌க்‌‌‌ஸி‌‌ல் வெ‌ளியா‌கியு‌ள்ளது.

ஐரோப்பாவை பற்றி கவலையில்லை. மேற்கு நாடுகளை விட கிழக்கு நாடுகளை தேர்வு செய்கிறேன்’ என்று அமெரிக்க அதிபர் ஒபாமா பேசிய பேச்சும் கசிந்துள்ளது, பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவுக்கு.

கூகுளை ஊடுருவி உளவறிந்த சீனா...

இதேபோல கூகுள் நிறுவனத்தின் இணையதளத்திற்குள் ஊடுருவி அவற்றை செயலிழக்க வைக்க சீன அரசு உத்தரவிட்டதையும் அம்பலப்படுத்தியுள்ள விக்கிலீக்ஸ், அமெரிக்க அரசின் சில இணைய தளங்கள், மேற்கத்திய நாடுகளின் கம்ப்யூட்டர் கட்டமைப்பு, தலாய் லாமாவின் கம்ப்யூட்டர் கட்டமைப்பு, அமெரிக்க வர்த்தகத் துறையின் இணையதளம் ஆகியவற்றுக்குள்ளும் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் சீன அரசு ஊடுருவி வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

விக்கிலீக்ஸின் இந்த ஆவணங்கள் உலகை பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. தவிர மத்திய கிழக்கிலும் பதற்றமான நிலைமைக்கு வழி வகுத்திருக்கிறது. அத்துடன், ஈரானுக்கெதிரான தாக்குதல் அவசியம் எனக் கருதும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிலுள்ள கடும் போக்காளர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்வதாக அமைந்திருப்பதாக சர்வதேச பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன.
இந்த பின்விளைவுகளை எதிர்ப்பார்த்துதான் 'விக்கிலீக்ஸை நம்பாதீர்கள்' என்று அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு குடியரசுகள், ஆப்கானிஸ்தான், சீனா மற்றும் இந்தியாவுக்கு தொடர்ந்து செய்தி அனுப்பி வந்தார்.

அமெரிக்காவின் இந்த டெக்னிக் இனி எடுபடுமா? சந்தேகம்தான். இப்போதே பல நாடுகள் அமெரிக்காவின் இந்த இரட்டை முகம் கண்டு முகம் சுளிக்க ஆரம்பித்துள்ளன. விக்கிலீக்ஸ் விவகாரத்தில் அமெரிக்கா குறித்து சம்பந்தப்பட்ட நாடுகளின் ரியாக்ஷன் என்னவென்பது வரும் நாட்களில் தெரியும்!

29.11.10

விக்கிலீக்ஸ் - ஆடும் அமெரிக்கா அதிர்வில் உலகம்

அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணைய தளம் வெளியிட்டதன் மூலம் அந்த நாடு தற்போது அரசியல் நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. ஏறத்தாழ 250000 ரகசிய ஆவணங்கள் பிரபல பத்திரிகைகளான கார்டியன், நியுயார்க் டைம்ஸ் ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய தகவல்கள் வருமாறு:

அரபு நாடுகளின் தலைவர்கள் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவைத் தூண்டியது.

ஐநா தலைவர்களை உளவு பார்ப்பதற்காக அமெரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி இருப்பதால் அங்குள்ள அரசு அதிகாரிகள் பணத்துக்காக அணு ஆயுதங்கள் தயாரிக்கத் தேவையான பொருட்களை தீவிரவாதிகளுக்கு பணத்துக்காக விற்கலாம் என அதிகாரிகள் எச்சரித்ததால் பாகிஸ்தானின் அணு ஆயுதம் சம்பந்தமாக அமெரிக்காவும் இங்கிலாந்தும் கொண்டிருந்த கவலை.

ஆப்கான் துணை ஜனாதிபதி ஜியா மசூத் 52 மில்லியன் டாலர் பணத்தை ஐக்கிய அரபு அமீரகம் செல்லும்போது கையோடு எடுத்துச் சென்றது.

சீனாவில் இருந்து கூகுள் வெளியேறப் பிண்ணனியிலிருந்து செயல்பட்டவர் பொலிட்பீரோவைச் சார்ந்த ஒரு உறுப்பினர் என்ற தகவல்.

மாபியாக்களுடன் சேர்ந்து ரஷ்ய உளவு அதிகாரிகள் குற்றச் செயல்களில் ஈடுபட்டது, ரஷ்யாவை ஒரு மாபியா நாடு என வர்ணித்திருப்பது.

ஆப்கானிஸ்தானில் ஐக்கிய ராஜ்ஜியத்தின் ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்க ராணுவ அதிகாரிகள் மற்றும் ஆப்கான் அதிபர் கர்ஷாய் கடுமையாக விமர்சனம் செய்திருப்பது.

உலகம் முழுவதிலுமுள்ள அமெரிக்க தூதரகங்களில் நிறைந்திருக்கும் ஊழல்கள் மற்றும் அங்கு வேலை செய்யும் அதிகாரிகள் நாடுகளின் தலைவர்களை கேவலமாகப் பேசியிருப்பது. குறிப்பாக கர்ஷாயியை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் புடினை நாய் என்றும் தெரிவித்திருப்பது.

அல்காய்தாவுக்கு பொருளாதார உதவிகள் செய்வதில் முன் நிற்பவர்கள் சவுதி அரேபியாவைச் சார்ந்தவர்கள்.

எமனில் அமெரிக்க விமானங்கள் அல்காய்தா முகாம்களின் மீது தாக்குதல் நடத்துவதை வெளியுலகிற்கு தெரியாமல் மறைப்பது. தாங்கள்தான் தாக்குதல் நடத்துவதாக தொடர்ந்து உலகிற்கு சொல்லிக் கொண்டிருப்போம் என எமன் அதிபர் அப்துல்லா ஸாலே ஜனவரி 2010ல் அன்றைய மத்திய கிழக்கின் அமெரிக்க கமாண்டராக இருந்த டேவிட் பெட்ரேஸிடம் கூறியது.

இவ்வாறான தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிடப்போவதை அறிந்த அமெரிக்கா இதனைத் தடுப்பதற்கு செய்த முயற்சிகள் ஏதும் பலனளிக்கவில்லை. ஜெர்மனி, சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள், ஆப்கானிஸ்தான் போன்ற அரசாங்கங்களுக்கு அந்தந்த நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதர்கள் மூலம் இந்த தகவல்கள் வெளியாவதை தெரிவிக்கும்படி கட்டளையிடப்பட்டனர். இவ்வாறு ரகசியத் தகவல்கள் வெளியானதால் இனி அமெரிக்காவுடன் தகவல் பரிமாற்றம் வைத்துக் கொள்வதைப் பல நாடுகள் தவிர்த்துக் கொள்ளலாம் என கருதப்படுகிறது.

ரகசியத் தகவல்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இவ்வாறான தகவல்களை வெளியிட்டதன் மூலம் மனித உரிமைகளை மீறியதோடு பல தனி நபர்களின் உயிருக்கும் விக்கிலீக்ஸ் உலை வைத்துள்ளதாக வெள்ளை மாளிகை குற்றம் சாட்டியுள்ளது.

இங்கிலாந்து வெளியுறவுத்துறையைச் சார்ந்த ஒரு அதிகாரி கூறும்போது இவ்வாறான ரகசிய ஆவணங்களை வெளியிட்டதை வன்மையாக கண்டிக்கிறோம் என தெரிவித்ததோடு அமெரிக்காவுடனான நட்புறவு தொடரும் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் மெயர் என்ற அமெரிக்காவுக்கான முன்னாள் இங்கிலாந்து தூதர் தெரிவிக்கும்போது இனிமேல் மின்னியல் கருத்துப் பரிமாற்றங்களின் பாதுகாப்பு பற்றி மக்கள் யோசிப்பார்கள். முன்பைப்போல் காகிதத்தில் பரிமாற்றங்கள் செய்திருந்தால் இவ்வாறாக அதிக அளவில் ஆவணங்களை திருடியிருக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

இதனை வெளியிட்டதன் மூலம் விக்கிலீக்ஸின் உரிமையாளர் ஜீலியன் அஸான்ஜ் மீது அமெரிக்க அரசு வழக்குத் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆவணங்கள் மூலம் அமெரிக்க தூதரகங்களை தனது சதித்திட்டங்களுக்கு அமெரிக்க அரசு எந்தளவு பயன்படுத்தியுள்ளது என்ற விபரங்கள் வெளிவந்துள்ளன. தாங்கள் சந்திக்கும் நபர்களின் கடன் அட்டை விபரங்கள், அவர்களின் மரபணுக்கள் உள்ளிட்ட பல தகவல்களை அமெரிக்க தூதரக அதிகாரிகள் சேகரித்துள்ளனர்.

ஐநா தலைவரை உளவு பார்த்ததும் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஐநாவின் உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் கணிணியைப் பற்றிய முழு தகவல்களையும் பெற்றுத் தர அதிகாரிகள் பணிக்கப்பட்டுள்ளனர். இது சம்பந்தமாக தெரிவித்த பான்கீ மூனின் சார்பில் பேசவல்ல அதிகாரி பர்ஹான் ஹக் பான்கீமூன் இது சம்பந்தமாக தற்போது எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை எனக்
குறிப்பிட்டார்.

உலகின் மிக உயரமான அடுக்கு மாடி குடியிருப்பு துபாயில்

துபாய் : ஏற்கனவே 823 மீட்டர் உயரமுள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான பர்ஜ் கலீபா அமைந்துள்ள துபாய் நகரத்தில் 107 மாடிகளை கொண்ட உலகின் மிக உயரமான அடுக்குமாடி குடியிருப்பு அடுத்த ஆண்டுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

துபாயில் அடுக்கு மாடி குடியிருப்புகள் நிறைந்த துபாய் மெரீனா பகுதியில் அமையவுள்ள பிரின்ஸஸ் டவர் என பெயரிடப்பட்டுள்ள இக்கட்டிடம் 414 மீட்டர் உயரம் கொண்டது என்றும் இதன் கட்டுமான பணிகள் 2011 ஆம் ஆண்டு இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயரமான கட்டிடங்களின் அமைப்பு குழுவின் படி 78 மாடிகளுடன் 323 மீட்டர் உயரமுள்ள ஆஸ்திரேலியாவில் உள்ள 1 கட்டிடமே தற்போது உலகின் மிக உயரமான அடுக்குமாடி குடியிருப்பாக உள்ளது. ப்ரின்ஸஸ் டவருடன் 91 மாடிகள் கொண்ட எலைட் குடியிருப்பும் 2011க்குள் கட்டி முடிக்கப்படும் என தமீர் ஹோல்டிங் தலைவர் பெட்ரிக்கோ தைபர் கூறினார்.

பொருளாதார நெருக்கடிக்கு முன்பிருந்த விலையுடன் ஒப்பிடுகையில் 50 சதவிகிதம் வரை குறைந்த விலைக்கு கட்டிடங்கள் விற்கப்படுவதாகவும் முதலீட்டாளர்கள் இவ்வாய்ப்பை தவற விட கூடாது என்றும் பெட்ரிக்கோ கூறினார். சீனா, நைஜீரியா, ரஷ்யா உள்ளிட்ட வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவரும் வகையில் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

”விஞ்ஞானி கொலைக்கு இஸ்ரேல்,அமெரிக்கா காரணம்”

இன்று ஈரானின் தலைநகர் பாக்தாத்தில் ஏற்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் ஈரானின் விஞ்ஞானி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் அணுசக்தி விஞ்ஞானி ஆவார். இந்தத் தாக்குதலின் பின்னணியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இருப்பதாக ஈரானிய உயர் அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

28.11.10

கறைபடிந்த அலகாபாத் உயர் நீதிமன்றம் : உச்ச நீதிமன்றம் சூடு!


அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஏதோ கறைபடிந்துள்ளது என்று வெள்ளிக் கிழமையன்று மிகவும் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ள உச்ச நீதிமன்றம், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நேர்மை குறித்துக் கேள்வி எழுப்பி கவலை தெரிவித்துள்ளது.
"டென்மார்க நாட்டில் ஏதோ அரசியல் கறைபடிந்துள்ளது" என்று ஷேக்ஸ்பியர் தம்முடைய நாவலான ஹேம்லெட்டில் கூறியுள்ளார். அதுபோல, அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஏதோ கறை படிந்துள்ளது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜு மற்றும் கியான் சுதா மிஷ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு நீதிமன்றம் கூறியுள்ளது. "அலகாபாத் உயர் நீதிமன்றத்தை சுத்தப்படுத்த வேண்டும்" என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உயர் நீதிமன்றத்தை சுத்தப்படுத்துவதற்காக நீதிபதிகளை இடம் மாற்றப் பரிந்துரை செய்தல் உள்பட கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அலகாபத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை உச்ச நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் தங்களுக்குத் தெரிந்த வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக மாமா நீதிபதிகள் (uncle judge) போன்று செயலப்படுவதாகவும் அமர்வு நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் 12 பக்க உத்தரவில் கூறியுள்ளனர்.

உத்திரப் பிரதேச மாநிலம் பரைச் என்ற ஊரில் வக்ஃப் வாரியத்திற்குச் சொந்தமான நிலத்தை, ஒவ்வோர் ஆண்டும் மே மற்றும் ஜூன் மாதத்தில் நடைபெறும் சர்கஸ் காட்சி நடத்துவதற்கு ஒதுக்குமாறு அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் மேற்கண்டவாறு கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்துள்ளனர்.

இத்தகைய அதிர்ச்சியூட்டும் ஏற்றுக்கொள்ளத் தகாத தீர்ப்புகளால் நாட்டு மக்களின் நம்பிக்கை ஆட்டப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் கட்ஜு மற்றும் மிஷ்ரா ஆகியோர் கூறியுள்ளனர்.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் சில நீதிபதிகள் குறித்து ஏராளமான புகார்கள் வந்தவண்ணம் உள்ளன என்பதை நாங்கள் வருத்தத்துடன் கூறிக் கொள்கிறோம் என்றும் அவர்கள் கூறினர்.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் சில நீதிபதிகளின் உறவினர்கள் வழக்கறிஞர்களாக அதே நீதிமன்றத்தில் வழக்காடுகின்றனர். தங்கள் பணியைத் தொடங்கிய சில காலங்களுக்குள்ளே நீதிபதிகளின் உறவினர்கள் கோடீசுவரர்களாக மாறிவிடுகின்றனர். மிகப்பெரும் வங்கி இருப்புகள், சொகுசு கார்கள், மிகப்பெரும் வீடுகள் என சொசுகு வாழ்க்கையை வாழ்கின்றனர் என்றும் நீதிபதிகள் குற்றம் சாட்டினர்.

நீதிபதிகளை உறவினர்களாகக் கொண்ட அனைத்து வழக்கறிஞர்களுமே தங்கள் உறவை தவறானவற்றிற்காகப் பயன்படுத்துகிறார்கள் என நாங்கள் கூறவில்லை எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக மிகக்கடுமையான புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. எனவே, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் அலகாபாத் மற்றும் லக்னோ கிளைகள் சுத்தப்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்றும் அமர்வு நீதிபதிகள் தங்கள் கூட்டு உத்தரவில் கூறியுள்ளனர்.

62 ஆண்டு கால பாபர் மசூதி - இராம ஜென்ம பூமி வழக்கிலும் இதே அலஹாபாத் நீதிமன்றம் தான் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒபாமா இஸ்லாத்தை தழுவ ஒபாமாவின் பாட்டி பிராத்தனை

ரியாத் : அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இஸ்லாத்தை ஏற்று கொள்ள வேண்டும் என்று தான் பிராத்தித்ததாக ஹஜ் செய்வதற்காக சவூதி அரேபியா வந்திருக்கும் கென்யாவை சார்ந்த அவரின் பாட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தன்னுடைய ஹஜ் கடமையை முடித்து விட்டு ஜெத்தாவில் அல்-வதான் பத்திரிகைக்கு பேட்டி அளித்த பராக் ஒபாமாவின் 80 வயதான பாட்டி ஹாஜா சாரா ஒமர் “ என் பேரன் பராக் ஒபாமா இஸ்லாத்தை ஏற்று கொள்ள வேண்டும் என்று பிராத்தனை செய்தேன்” என்று கூறினார்.

ஹாஜா சாரா ஒமர் தன் மகனும் ஒபாமாவின் மாமாவுமான சயீத் ஹுசைன் ஒபாமா மற்றும் தன் நான்கு பேரக்குழந்தைகளுடனும் சவூதி அரசரின் சிறப்பு விருந்தினர்களாக ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஒபாமாவின் அரசியல் குறித்து தான் புனித யாத்திரையின் போது எக்கருத்தையும் சொல்ல விரும்பவில்லை என்றும் கூறினார்.

மீண்டும் வெள்ளை மாளிகைக்கு ஒபாமா தேர்ந்தெடுக்கப்படுவாரா என கேட்டதற்கு எதிர்காலத்தை அறியும் ஆற்றல் தனக்கு இல்லை என்றும் அல்லாஹ் ஒருவனே அதை அறிவான் என்றும் கூறினார். மேலும் நோய் வாய்ப்பட்டுள்ள சவூதி அரசர் விரைவில் குணம் பெற வேண்டும் என்றும் பிராத்தித்ததாகவும் கூறினார்.

நிதீஷ்குமார் வெற்றி - மதவெறிக்கு இடமில்லை: நல்லக்கண்ணு

பீகார் சட்டமன்றத் தேர்தலில்ல அம்மாநில முதல்வர் நிதீஷ்குமார் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது, பீகாரில் மதவெறிக்கு இடமில்லை என்பதை நிரூபிக்கிறது என இந்திய கம்யூனிஸ் கட்சித் தலைவர் நல்லக்கண்ணு கூறியுள்ளார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற ’அயோத்தி தீர்ப்பும், மதச்சார்பின்மையும்’ என்ற கருத்தரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:

இந்தியா விடுதலை பெற்ற பிறகு, 1952-ல் முதல் தேர்தல் நடைபெற்றது. இப்போது பீகார் மாநிலத்தில் தேர்தல் முடிந்து முடிவுகள் வெளிவந்துள்ளன. உத்தரப்பிரதேசத்துக்கு அடுத்து மிகப்பெரிய மாநிலமான பீகாரில் நாட்டை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 4 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. ஒரு காலத்தில் 20-க்கும் அதிகமான எம்.எல்.ஏ.க்களுடன் அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்த இடதுசாரிகள் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த வெற்றியை பலரும் பல விதமாக பார்க்கிறார்கள். சிலர் பாஜக வெற்றி பெற்றுள்ளது என்கிறார்கள். சிலர் மதம், ஜாதியைக் கடந்து நிதிஷ்குமார் செயல்பட்டதால் கிடைத்த வெற்றி என்கிறார்கள்.

தேர்தல் பிரச்சாரத்துக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வரக்கூடாது என்று தடுத்ததால் அவருக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது. அதாவது மதவெறிக்கு இடமில்லை என்பதை அந்த மாநில மக்கள் நிரூபித்துள்ளனர். மோடி பிரசாரம் செய்திருந்தால் வெற்றி கிடைத்திருக்காது.

என்று பேசினார். இந்தக் கூட்டத்தில் அ. மார்க்ஸ் எழுதிய 'பாபர் மசூதி ராமஜென்ம பூமி தீர்வும், தீர்ப்பும்' என்ற புத்தகமும் வெளியிடப்பட்டது

அனாதையாக கிடந்த பெரியவரின் சடலம்- நல்லடக்கம் செய்த திருத்துறைப்பூண்டி TNTJ

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ரயில் நிலையம் அருகில் முஸ்லிம் பெரியவர் ஒருவரின் உடல் இறந்த நிலையில் கிடப்பதாக கடந்த 3-11-2010 அன்று நகர TNTJ விற்கு தகவல் கிடைத்தது.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த நகர நிர்வாகிகள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் இறந்தவரின் சட்டைப்பையில் இருந்த தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டனர். இறந்தவரின் பெயர் முஹம்மது ஜின்னா வயது 54 என்பதும் அவரது ஊர் இளையாங்குடி என்பதும் தெரியவந்தது.

பின்னர் இளையாங்குடி TNTJ மூலம் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சடலத்தை TNTJ ஆம்புலன்சில் ஏற்றி அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்து பின்னர் TNTJ செலவிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

TNTJ வின் இந்த மனிதநேய பணியை பார்த்த காவல்துறையினரும் இறந்தவரின் உறவினர்களும் TNTJ வை பாராட்டினர். அல்ஹம்துலில்லாஹ்!

25.11.10

இடஒதுக்கீட்டில் திமுக அரசு துரோகம்-? காவல்துறை பணி நியமனத்தில் முஸ்லிம்களுக்கு வஞ்சகம்!

தமிழக அரசின் காவல்துறையில் தற்போது கூடுதலாக பத்தாயிரம் பணி இடங்கள் நிரப்ப தேர்வுகள் நடைபெற்றன. அதில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் விரைவில் பணியில் சேர இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

பத்தாயிரத்துஅறுபது பணி இடங்களில் 1095 காவல்துறை உதவி ஆய்வாளர் களும் காவலர்கள் 8944 பேரும் சிறை காவலர்கள் பணிக்கு 486 பேரும் தீயணைப்பு படை வீரர்கள் பணிக்கு 630 பேரும் பணியில் சேரவிருக்கும் நிலையில் வழக்கம் போல் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு முறையில் துரோகம் இழைக் கப்பட்டதாக தகவல்கள் வெளி வந்ததை யடுத்து சமுதாய ஆர்வலர்கள் கொந்தளிக் கின்றனர்.2069 பணியிடம் ஆதி திராவிட சமூகத்தினருக்கும் 3343 பணியிடங்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கும் பெண்கள் 2673 பேரும்தேர்வு செய்யப்பட்டனர்.

அந்தந்த சமூக மக்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டின்படி அவர்களுக்கு பணி இடங்கள் கிட்டத்தட்ட வழங்கப்பட்டு உள்ளன. உதாரணமாக அருந்ததியர் சமூக மக்களுக்கான பணியிடத்துக்கு 293 பேர் தேர்வாகியுள்ளனர்.

முஸ்லிம் சமூகத்துக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 சதவீதத்திற்கு வழங்கப்பட்டுள்ள பணியிடங்கள் எவ்வளவு தெரியுமா 263 தான்.

மூன்றரை சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கு 350 பணியிடங்களுக்கு குறையாமல் அல்லவா இருக்கவேண்டும். கவனக்குறைவால் விளைந்த தவறாக இதனைக் கருதிவிட முடியாது. கணக்கில் பிழை செய்திருக்கிறார்கள். நாளை தேர்தலின் போது முஸ்லிம்கள் சரியான கணக்கு எது என நிரூபித்துக் காட்டுவார்கள்.

தவறை உடனடியாக சரி செய்து தமிழக அரசு அவப்பெயரில் இருந்து தப்புமா? நடவடிக்கை இருக்குமா?

-ஹபீபா பாலன்

திருமணமாகாத இளம்பெண்கள் செல்ஃபோன் உபயோகிக்கத் தடை !

முஸஃபர் நகர்: திருமணமாகாத இளம்பெண்கள் காதல் வலையில் சிக்கி தங்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொள்வதைத் தடுக்கும் முகமாக, அவர்கள் செல்ஃபோன் உபயோகிக்க கிராம பஞ்சாயத்து தடை விதித்துள்ள சம்பவம் உத்திர பிரதேச மாநிலத்தின் முஸஃபர் நகர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முஸஃபர் நகர் மாவட்டத்திலுள்ள லன்க் என்ற கிராமத்தில் அனைத்து சாதி மற்றும் மத பஞ்சாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து செல்ஃபோனால் இளம்பெண்களுக்கு ஏற்படும் தீய விளைவுகள் குறித்து விவாதித்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

திருமணமாகாத இளம்பெண்கள் காதல் வலையில் சிக்கி தங்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொள்வதைத் தடுக்கும் முகமாகவே இந்த தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கிராம பஞ்சாயத்தின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர் கூறினார்.

திருமணமாகாத இளம்பெண்களையும், கணவனை இழந்த விதவைப் பெண்களையும், வெளிநாட்டில் பணிபுரியும் கணவன்மார்களின் மனைவிகளையும் குறி வைத்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சமூக விரோத கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. இது போன்ற பெண்களுக்கு தவறவிட்ட செல்பேசி அழைப்பு (மிஸ்டு கால்) கொடுப்பது, பின்னர் அதன் மூலம் ஏற்படும் தொடர்பை பயன்படுத்தி அவர்களை தங்கள் காம வலையில் சிக்க வைத்து அவர்களது வாழ்வை சீரழிப்பது, அதன் பிறகு அவற்றை வீடியோக்களில், நிழற்படங்களில் பதிவு செய்து அவர்களை மிரட்டி அவர்களது பணம், நகைகளை சூறையாடுவது, இவை எல்லாவற்றிற்கும் மேலாக தன் நண்பர்களுக்கும் அவர்களை இரையாக்குதல், விபச்சார விடுதிகளில் அவர்களை விற்று விடுதல் போன்ற சமூக விரோத செயல்களில் சிலர் ஈடுபடுவதை அன்றாடம் செய்திகளில் பார்க்க நேரிடுவது குறிப்பிடத்தக்கது

தீவிரவாத ஹிந்து பாசிசவாதிகளால் உலக அரங்கில் இந்தியாவுக்கு அவமானம்

புதுடெல்லி: கடும் சமூக மற்றும் மத துவேசமுடைய நாடுகளின் பட்டியலில் இந்தியா,மதங்களுக்கெதிரான அரசுக்கட்டுப்பாடுகள் அதிகமுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.வாஷிங்டனில் செயல்படும் Pew research centre நடத்திய சர்வேயில்தான் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. "சர்வதேச மத நம்பிக்கைக்கான கட்டுப்பாடுகள்" என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வில்தான் அந்நிய மதத்தவர்களுடனான துவேசம் வலுவடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.உலகிலேயே புத்திஜீவிகளால் நடத்தப்படும் ஆய்வு நிறுவனம் என்ற பெயரைப்பெற்றது பியூ ரிசர்ச் செண்டர்.

இவ்விஷயத்தில் கியூபா, துனீசியா, இஸ்ரேல், சோமாலியா ஆகியநாடுகளை விட இந்தியா முன்னணியில் உள்ளது. இந்த ஆய்வு 192 நாடுகளில் நடத்தப்பட்டது. உலகின் மக்கள்தொகையில் 99.5 மக்களும் இவ்வாய்வில் உட்படுத்தப்பட்டதாக இந்நிறுவனம் கூறுகிறது.

அரசு, சமூக தளங்களிலுள்ள சில கட்டுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு வினாக்களை தயாரித்து அதற்கு விடையை கண்டறிந்துதான் இந்நிறுவனம் ஆய்வைமேற்க்கொண்டது.


U.S. State department, U.S. Commission on international freedom, The council of europian union, The internaional crisis group, humanrights watch, Amnesty international, Hudson institute, U.N rapporteur on freedom of religion or belief ஆகிய நிறுவனங்களின் அறிக்கைகளும் இவ்வாய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாய்வில் முக்கிய காரணிகளாக மதநம்பிக்கைக்கு கட்டுப்பாட்டை ஏற்படுத்தும் தனிமனிதர், சமூகம், அரசு, சட்டம், அமைப்புகள் ஆகியன எடுத்துக்கொள்ளப்பட்டன. அரசு மதக்கட்டுப்பாட்டில் சீனாவும், வியட்நாமும் முன்னணியில் உள்ளது. ஆனால் மததுவேசத்தில் இந்தியா சீனாவை விட முன்னணியில் உள்ளது.

நைஜீரியாவில் மதத்துவேசம் காணப்பட்டாலும் அரசுக்கட்டுப்பாடு குறைவாகவே உள்ளது. பிரேசில், தென் ஆப்ரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் அனைத்துவிதமான மதத்துவேசங்களும் காணப்படவில்லையென இவ்வாய்வு கூறுகிறது.

அரசின் மதக்கட்டுப்பாடு குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலில் முதல் 40 இடங்களில் கூட இந்தியா வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா, இலங்கை, எத்தியோப்பியா, ஆகிய நாடுகளில் பெரும்பான்மை சமூகம் ஒன்று ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டுமென்றும் தங்களுடைய மதஸ்தலங்களை பாதுகாப்பதற்கும் கோரிக்கை விடுகின்றனர். இந்தியாவில் ஹிந்துத்துவா வாதிகள் ஒரு ஹிந்து தேசத்தை உருவாக்கவேண்டுமென்பதில் உறுதியாக உள்ளனர்.

இஸ்ரேலில் பாதுகாப்பின் பெயரால் பிற மதத்தவர்களுக்கு அவர்களுடைய வணக்கஸ்தலங்களுக்கூட செல்ல முடியாத நிலை உள்ளது.சமூகத்துவேசம் இல்லாத நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகமும் இடம்பெற்றுள்ளது. அமெரிக்கா சமூக துவேசமுடைய நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

அரசு கட்டுப்பாடு அறவே இல்லாத நாடுகளாக நியூசிலாந்து, பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, இத்தாலி, தென் கொரியா, யு.எஸ், ஆஸ்திரேலியா ஆகியன உள்ளன

24.11.10

யுஏஇ இந்தியர்களுக்கு 24 மணி நேர போன் உதவி சேவை: பிரதீபா பாட்டீல் துவக்கம்

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் பணி புரியும் இந்தியர்கள் துன்பத்தில் இருந்து விடுபெற 24 மணி நேர தொலைபேசி சேவை மற்றும் ஆலோசனை சேவையை நேற்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் துவங்கி வைத்தார்.

இந்திய தொழிலாளிகள் மையத்தை பிரதீபா பாட்டீல் திறந்து வைத்தார். இந்த மையம் தொழிலாளிகளின் குறைகளைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கும். ஐக்கிய அரபு அமீரகத்தில் 1. 75 மில்லியன் இந்தியர்கள் பணி புரிகின்றனர்.

பிரதீபா பாட்டீல் அரபு நாடுகளில் 5 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இது போன்ற மையங்களை வளைகுடா நாடுகளிலும் துவங்கத் திட்டமிட்டிருப்பதாக வெளிநாட்டு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார்.

இவை வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு பொருளாதாரம், சட்டம், மனோதத்துவம் குறித்து ஆலோசனையும், உதவியும் அளிக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்திய தூதர் எம். கே. லோகேஷ் இங்குள்ள இந்தியர்களின் குறைகளைக் களையத் தான் இந்த மையம் துவங்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

இந்த நிகழ்ச்சி இந்தியா கிளப்பில் நடந்தது. இந்த 24 மணி நேரத் தொலைபேசி சேவை உலகிலேயே முதன்முறையாக இந்தியா தான் துவங்கியுள்ளது. இதை வெளிநாட்டு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சகம் துவக்கியுள்ளது.

இது பிரச்சனைகளில் சிக்கி வழி தெரியாமல் தவிக்கும் இந்தியத் தொழிலாளர்களுக்கு பேருதவியாக இருக்கும்.

முஸ்லீம்கள் ரத்ததானம் செய்வது இஸ்லாமுக்கு எதிரானது-தாருல் உலூம் தியோபான்ட்


முசாபர்நகர்: ரத்ததானம் செய்வது இஸ்லாமின் நெறிமுறைகளுக்கு எதிரானது என்று இஸ்லாமிய அமைப்பான தாருல் உலூம் தியோபான்ட் கூறியுள்ளது.

ரத்ததானம் மட்டுமல்லாமல் உறுப்பு தானம் செய்வதும் இஸ்லாமுக்கு விரோதமானது என்றும் அது கூறியுள்ளது. அதேசமயம், உயிருக்குப் போராடி வரும் ஒருவருக்கோ அல்லது குடும்பத்தினருக்கோ ரத்தம் கொடுப்பது தவறில்லை என்றும் அது தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தனது இணையதளத்தின் பாத்வா (தடை) பிரிவில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது தியோபான்ட். இதுகுறித்து அதில் கூறுகையில், ரத்ததானம் செய்வதோ, உடல் உறுப்புகளை தானம் செய்வதோ இஸ்லாமில் அனுமதிக்கப்படவில்லை.

நமது உடல் உறுப்புகளை இஷ்டப்படி செயல்படுத்தும் உரிமை நமக்கு இல்லை. நமது உடலுக்கு நாம் சொந்தக்காரர்களும் இல்லை. எனவே ரத்தமோ அல்லது உடல் உறுப்புகளோ தானமாக வழங்கப்பட முடியாதவையாகும்.

உயிருக்குப் போராடி வரும் ஒருவருக்குத் தேவைப்பட்டாலோ அல்லது நமது குடும்பத்தினர், உறவினருக்குத் தேவைப்பட்டாலோ கொடுக்கலாம். அதற்கு அனுமதி உண்டு என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்ததானம் குறித்த ஒருவரின் கேள்விக்குப் பதில் அளிக்கும் விதமாக இதை தெரிவித்துள்ளது தியோபான்ட்.

ஆனால் இந்த தடை சரியல்ல என்று பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞர் மெளலானா வஹியுதீன் கான் கூறியுள்ளார். இந்த பாத்வாவால், இஸ்லாமியர்கள் ரத்ததானம் தருவதிலிருந்து விலகிப் போக மாட்டார்கள்.

முடிந்தவரை ரத்ததானம் செய்யுங்கள் என்று இஸ்லாமியர்களுக்கு நாங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். அதை தொடர்ந்து சதெய்வோம் என்றார் அவர்.

இதேபோல பல்வேறு இஸ்லாமிய அறிஞர்களும் தியோபான்ட் அமைப்பின் உத்தரவை நிராகரித்துள்ளனர்.

இதுகுறித்து டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக இஸ்லாமிய படிப்புக்கான துறை தலைவர் அக்தருல் வாஸ் கூறுகையில், ரத்ததானம் என்பது உயிரைக் காக்கும் ஒரு விஷயம். ரத்ததானம் தருவதில் எந்தத் தவறும் இல்லை என்று இஸ்லாமிய பிக் அகாடமி ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது என்றார்.

23.11.10

முக்கிய நகரங்களில் விமானப்படையின் வான்வழி ரோந்துப் பாதுகாப்பு


டெல்லி: டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு வான்வழிப் பாதுகாப்பை அளிக்கவுள்ளது இந்திய விமானப்படை.

இந்த நகரங்களின் வான் பாதுகாப்பை இந்திய விமானப்படை தனது வசம் எடுத்துக் கொள்ளும். தீவிரவாதிகள் வான்வழியாக ஊடுறுவ முயன்றால் அவற்றை தடுத்து அழிக்கும் நடவடிக்கையில் விமானப்படை உடனடியாக செயல்பட இது வழிவகுக்கும்.

இத்திட்டத்தில் தற்போது டெல்லி, மும்பை, பெங்களூர், புநே ஆகிய நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த நகரங்களில் 3 முதல் 4 போர் விமானங்கள் நிறுத்தி வைக்கப்படும். விமானக் கடத்தல் உள்ளிட்டவை நடைபெறும் போது இவை பாதுகாப்பு மற்றும் தடுப்பு முயற்சிகளுக்கு பயன்படுத்தப்படும்.

டெல்லியில் காமன்வெல்த் போட்டி நடைபெற்ற போதும், குடியரசு தின அணிவகுப்பின்போதும் அளிக்கப்படும் அதே அளவிலான பாதுகாப்பை இந்த சிறிய ரக விமானப்படைப் பிரிவு சம்பந்தப்பட்ட நகரங்களுக்கு அளிக்கும்.

இந்த படைப் பிரிவில் சுகோய் 30, மிக் 21, மிக் 29 ஆகியவை இடம்பெறும் என்று தெரிகிறது.

மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு வான்வழிப் பாதுகாப்பை அளிக்க விமானப்படை திட்டமிட்டது. தற்போது அது அமலுக்கு வரவுள்ளது.

22.11.10

யுஏஇ-க்கு வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல்

அபுதாபி,நவ.22:அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு வந்தடைந்தார் ஜனாதிபதி பிரதிபாபாட்டீல். அவரது பயணத்தின் வர்த்தகம், முதலீடு மற்றும் இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது
அவருடன் மத்திய இணையமைச்சர் சோலங்கி மற்றும் 3 எம்.பி.,க்களும் உடன் சென்றுள்ளனர். பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சிரியா உடனான நமது உறவில் எந்தவித பிரச்சனைகள் எதுவும் இல்லை. இந்த பயணத்தின் மூலம் மேலும் உறவு வலுப்பெறும் என்று கூறினார்.

ஜனாதிபதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு சிரியா செல்கிறார். காஷ்மீர் விவகாரம் மற்றும் ஐ.நா., பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் பெறுவதற்கு இருநாடுகளும் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2 ஜி அலைவரிசை ஊழல் : பிரபல துபாய் நிறுவனத்திற்கு திமுகவுடன் தொடர்பு

புது தில்லி : ஸ்பெக்ட்ரம் 2 ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்துள்ள ஊழலுக்காக ராசா பதவி விலகினாலும் அது தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஊழல் தொடர்பாக தொலை தொடர்பு ஆணையம் லைலென்ஸை ரத்து செய்ய பரிந்துரைத்துள்ள 5 முக்கிய நிறுவனங்களில் ஒன்றுக்கு தமிழ்நாட்டுடன் அதிலும் குறிப்பாக திமுகவுடன் தொடர்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.


சர்ச்சையில் சிக்கியுள்ள ஸ்வான் டெலிகாம் ஜனவரி 2008ல் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்றது. ஸ்வான் டெலிகாம் துபாயை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல நிறுவனமான ஈ.டி.ஏ ஸ்டாருக்கு ( ETA Star) சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் பல கட்டுமான பணிகளை செய்து வரும் இக்குழுமத்தின் நிறுவனர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 2008ல் 2 ஜி அலைக்கற்றை வாங்கிய ஸ்பான் டெலிகாமிடமிருந்து 9 மாதங்கள் கழித்து துபாயின் பிரபல தொலைபேசி நிறுவனமான எடிஸலாட் (Etisalat) 45% பங்குகளை அதிக விலலக்கு வாங்கி எடிஸலாட் டி.பி (Etisalat DB) என பெயர் மாற்றம் செய்தது. இதில் வினோதமான விஷயம் என்னவென்றால் இதற்கு ஒரு வாரத்திற்கு முன் அதாவது செப்டம்பர் 17, 2008ல் வெறும் ஒரு இலட்சம் முதலீட்டில் ஜெனிக்ஸ் எக்ஸிம் (Genix Exim) வெண்டர்ஸ் எனும் நிறுவனம் தொடங்கப்பட்டது.

அதிர்ச்சியளிக்கும் விதமாய் மூன்று மாதங்கள் கழித்து டிசம்பர் 17, 2008 ல் வெறும் ஒரு இலட்சம் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் 380 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை எடிஸலாட் டி.பி.யிடமிருந்து வாங்கியுள்ளது. அதே சமயத்தில் பணம் எங்கிருந்து திரட்டப்பட்டது என்பதற்கு எவ்வித கணக்கு வழக்கும் தாக்கல் செய்யப்படவில்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

ஜெனிக்ஸ் எக்ஸிமை எடிஸலாட் டி.பியில் ஈ.டி.ஏ. ஸ்டார் நிறுவனத்தின் அதிபர் சையது சலாஹூதினின் மகன் அஹமது சலாஹூதின் பிரதிநிதிப்படுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இக்குழுமம் திமுக அரசுக்கு சாதகமான ஒன்று என்பதும் காஞ்சிபுரத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ளிட்ட தமிழக அரசின் பல திட்டங்கள் இக்குழமத்தால் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதும் அனைவராலும் கவனிக்கப்பட கூடிய ஒன்றாக உள்ளது.

சென்னை அருகே 450 ஏக்கர் பரப்பில் ஒரு நகரம் ஈ.டி.ஏ ஸ்டார் குழுமத்தால் நிர்மாணிக்கப்படவிருக்கிறது. தமிழக அரசின் தலைமை செயலகமும் இக்குழுமத்தால் தான் கட்டப்பட்டது. தமிழக அரசின் மூலம் கிடைத்த இத்திட்டங்களுக்கு கைமாறாக சில மாதங்களுக்கு முன் இக்குழமத்துக்கு சொந்தமான சென்னை சிட்டி செண்டர் (City center - Chennai) தமிழக அரசின் ஆளும் குடும்ப பிரமுகர் ஒருவருக்கு கைமாற்றப்பட்ட செய்தி ஊடகங்களில் வெளிவந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

21.11.10

ஓநாய்களின் பள்ளத்தாக்கு’- பலஸ்தீன் என்ற திரைப்படம் மேலும் இஸ்ரேலுக்கு பலத்த அடி

ஐந்து ஆண்டுகள் இஸ்ரேலிய முற்றுகைக்குல் வதைக்கப்படும் காஸா மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக சென்ற துருக்கி கப்பல்கள் மீது இஸ்ரேல் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலை சித்தரிக்கும் ‘ஓநாய்களின் பள்ளத்தாக்கு’- பலஸ்தீன் என்ற பெயரில் துருக்கியில் ஒரு இராணுவ தாக்குதல் திரைப்படம் தயாரிக்கப்படுள்ளது

இத்திரைப்படம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 28 ஆம் தேதி வெளியாகிறது. இந்த பெயரில் ஏற்கனவே தொலைக்காட்சி தொடர் ஒன்று துருக்கியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளதுடன் அந்த தொலைக்காட்சி தொடர் துருக்கி இஸ்ரேல் உறவில் மேலும் பல விரிசல்களை ஏற்படுத்தியுள்ளதாக துருக்கிய செய்திகள் தெரிவிக்கின்றன இந்த கப்பலில் இலங்கையை சேர்ந்த இரு மாணவர்கள் படுகாயம் அடைந்தமை குறிபிடத்தக்கது

One Man Army, Spy operation போன்ற இராணுவ முறைகளை கையாண்டு துருக்கி எதிரிகளை வேட்டையாடுவது இதில் சிதரிக்கபடுகின்றது சிறப்பு காட்சியாக ஒன்பது துருக்கி நாட்டு முஸ்லிம்களை படுகொலை செய்த flotilla கப்பல் தாக்குதலுக்கு உத்தரவிட்ட இஸ்ரேலிய கொமாண்டோ தலைவர் கொல்லப்படும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது மற்றும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பாலர்களை பலஸ்தீனின் ஓநாய்கள் என்று வர்ணித்து பெயர் சூட்டியுள்ளமையும் சிறப்பானதாக துருக்கிய மக்கள் தெரிவிக்கின்றனர் விரிவாக பார்க்க Video

ஓநாய்களின் பள்ளத்தாக்கு’-பலஸ்தீன் திரைப்படம் துருக்கி நாட்டுக்கும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அதிகார சபைக்கும் ஏற்பட்டுள்ள முறுகலை தவிர்க்க அமெரிக்கா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பலத்த அடியாகும் என விமர்சிக்கப்படுகின்றது

அந்த திரைப்படத்தின் ட்ரைலர் காட்சிகள் துருக்கியில் தொலைக்காச்சிகள், மற்றும் திரையரங்குகளில் காண்பிக்க படுகின்றது அந்த காட்சிகள் இங்கு பதிவு செய்யப்படுகின்றது

தேங்க்ஸ் டு : M.ரிஸ்னி முஹம்மட் ,OurUmmah.org

சிங்களவராக இருந்து முஸ்லிமாக மாறிய பெண் எழுத்தாளர் எட்டு மாதமாக சிறையில்

சிங்கள பௌத்தராக இருந்து இஸ்லாமியராக மாறி இருக்கும் சர்ச்சைக்கு உரிய எழுத்தாளர் சரா மாலினி பெரேரா துரதிஷ்டமாக இம்முறையும் பெருநாளை சிறையில் கழிக்க வேண்டியவர் ஆகி விட்டார்.


இவர் பஹ்ரெய்னில் குடும்பத்துடன் வசித்து வந்தார். பௌத்தராக இருந்து இஸ்லாமியராக மாறியமை எப்படி? என்பதை From Darkness to Light என்கிற நூலில் விபரமாக எழுதி இருந்தார்.

சுமார் எட்டு மாதங்களுக்கு முன் இலங்கை வந்திருந்தபோது நாட்டுக்கும், அரசுக்கும் எதிராக செயற்பட்டார், தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் இவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இவர் சிறையில் கழித்த இரண்டாவது பெரு நாள் இதுவாகும். இவருக்கு எதிரான வழக்கு கொழும்பு மேல்நீதிமன்றத்தில் இடம்பெறுகின்றது. எதிர்வரும் 27 ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படுகின்றது.

நேற்றைய பெருநாளின்போது இவரின் பிரிவை கடுமையாக உணர்ந்த குடும்பத்தினர் இவரின் விடுதலைக்காக இறைவனிடம் மன்றாடுகின்றனர்

20.11.10

ராமர் கோயிலுக்கு சர்ச்சைக்குரிய நிலம் முழுவதும் தேவை: விஹெச்பி

கோபால்கஞ்ச், நவ.20- அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் முழுவதையும் ராமர் கோயில் கட்டுவதற்கு வழங்கும் வகையில் அரசு சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச பொதுச்செயலர் பிரவீண் தொகாடியா கூறியுள்ளார்.

பிகார் மாநிலம் கோபால்கஞ்சில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொகாடியா கூறியதாவது:

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 90 x 115 அளவுள்ள இடத்தை மூன்றாக பிரிக்க அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை உத்தரவிட்டுள்ளது. இதனால், ராமர் கோயில் கட்ட 30 x 35 அளவுள்ள இடம் மட்டுமே கிடைக்கும். இந்த சிறிய இடம் ராமர் கோயில் கட்ட போதுமானதாக இருக்காது.

சர்ச்சைக்குரிய இடம் தான் ராமர் பிறந்த இடம் என்னும் எங்கள் நிலையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுளளது. அங்கு ராமர் கோயில் கட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தரவேண்டும்.

அனைவரின் ஆதரவையும் வேண்டி நாடு தழுவிய "ஹனுமத் ஜகரன் ஹவன் யக்யா" என்னும் விழிப்புணர்வு பயணத்தை விஹெச்பி தொடங்கியுள்ளது.

இவ்வாறு பிரவீண் தொகாடியா தெரிவித்தார்.

நக்சல் தாக்குதலில் பலியான 2 போலீசாருக்கு முதல்வர் நிதி

சென்னை : சத்திஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்களின் தாக்குதலில் மரணமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் வீதம் 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க, முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் செய்திக் குறிப்பு: சத்திஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 10 காவலர்கள் உயிரிழந்தனர். அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த, மத்திய பாதுகாப்புப் படையில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்த சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம், கல்பகனூர் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகனும் ஒருவர்.

இதுதவிர, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், கான்சாபுரம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்ற காவலர் மற்றொருவர். வீர மரணம் அடைந்த இரண்டு காவலர்களின் தியாகத்தைப் போற்றி அவர்களது குடும்பத்தினருக்கு, முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஐந்து லட்சம் ரூபாய் வீதம் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

பிரதீபா அரபு நாடுகளில் சுற்றுப் பயணம்: நாளை புறப்படுகிறார்

டெல்லி: குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நாளை ஐக்கிய அரபு நாடுகளுக்கு 5 நாளம் பயணமாகப் புறப்படுகிறார்.

இதற்காக அவர் நாளை டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்படுகிறார்.

ஐக்கிய அரபு நாடுகளில் 5 நாட்கள் சுற்றுப் பயணம் மெற்கொள்ளும் அவர், வரும் 25-ம் தேதி வரை அபுதாபி, சார்ஜா, துபாய் உள்ளிட்ட நகர்களில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மேலும், அங்கு நடக்கும் தொழில் அதிபர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

அபுதாபியில் நடக்கவிருக்கும் இந்திய வர்த்தக கண்காட்சியைத் துவக்கி வைக்கிறார். பிரதீபா அரபு நாடுகளுக்குச் செல்வது இது தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் 25-ம் தேதி அவர் சிரியாவுக்குச் செல்கிறார். அங்கு 29-ம் தேதி வரை சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இந்த தகவலை இந்திய வெளியுறவுத்துறை (கிழக்கு) செயலாளர் லதா ரெட்டி தெரிவித்தார்.

காஷ்மீர் : ஈரானுக்கு இந்தியா கண்டனம்

ஈரான் காஷ்மீர் பிரிவினையை ஆதரித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருவதற்கு அந்நாட்டுத் தூதரிடம் இந்தியா தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தியாவில் உள்ள ஈரான் தூதருக்கு இந்திய அரசு கண்டனக் கடிதம் அனுப்பியுள்ளது.

அதில், காஷ்மீர் தொடர்பாக ஈரான் வெளியிடும் கருத்துகள் இந்தியாவின் பிராந்திய ஒற்றுமைக்கு எதிராக உள்ளன. ஈரானின் நடவடிக்கைகள் இந்திய அரசுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. ஈரான் இதுபோன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஜூலை மாதம் முதல் ஈரான் அரசு காஷ்மீர் விஷயத்தில் இந்தியாவுக்கு எதிராக மூன்று முறை கருத்துத் தெரிவித்துள்ளது. காஷ்மீரில் நடைபெறும் போராட்டத்தை ஆதரிக்கிறோம் என்றும் பாலஸ்தீன், ஆப்கானிஸ்தானில் நிலவுவது போன்ற சூழ்நிலை காஷ்மீரிலும் நிலவுகிறது என்றும் ஈரான் தெரிவித்திருந்தது.

ஈரானின் இந்த நடவடிக்கைக்கு ஐ.நா. அவையில் இந்தியா உடனடியாக பதிலடி கொடுத்துள்ளது. வியாழக்கிழமை இரவு நடைபெற்ற ஐ.நா. கூட்டத்தில் ஈரானில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகிறது என்பது தொடர்பான வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டது. இதற்கு முன்னர் இதேபோன்ற வாக்கெடுப்பு வந்தபோது ஈரானை ஆதரித்தும், தீர்மானத்தை எதிர்த்தும் இந்தியா வாக்களித்தது என்பது குறிப்பிடத்தக்கது

மாலேகான் குண்டு வெடிப்புக் குற்றவாளி சுவாமி ஆசிமானந்த் கைது!

மாலேகான், ஹைதராபாத் மக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா ஆகிய இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளில் முக்கியப் பங்காற்றியதாகக் கருதப்படும் சுவாமி ஆசிமானந்தை சிபிஐ வெள்ளிக் கிழமையன்று கைது செய்தது.

சுவாமி ஆசிமானந்த் கடந்த இரண்டு நாள்களாக சிபிஐ மற்றும் ராஜஸ்தான் மாநில தீவிரவாத எதிர்ப்புப் படையினர் ஆகியோரின் தேடுதல் வேட்டையில் சிக்காமல் தப்பித்து வந்தார்.

குஜராத் மாநிலம் டாங்ஸ் பகுதியில் வனவாசி கல்யாண் ஆசிரமம் என்ற பெயரில் ஆசிமானந்த் ஆசிரமம் நடத்தி வருகிறார். நாட்டில் நடைபெற்ற பல்வேறு குண்டு வெடிப்புகளுக்கும் இந்த ஆசிரமத்தில் வைத்தே திட்டம் தீட்டப்பட்டது என காவல்துறையினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தப் பகுதியில் பழங்குடியினருக்காக பள்ளி ஒன்றையும் ஆசிமானந்த் நடத்தி வருகிறார். கிறிஸ்தவ ஆதிவாசிகளை இந்து மதத்திற்கு மாற்றும் பணியையும் இவர் மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

காவித் தீவிரவாத நெட்வொர்க்கின் மூளையாகக் கருதப்படும் சுனில் ஜோஷியுடன் ஆசிமானந்துக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இராணுவ முன்னாள் அதிகாரி புரோஹித் மற்றும் பெண் சாமியார் சாத்வி பிரக்யா ஆகியோருடனும் ஆசிமானந்த்துக்கு தொடர்பு உள்ளதாகக் காவல்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்ற
ன.

17.11.10

ஹஜ் பெருநாள்: தமிழகத்தில் முஸ்லீம்கள் சிறப்பான கொண்டாட்டம்

சென்னை: தமிழகத்தில் ஈதுல் அழ்ஹா எனப்படும் தியாகப்பெருநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அன்பு, பரிவு ஆகியவற்றை நிலைநிறுத்தும் பண்டிகையாக தியாகப்பெருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த திருநாள் இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிறப்பு தொழுகைகள் நாடு முழுவதும் நடைபெற்றன.

தமிழகத்திலும் ஈதுல் அழ்ஹா எனப்படும் தியாகப்பெருநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. மசூதிகள், ஈத்காக்களில் காலையில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. பின்னர் குர்பானி கொடுத்து பண்டிகையை முஸ்லீம்கள் கொண்டாடினர்.

தலைநகர் சென்னையிலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

சில இடங்களில் குர்பானிக்காக ஒட்டகங்களும் வரவழைக்கப்பட்டு அவை குர்பானி கொடுக்கப்பட்டன. நாளை தவ்ஹீத் ஜமாத்தினர் ஹஜ் பெருநாளை கொண்டாயிருப்பதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினரும்,இந்திய தவ்ஹீத் ஜமாத்தினரும் அறிவித்துள்ளனர்.

"ஜெயந்திரர் கைது" புகழ் எஸ்.பி பிரேம்குமார் மரணம்

ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகிய காஞ்சி மடாதிபதிகளை கைதுசெய்து பிரபலம் பெற்ற காவல்துறை கண்காணிப்பாளார் பிரேம்குமார் காலமானார்.காஞ்சி சங்கரராமன் கொலைவழக்கு என்கிற அந்த வழக்கில் ஜெயேந்திரரின் வாக்குமூலத்தை செய்தி ஓடைகளில் காணொளியாக வெளியிட்டவரும் இவரே.

கண்காணிப்பாளராவதற்கு முன்பு ஆய்வாளராகப் பணியாற்றிய போது இராணுவ வீரர் ஒருவரை கை காப்பிட்டு அழைத்துச் சென்று பரபரப்பூட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.அந்த வழக்கில் தான் அண்மையில் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார் பிரேம்குமார்.

.

சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டுவந்த பிரேம்குமார் வடபழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிர்நீத்த பிரேம்குமாருக்கு 57 வயது ஆகிறது.முகப்பேரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களும் துறை சார்ந்த அலுவலர்களும் அவரது உடலை பார்வையிட்டு, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

16.11.10

ஒலிவ மரங்களைக் கொளுத்திவரும் யூத ஆக்கிரமிப்பாளர்கள்

கடந்த ஞாயிற்றுக்கிழமை (14.11.2010) நப்லஸ் பிரதேசத்தில் உள்ள ஸாலிம் கிராமத்தில் பலஸ்தீன் விவசாயிகளுக்குச் சொந்தமான ஏராளமான ஒலிவ மரங்களை சட்டவிரோதக் குடியேற்றத்தில் வசிக்கும் யூத ஆக்கிரமிப்பாளர்கள் தீவைத்துக் கொளுத்தியுள்ளனர்.

உள்ளூர்வாசிகள் சாட்சியமளிக்கையில், கிராமத்தை அடுத்து நிறுவப்பட்டுள்ள சட்டவிரோத இஸ்ரேலியக் குடியிருப்பில் வசித்துவரும் ஆயுததாரிகளான யூத ஆக்கிரமிப்பாளர் குழுவொன்று திடீரென்று தமது ஊருக்குள் நுழைந்து சுமார் 15 தூனம் (1 தூனம் - 1000 சதுர அடிகள்) பரப்புள்ள ஒலிவ் தோட்டங்களைத் தீவைத்துக் கொளுத்தினர் என்றும், அப்பகுதியெங்கும் தீ பரவியதில் நூற்றுக்கணக்கான ஒலிவ மரங்கள் கருகிப் போயின என்றும் தெரிவித்துள்ளனர். யூத ஆக்கிரமிப்பாளர்களின் அடாவடித்தனத்தால் தமது விளைநிலத்தில் ஏற்பட்ட இப் பாரிய சேதத்தின் விளைவாகப் பலஸ்தீன் விவசாயிகள் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேரும் என உள்ளூர்வாசிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னரும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் உள்ள சட்டவிரோதக் குடியிருப்புக்களில் வசிக்கும் யூத ஆக்கிரமிப்பாளர்கள் பலஸ்தீன் விவசாய நிலங்களில் இது போன்ற அழிப்பு வேலைகளைச் செய்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இதயம்கனிந்த ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்!

15.11.10

தீவிரவாதத் தொடர்புடைய இந்துக்கள் அனைவருமே ஆர்.எஸ்.எஸ்.காரர்களே!

தீவிரவாத நடவடிக்கைகளில் தொடர்புடையவர்கள் என்று இதுவரை கைது செய்யபட்ட இந்துக்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். தொடர்புடையவர்களே என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங் கூறியுள்ளார்.

முஸ்லிம்களை தேசி விரோதிகள் என்று எப்போதுமே ஆர்.எஸ்.எஸ். முத்திரை குத்துவதுண்டு. ஆனால், தீவிரவாதத் தொடர்பு காரணமாக கைது செய்யப்பட்ட அனைத்து இந்துக்களுமே ஆர்.எஸ்.எஸ். தொடர்புடையவர்கள்தான் என்று திக் விஜய் சிங் கூறினார்.

முஸ்லிம்கள் தீவிரவாதத்தைப் பரப்புவர்கள் என்று ஆர்.எஸ்.எஸ். இதுவரை கூறி வந்தது. ஆனால் ஆர்.எஸ்.எஸ்.ஸைச் சேர்ந்தவர்கள் தீவிரவாத தொடர்பு காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கைது செய்யப்படும் நிலையில் நீலிக்கண்ணீர் வடிக்கிறது என்றும் அவர் கூறினார்.

நீதிபதி சச்சார் குழுவின் பரிந்துரைகள் பற்றிக் கூறிய அவர், இந்த அறிக்கை ஆதாரப்பூர்வமானவது. இந்த நாட்டில் உள்ள சிறுபான்மையினரின் உண்மை நிலையை பிரதிபலிக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான அரசு, சச்சார் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முயன்று கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் வெள்ளிக் கிழமையன்று நடைபெற்ற முஸ்லிம் தலைவர்களின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய திக் விஜய் சிங், நாட்டின் வறுமை ஒழிப்பில் மதச்சார்பற்ற சக்திகளுடன் முஸ்லிம் அறிஞர்களும் இணைந்து பாடுபட வேண்டும் என்று கோரினார்
.

14.11.10

மருத்துவமனை காமேராவில் சிக்கும் இளம்பெண்கள் – ஷாக் ரிப்போர்ட்

கீரிட வைத்தது நமது அலுவலகத்துக்கு வந்த தொலைபேசி அழைப்பு… “”சார்… என் மனைவிக்கு உடம்பு சரியில்லைன்னு அந்த பிரபல மருத்துவமனைக்கு கூட்டிட்டுப் போயிருந்தேன். செக்கப் பண்ற அறைக்கு கூட்டிட்டுப் போயி உடைகளை எல்லாம் கழட்டி டாக்டர் செக்கப் பண்ணியிருக்காங்க. பிறகு, இடுப்புல இன்ஜெக்ஷன் போடும்போது எதார்த்தமா பார்த்தவ அதிர்ச்சி யாயிருக்கா. அவ ஆடைகள் இல்லாம படுத்துருக்குற பெட்டுக்கு நேரா கேமரா இருந்திருக்கு. பார்த்துட்டு வந்தவ எங்கிட்ட சொல்லி அழுதுக்கிட்டிருக்கா சார். பெண்களை பரிசோதனை பண்ணி இன்ஜெக்ஷன் போடுற அறையில எதுக்கு சார் கேமரா? அதுவும் பெண்களுக்கான சிறப்பு மருத்துவமனையில். என் மனைவி மாதிரி எத்தனை பெண்களோட அந்தரங் கத்தை ரகசியமா படம்பிடிச்சு மிஸ்யூஸ் பண்றாங் கன்னு தெரியல. இந்த கொடூரக் குற்றத்தை நக்கீரன்தான் சார் அம்பலப்படுத்தி… அந்த வக்கிர மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வைக்க ணும்” -என்றார் தழுதழுத்த குரலில் ஒருவர்.

அந்த நபர் குறிப்பிட்டது சென்னை ஆவடிக்குப் பக்கத்திலுள்ள பட்டாபிராம் ரயில்வே கேட் அருகில் இருக்கும் பிரபல கிரேஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைதான். பிரசவத்துக்குப் பெயர் பெற்ற மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் இளம்பெண்களின் அந்தரங்கங்களை ரகசியமாக படம்பிடிக்கிறார்களா? என்கிற அதிர்ச்சியுடனும்… அந்த மருத்துவமனையின் புகழைக் கெடுக்க தவறான தகவலை கொடுத்திருப்பாரா? என்கிற சந்தேகத்துடனும் அந்த மருத்துவமனையை நோட்டமிடக் கிளம்பினோம். நமக்கு தகவல் வந்த 21-ந்தேதி மதியமே.

சி.டி.ஹெச். மெயின்ரோட்டிலிருந்து நாம் உள்ளே நுழையும்போதே மருத்துவமனை கேமரா கண் இமைக்காமல் முறைத்தபடி நம்மை கண்காணித்துக் கொண்டிருந்தது. ரிசப்ஷனில் இன்னொரு கேமரா. மதிய நேரம் கூட்டம் எதுவும் இல்லாததால் மருத்துவமனை ஊழியர்களின் கண்கள் நம்மை சந்தேகத்துடன் பார்க்க… வெளியில் வந்து காத்திருந்தோம்.

மணி… மாலை 6. இளம்பெண்களின் கூட்டம் அலைமோதத் தொடங்கியது. கர்ப்பிணி மனைவியை அழைத்து வந்த கணவர்களில் ஒருவரைப்போல் உள்ளே நுழைந்து ரிசப்ஷனில் நின்றோம். ரிசப்ஷனின் இடதுபுறத்தில் ஃபார்மஸிக்கு பக்கத்து அறையில்தான் கேமரா பொருத்தப் பட்டிருப்பதாக நமக்கு வந்த தகவல். டாக்டரை பார்த்துவிட்டு வரும் இளம் கர்ப்பிணி பெண்கள்… திருமணமாகாத இளம்பெண்கள்… அந்த அறைக்கு சென்று பரிசோதனை + சிகிச்சை பெற்றபடி வெளியே வந்து கொண்டிருந்தனர்.
அந்த நேரம் பார்த்து ஒரு வயதான பாட்டி சிகிச்சைக்காக அந்த அறைக்குள் நுழைய… பட்டென்று அந்தப் பாட்டியின் பேரன்களைப் போல் உள்ளே நுழைந்து “பாட்டிக்கு எப்படிங்க இருக்கு?’ என்று நர்ஸிடம் பேச்சு கொடுத்தபடியே அந்த அறையில் கண்களை சுழல விட்டோம்.

ஆபாச இணையத் தளத்தில் வெளியான சென்னை மருத்துவமனையில் பெண்ணுக்கு தெரியாமல் மருத்துவர் படம் பிடிக்கும் அதிர்ச்சிக் காணொளி

அடிவயிற்றில் ஆணி அடித்தது போல் இருந்தது. பாட்டி பெட்டில் படுத்திருக்க… அவரின் கால் வைத்திருப்பதற்கு நேராக மேலே சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டிருப்பது நம் கண்ணில் பட்டுவிட்டது. அதற்குள் “”சரிங்க… நீங்க வெளியில் போங்க சார்… பாட்டிக்கு இன்ஜெக்ஷன் போடப் போறோம்” என்றபடி நர்ஸ் கதவை சாத்த அடப்பாவமே… எத்தனை எத்தனை இளம்பெண்கள் இந்த இடத்திலே ஆடைகள் அவிழ்க்கப்பட்ட நிலையில் பரிசோதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள்? இதையெல்லாம் வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட்டு யார் யார் பார்க்கிறார்களோ… என்கிற பதைபதைப்புடனும் அந்த வீடியோ கேமரா பொருத்தப்பட்டிருப்பதை எப்படியாவது ஃபோட்டோ எடுக்க வேண்டுமே என்கிற படபடப்புடனும்… பாட்டியைப் பற்றி விசாரிப்பது போல் திரும்பவும் அந்த அறைக்கு உள்ளே நுழைய முயற்சிக்க… அதற்குள் அந்த பாட்டிக்கு சிகிச்சை முடிந்து ஒரிஜினல் பேரன்கள் பாட்டியை அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள்.

இனி வேறு இளம்பெண் அந்த அறைக்குள் சிகிச்சை பெறும்போது நாம் கேமராவுடன் உள்ளே நுழைந்தால் பரபரப்பாகிவிடும்… என்ன செய்வது? நகத்தை கடித்துத் துப்பிக் கொண்டிருக்கும் போதே… ஒரு சின்ன “கேப்’ கிடைத்தது.

நர்ஸ் மருந்து எடுக்க… வேறு அறைக்குப் போக… பெண் நோயாளியும் அந்த அறையில் இல்லாத நேரம்… பட்டென்று அந்த அறைக்குள் நுழைந்து… கண்காணித்துக் கொண்டிருக்கும் கேமராவையே “க்ளிக் க்ளிக்’ என்று ஃப்ளாஷ் போட்டு க்ளிக்கினார் நமது புகைப்படக் கலைஞர்.
அடிவயிற்றில் ஜிலிருடன்… நாம் அந்த அறையிலிருந்து வெளியேற… நல்லவேளை ரிசப்ஷனில் அமர்ந்திருந்த பெண்களும், ஊழியர்களும் அங்கு வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியில் சீரியலை சீரியஸாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
வெளியேறிய நாம்… க்ரேஸ் மருத்துவ மனையின் எம்.டி.யும்… மகப்பேறு மருத்துவ நிபுணருமான டாக்டர் செல்லராணியை 044-26853808 என்ற மருத்துவமனை எண்ணில் தொடர்பு கொண்டோம் -சிகிச்சைக்கு கர்ப்பிணி மனைவியை அழைத்து வந்த கணவனைப் போல்.

“”எதுவா இருந்தாலும் மேடம்கிட்ட நேர்ல வந்து பேசிக் கோங்க” என்று மருத்துவமனை ஊழியர் சொல்ல… நாம் விடாப் பிடியாக கெஞ்சி டாக்டரை லைனில் பிடித்தோம்… நைஸாக.

“”ஹலோ வணக்கம்… டாக்டர் செல்லராணி மேடம்ங்களா?”
“”ம்…?”
“”ஆஹ்… நேத்து என் மனைவியை ட்ரீட்மெண்ட் டுக்காக உங்கக்கிட்ட கூட்டிட்டு வந்தேன் மேடம்…”
“”சரி…”

“”அது… வந்து… இன்ஜெக்ஷன் போடுற ரூம்ல கேமரா இருக்கிறதை பார்த்துட்டு வந்து அழுறா மேடம்.”
“”அப்படியெல்லாம் எதுவும் கேமரா வைக்கலையே?”

“”கேமரா இருக்குங்களே மேடம்?”

“”ப்ச்… கேமரா வைக்கலேங்குறேன்ல” (டென்ஷனாகிறார்.)

“”அதில்ல மேடம்… நானும் வந்து பார்த்தேன் மேடம்… கேமரா இருக்குறதை. எனக்கென்னன்னா… நீங்க டாக்டர், பார்க்கலாம். ஆனா… வேற யாராவது பார்ப்பாங்களேன் னுதான் மனசுக்கு கஷ்டமா இருக்கு”.

“”இங்க பாருங்க… கேமரா கண்ட்ரோல் என் ரூம்லதான் இருக்கு. நான் மட்டும்தான் வாட்ச் பண்ணுவேன். வேற எங்கயும் டிஸ்ப்ளே பண்றதில்ல…”.

“”ஓ… அப்படிங்களா? ட்ரீட்மெண்ட் ரூம்ல கேமரா வெச்சிருக்கீங்களே தப்பில்லையா மேடம்?”.

“”இதுல என்ன தப்பு இருக்கு? இந்த ஹாஸ்பிட்டலில் 14 கேமரா இருக்கு. நீங்க சொல்ற அந்த அறையில் இருக்கிறது சின்ன கேமராதான். ஸ்டாஃப்கள் வேலை பார்க்குறதை கண்காணிக்கத்தான் கேமரா வெச்சிருக்கோம் என்றபடி போனை துண்டித்தார். நக்கீரன்தான் வந்து ஃபோட்டோ எடுத்திருக்கிறார்கள் என்று முன்பே தெரிந்திருந்தால் மருத்துவமனை நிர்வாகம் உஷாராகியிருக்கும். மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் செல்லராணி டேவிட்டின் “கேமரா பொருத்தப்பட்டிருப்பது உண்மைதான்’ என்ற ஒப்புதல் வாக்குமூலமும் நக்கீரனுக்கு கிடைத்திருக்காதே? அதனால்தான் இந்த சைலண்ட் ஆபரேஷன்.

கிரேஷ் மருத்துவமனை ஊழியர் ஒருவரோ “”எல்லா ரூம்லேயும் சி.சி.டி.வி. கேமரா வெச்சிருக்குறதால… நர்ஸ், லேப் டெக்னீஷியன்கள்னு வேலை பார்க்குற பொம்பளப் பிள்ளைங்க ட்ரெஸ் மாத்துறது கூட இந்த கேமராவில் பதிவாகுது. பாவம்… அந்தப் பிள்ளைங்களுக்கு தெரியாது. இவங்களோட இன்னொரு கிரேஸ் ஹாஸ்பிட்டல் பக்கத்துல இருக்கிறதால… டாக்டர் செல்லராணி அங்கே போய்டுவாங்க. அந்த நேரத்துல அவருடைய கணவர் டேவிட்தான் கேமரா மானிட்டரில் உட்கார்ந்திருப்பாரு. அவர் டாக்டருமில்ல… ஆனா… இப்படி எல்லா ரூம்லயும் என்ன நடக்குதுன்னு பார்ப்பாரு. கேமராவில் பதிவானதைக் காண்பித்து ப்ளாக் மெயில் பண்ணியே சில சீனியர் டாக்டர்கள் அந்தப் பெண்களை தங்கள் வலையில் வீழ்த்தியிருக்காங்க. கர்ப்பிணி பெண்கள் மட்டுமில்ல… திருமணமாகாத இளம்பெண்களும், கல்லூரி மாணவிகளும் இந்த மருத்துவமனைக்கு வந்து அந்த அறையில்தான் சிகிச்சை எடுத்துக்குறாங்க” என்று வேதனையுடன் சொன்னவர் “”ஏற்கனவே நோயாளியின் கிட்னியை திருடியதா பெரும் பரபரப்பானாங்க இந்த டாக்டர். அப்புறம் இளம்பெண்ணுக்கு ஆபரேஷன் பண்றேன்னு பாதி ஆபரேஷன் பண்ணிட்டு மீதியை வேற ஹாஸ் பிட்டலுக்குப் போயி பண்ணிக்கோங்கன்னு திடீர்னு கைவிரிக்க… அந்த இளம்பெண் இறந்துட்டாங்க…. இவ்வளவு நடந்தும் இந்த மருத்துவமனைக்கு பெண்கள் கூட்டம் குவியும். அதை இப்படி வக்கிரமா வீடியோ பதிவு செஞ்சு கணவனை ரசிக்க வைக்கிறாங்களே ச்சே” என்கிறார் நொந்தபடி.

“”கூச்சம், பயம் காரணமாக ஒரு நோயாளி தனது உடலை காண்பிக்க மறுத்துவிட்டால்… வற்புறுத்தி டாக்டர் பரிசோதனை செய்வதே சட்டப்படி குற்றம். அப்படியிருக்க… அதே அந்தரங்கத்தை நோயாளிகளுக்கு தெரியாமலேயே இரகசியமாக படம்பிடித்து டாக்டரோ அல்லது வேறு யாரோ ரசிப்பது… மிஸ் யூஸ் பண்ணுவது பெரும் குற்றம்” என்கிறார்கள் பிரபல மருத்துவர்கள்.

கிரேஸ் என்றால் மகிமை என்று அர்த்தம். இப்படிப்பட்ட வக்கிர கேமராவால் மகிமை இழந்து நிற்கிறது கிரேஸ் மருத்துவமனை. காவல்துறைதான் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

12.11.10

யு.எஸ் கடற்கரையில் மர்ம ஏவுகணை! பென்டகன் விசாரணை

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரையில் மர்ம ஏவுகணை பறந்தது பற்றி அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில், கலிபோர்னியா கடல்பகுதி உள்ளது இங்கு வானில் ஏவுகணை ஒன்று பறந்ததினால் ஏற்பட்ட புகை தடத்தை ஹெலிகாப்டரில் சென்ற பத்திரிக்கையாளர்கள், தங்கள் கேமராவில் பதிவு செய்து பென்டகன் அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர். இது குறித்து அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்க கடல் பகுதியில் எந்த வித ராணுவ பயிற்சியும் நடைபெறாத நிலையிலும். தனியார் ஆயுத நிறுவனங்கள் தாங்கள் நடத்தப்போகும் ஏவுகணை சோதனை பற்றி, முன்கூட்டியே தகவல் தெரிவிக்காத நிலையிலும் அங்கு ஏவுகணை பறந்திருப்பது ஆச்சர்யமாக உள்ளது. வெளிநாட்டு போர் கப்பல்கள், அமெரிக்கா அருகே போர் பயிற்சி மேற்கொள்வதற்கான வாய்ப்பும் இல்லை என பென்டகன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எங்கிருந்து ஏவுகணை வீசப்பட்டது என்பது குறித்து விசாரணை நடக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க ராணுவத்தின் மாஜி துணை அமைச்சர் ராபர்ட் எல்ஸ்வொர்த், ஒரு வேளை நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து இந்த ஏவுகணை வீசப்பட்டிருக்கலாம் என்றார்.

சோனியாவை விமர்சித்த ஆர் எஸ் எஸ் முன்னாள் தலைவர் மீது வழக்குப்பதிவு

சோனியாகாந்தியை அமெரிக்க உளவாளி என்றும், இந்திராகாந்தி, ராஜிவ்காந்தியின் படுகொலைகளுக்கு அவரே சூத்ரதாரி என்றும் ஆர் எஸ் எஸ் முன்னாள் தலைவர் சுதர்சன் அண்மையில் ஒரு பொதுகூட்டத்தில் பேசியிருந்தார்.

அது தொடர்பாக போபால் தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் காங்கிரஸ் பிரமுகர் பிரதீப் சர்மா என்பவர் அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளார்

சுதர்சனுடைய இந்த அவமதிப்புப் பேச்சு தனக்கு மனதில் இரணத்தை உண்டாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள மனுதாரர், குற்றஞ்சாட்டப்பட்ட சுதர்சனின் பேச்சினை ஆராய்ந்து அவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் ப்ரதீப் சர்மா தனது மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்

இளம் பெண் இஷ்ரத் கொலை வழக்கை எஸ்ஐடி விசாரிக்கத் தடை கோரிய குஜராத் கோரிக்கை நிராகரிப்பு

டெல்லி: குஜராத்தில் இளம் பெண் இஷ்ரத் ஜஹான் கொலை செய்யப்பட்ட வழக்கை சிறப்பு புலனாய்வுப் படை விசாரிக்க தடை கோரிய குஜராத் அரசின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்து விட்டது.

இளம் பெண் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேர் அகமதாபாத் அருகே சுட்டுக் கொல்லப்பட்டனர். நான்கு பேரும் தீவிரவாதிகள் என குஜராத் அரசு தெரிவித்தது. ஆனால் இவர்கள் நான்கு பேரும் வேண்டும் என்றே போலியான என்கெளன்டரில் கொல்லப்பட்டதாக இஷ்ரத்தின் தாயார் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் இஷ்ரத்தின் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த நிலையில் இஷ்ரத் கொலை வழக்கை விசாரிக்க குஜராத் உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுப் படையை அமைத்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து குஜராத் அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது.

இதை விசாரித்த நீதிபதிகள் சுபாஷன் ரெட்டி, நிஜ்ஜார் ஆகியோர்அடங்கிய பெஞ்ச், குஜராத் அரசின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டனர்.

குஜராத் அரசு ஒரு எஸ்ஐடியை அமைத்திருந்தாலும், அதன் விசாரணை சந்தேகத்திற்குரியதாக இருந்தால் புதிய விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட கோர்ட்டுகளுக்கு அதிகாரம் உண்டு. அந்த அதிகாரத்தை எப்படி ஒரு மாநில அரசு கேள்வி கேட்க முடியும். குஜராத் அரசின் கோரிக்கை வியப்பாக உள்ளது.

எனவே குஜராத் உயர்நீதிமன்றம், புதிய எஸ்ஐடியை அமைத்து உத்தரவிட்டிருப்பதில் தலையிட நாங்கள் விரும்பவில்லை என்று உத்தரவில் கூறியிருந்தனர்.

ஏற்கனவே கோத்ரா கலவரம், சோராபுதீன் போலி என்கெளன்டர் என பெரும் சிக்கலில் உள்ள குஜராத் அரசுக்கு தற்போது இஷ்ரத் ஜஹான் வழக்கின் மூலம் மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது

முஸ்லிம்களுடன் புரிந்துணர்வு நோக்கி நகர்கிறோம் - ஒபாமா

இந்திய சுற்றுப் பயணத்தை அடுத்து அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தோனேசியாவில் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் முஸ்லிம்களின் நம்பிக்கையைப் பெறுவதில் முதலடியை எடுத்து வைத்துள்ளதாகவும் , இதில் நீண்ட தொலைவு பயணிக்க உள்ளதாகவும் சொன்னார் . "இந்தோனேசியா என்வாழ்வில் ஓர் அங்கம் என்றார் ஒபாமா கடந்த புதன்கிழமையன்று இந்தோனேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய ஒபாமா இந்தோனேசியா என் வாழ்வின் அங்கம் என்று கூறினார் தனது சிறு வயதில் அங்கு கழித்த நாள்களை நினைவு கூர்ந்தார். தன் தாய் இந்தோனேசியர் ஒருவரை மறுமணம் செய்து கொண்டது குறித்தும், அதன் பின்னர் தான் இந்தோனேசியாவில் சில ஆண்டுகள் வசித்தது குறித்தும் ஒபாமா தன் பேச்சில் குறிப்பிட்டார். அதிபராக பதவியேற்ற பின்னர் ஒபாமா தன் சொந்த வாழ்க்கை குறித்து பொது மேடையில் வெளிப்படையாக அதிகம் பேசியது இப்போதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியா முஸ்லிம் நாடுகள், மேற்கத்திய நாடுகள் ஆகிய இரண்டுக்குமே முன்னுதாரனமாகத் திகழ்வதாக அவர் புகழாரம் சூட்டினார். மேலும் அவர் பேசுகையில் "நீண்ட நாள்களாக சர்வாதிகாரத்தின் பிடியில் இருந்த இந்தோனேசியா இப்போது ஜனநாயக பாதைக்கு வந்துள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு இந்தோனேசியா ஓர் உதாரணமாகத் திகழ்கிறது. இங்குள்ள கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவை இந்நாட்டு மக்களின் ஒற்றுமைக்கும் சகிப்புத் தண்மைக்கும் எடுத்துக் காட்டாக விளங்குகின்றன.

என் இந்தோனேசிய வாழ்க்கையின்போது நான் பலவற்றை இங்கு கற்றுக் கொண்டேன். இங்கு படித்தபோது நானும் என், பள்ளி நண்பர்களும் ஒரு நாள் நான் அமெரிக்க அதிபராக உயர்வேன் என துளியும் எதிர்பார்க்கவில்லை. நெல்லின் மீது ஓடி விளையாடியது, பட்டம் விட்டது, பட்டாம் பூச்சி பிடித்தது போன்ற நினைவுகள் எனக்கு இப்போது வருகின்றன. இந்தோனேசியாவில் இருந்து ஒழுங்கற்ற இளைஞனாக சென்ற நான். இப்போது அமெரிக்க அதிபராக இங்கு வந்துள்ளேன்' என்றார் ஒபாமா.

முன்னதாக மத்திய ஜகார்தாவிற்குச் சென்ற ஒபாமாவும் அவரது மனைவி மிச்சேலும் தெற்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய மசூதியான இஸ்திக்லால் மசூதிக்குச் சென்றனர். அவரை வரவேற்ற இமாம் ஹாஜி முஸ்தபா அலி யாக்கூப், அந்த மசூதியின் வரலாறு, கட்டடக் கலை ஆகியவை குறித்து ஒபாமாவுக்கு எடுத்துரைத்தார். இந்த மசூதி ஒரு கிறிஸ்தவரால் வடிவமைக்கப்பட்டது என்ற தகவலையும் ஒபாமாவிடம் கூறினார் இமாம்.

அதிபர் ஒபாமாவின் ம்னைவி மிச்சேல் முழுவதுமாக உடல் மறைக்கப்பட்ட பேண்ட் மற்றும் மேல் ஆடை அணிந்து வந்திருந்தார் தலையையும் அவர் போர்த்தி வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் பேசினார்.

பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யாசர் அராபத்தின் 6-வது நினைவு நாளையொட்டி மேற்குகரைப்பகுதியின் ரமல்லாஹ் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் பேசினார்.

மத்திய அரசு மீது அத்வானி புகார்

புதுடில்லி:"சி.பி.ஐ.,யை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது' என, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி குற்றம் சாட்டியுள்ளார்.பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், பா.ஜ.,வின் பார்லிமென்ட் குழுக் கூட்டம் நடந்தது.


இதில், அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:பயங்கரவாத செயல்களில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினருக்கு தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த விவகாரத்தில், சி.பி.ஐ.,யை மத்திய அரசு தவறாக கையாளுகிறது. இந்த அரசு தான், ஊழல்களில் அதிகமாக ஈடுபட்டுள்ளது. காமன்வெல்த் விளையாட்டு போட்டியில், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் ஊழல் நடந்துள்ளது.இதில், டில்லி அரசு, மத்திய அமைச்சர்கள், விளையாட்டு துறை அமைச்சர், நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் உள்ளிட்டோர் அனைவருக்கும் இந்த ஊழலில் தொடர்புள்ளது.


இது தவிர, ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் வீடு ஒதுக்கீட்டில் ஊழல் என்று ஏராளமான ஊழல்கள் நடந்துள்ளன. இந்த ஊழல் விவகாரங்களை விசாரிக்க பயன்படுத்தாமல், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பழி சுமத்துவதற்கு பயன்படுத்துகின்றனர்.அசோக் சவானையும், சுரேஷ் கல்மாடியையும் பதவி நீக்கம் செய்வது மட்டும் போதாது. ஊழல் குறித்து, விரிவான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.இவ்வாறு அத்வானி கூறினார்.

10.11.10

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மசூதி: பார்வையிட்டார் ஒபாமா

ஜாகர்தா, நவ.10- இந்தோனேசியாவில் உள்ள தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மசூதியை அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று பார்வையிட்டார்.

இஸ்டிக்லால் மசூதிக்கு வந்த ஒபாமாவிடம் அதன் சிறப்பு குறித்து இமாம் விளக்கினார். அதன் அருகில் உள்ள தேவாலயத்தில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் விழாவின்போது மசூதியின் வாகன நிறுத்துமிடத்தை தேவாலயத்துக்கு வரும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்வதாக இமாம் எடுத்துக் கூறினார். இத்தகவலை பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது ஒபாமா சுட்டிக்காட்டினார்.

இந்தோனேசியாவில் பல்வேறு மதத்தினர் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதற்கு இந்த மசூதி ஓர் உதாரணம் என்று ஒபாமா குறிப்பிட்டார்.

கோவையில் குழந்தைகளை அநியாயமாக கொன்ற கொலையாளி, என்கவுன்‌டரில் கொலை

கோவை : கோவை நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி குழந்தைகள் இருவரை கடத்தி, பாலியல் பலாத்காரத்துக்கு பின் வாய்க்காலில் தள்ளி ஈவு இரக்கமின்றி கொன்ற கொடூர கொலைகாரன் மோகன்ராஜ் என்ற மோகனகிருஷ்ணன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஏகோபித்த ஆதரவு கிடைத்திருக்கிறது, அனைவரும் தமிழக போலீசாரை பாராட்டியுள்ளனர். கொல்லப்பட்ட குழந்தைகளின் தெருவில் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இன்று மற்றொரு நகராசுரன் கொல்லப்பட்ட நாள் என இப்பகுதி மக்கள் ‌கருத்து தெரிவித்துள்ளனர்.


கோவையில் நடந்த சம்பவம் முழு விவரம் : கொலை குற்றவாளிகளான மோகன்ராஜையும், மனோகரனையும் போலீசார் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது குற்றவாளிகளை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி வெரைட்டிஹால் ரோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் கோபிநாத், சம்பவம் குறித்து விசாரித்ததுடன், போலீஸ் காவலில் செல்ல சம்மதமா? என குற்றவாளிகளிடம் கேட்டார். அதற்கு அவர்கள், ‌போலீசுடன் செல்ல தயாராக இருப்பதாக ‌தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கியது.


சுட்டுவிட்டு தப்பி ஓட முயன்றான்: கோர்ட் உத்தரவைத் தொடர்ந்து இன்று அதிகாலை 5. 30 மணி அளவில் போலீசார் குற்றவாளிகள் இருவரையும் விசாரனைக்காக அழைத்து சென்றனர். வெள்ளளூர் மாநகராட்சி குப்பை கிடங்கு அருகே சென்றபோது, ‌கொடூர கொலைகாரன் மோகன்ராஜ் போலீசாரிடம் இருந்த துப்பாக்கியைப் பிடுங்கி, போலீசாரை நோக்கி சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி ஓட முயன்றான். அவன் சுட்டதில் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி மற்றும் முத்துமாலை ஆகிய போலீசார் காயம் அடைந்தனர்.


குற்றவாளி தப்பி ஓடுவதை பார்த்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மோகன்ராஜை சுட்டார். இதில் மோகன்ராஜ் தலையிலும், மார்பிலும் குண்டு பாய்ந்தது. மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தான். மோகன்ராஜ் சுட்டதில் காயமடைந்த போலீசார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது மோகன்ராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான மனோகரன் ‌போத்தனூர் காவல் நிலையத்தில் போலீஸ் கஸ்டடியில் இருக்கின்றான். அவனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


இது தான் எங்களுக்கு உண்மையான தீபாவளி பெற்றோர்கள் கண்ணீர் மகிழ்ச்சி: கோவை பெற்றோர்கள் பேட்டி: குழந்தைகளை கடத்தி கொன்ற கொடூரனை சுட்டுக்கொன்ற இந்நாள் தான் எங்களுக்கு உண்மையான தீபாவளி என குழந்தைகளை பறிகொடுத்த தாய்- தந்தையர் கூறியுள்ளனர். இன்று போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம் குறித்து நிருபர்களிடம் பேசிய ரஞ்சித்குமார் தம்பதியினர் மேலும் கூறியதாவது: எங்களுடைய செல்லக்குழந்தைகள் முஸ்கின் , ரித்திக் இழந்த துயரத்தில் நாங்கள் தீபாவளி கொண்டாடவில்லை. இன்று தான் நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். நகராசுரனை கொன்றது போல் இவனை கொன்ற இந்நாள்தான் எங்களுக்கு தீபாவளி.


கமிஷனர் சைலேந்திரபாபுவின் அதிரடி நடவடிக்கையால்தான் இது நடந்திருக்கிறது. இவரை நாங்கள் பாராட்டுகிறோம். இவ்வளவு சீக்கிரம் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை. இது போன்ற என்கவுன்டர் மூலம் யாருக்கும் இந்த கொடூர எண்ணம் வராமல் போகட்டும். இவ்வாறு அவர் கூறினார். இன்றைய என்கவுன்டர் நடந்ததையடுத்து ரங்கேகவுடர் தெருவில் மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். குற்றவாளிக்கு சரியான தண்டவை வழங்கப்பட்டிருக்கிறது என போலீசாருக்கு பாராட்டுக்கள் தெரிவித்தனர்.


தற்காப்புக்காகவே சுட்டோம் : கமிஷனர் பேட்டி ; இன்று போலீசார் நடத்தி முடித்த என்கவுன்டர் குறித்து கமிஷனர் சைலேந்திரபாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியின் போது அவர் கூறியதாவது: இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மோகன்ராஜ் என்ற மோகனகிருஷ்ணன் மற்றும் மனோகரன் ஆகிய இருவரையும் தனித்தனி வேனில் நேரிடை விசாரணைக்காக காலை 5. 30 மணி அளவில் பொள்ளாச்சிக்கு அழைத்து சென்றோம். இந்த வழியில் ஈச்சனாரி ரயில்வே கேட் அடைக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து போத்தனூர் வழியாக மாற்று வழியில் செல்ல அழைத்து சென்றோம்.


மாநகராட்சி குப்பைத்தொட்டி அருகே சென்றபோது சப்.இன்ஸ்பெக்டர் ஜோதியின் பிஸ்டலை பிடுங்கி சுட்டு விடுவதாக மிரட்டி கேரளா நோக்கி செல்லுமாறு மிரட்டினான். இதனையடுத்து எஸ்.ஐ.,க்கள் ஜோதி, முத்துமாலை ஆகிய இருவரையும் நோக்கி சுட்டான். ஜோதிக்கு இடது கையிலும், முத்துமாலைக்கு வயிற்றுப்பகுதியிலும் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து உஷாரான இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை கையில் இருந்த பிஸ்டல் துப்பாக்கி கொண்டு மோகனகிருஷ்ணனை சுட்டார். இதில் இவனுக்கு தலை யில் நெற்றிப்பகுதி மற்றும் மார்பு பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. இவனை ஆஸ்பத்திரி கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டான். தற்‌காப்புக்காகவே இநத என்கவுன்டர் நடத்தி முடிக்கப்பட்டது . இவ்வாறு சைலேந்திரபாபு கூறினார்.


குழந்தைகள் கடத்தல் எப்படி நடந்தது ? : கோவை, ரங்கேகவுடர் வீதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார்; துணிக்கடை உரிமையாளர். இவருக்கு முஸ்கின் (11), ரித்திக் (9) ஆகிய குழந்தைகள் இருந்தனர். அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த முஸ்கினும், ரித்திக்கும் கடந்த 29ம்தேதி காலை வழக்கம்போல வீட்டில் இருந்து பள்ளிக்கு கிளம்பினர். வழக்கமாக குழந்தைகளை அழைத்துச் செல்லும் கால் ‌டாக்ஸிக்கு பதிலாக வேறு ஒரு கால் டாக்சி வந்தது. அதனை ஓட்டிய டிரைவர் இதற்கு முன்பு முஸ்கினையும், ரித்திக்கையும் பள்ளிக்கு அழைத்து சென்ற டிரைவர் என்பதால் குழந்தைகள் இருவரும் பள்ளிக்கு அழைத்து செல்லத்தான் கால்டாக்ஸி வந்திருப்பதாக எண்ணி அதில் ஏறினார்கள். ஆனால் அந்த வேன் பள்ளிக்கு செல்லாமல் வேறு பாதையில் சென்றது.


குழந்தைகள் இருவரையும் கடத்தி, தந்தை ரஞ்சித்குமாரிடம் பணம் பறிக்கலாம் என்ற எண்ணத்துடன் கால்டாக்ஸி டிரைவர் அவர்களை கடத்திச் சென்றான். போகும் வழியில் தனக்கு துணையாக தனது நண்பனையும் அழைத்துக் கொண்ட அந்த டிரைவர், சிறுமி முஸ்கினை நண்பனுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். பின்னர் போலீசில் மாட்டிக் கொள்வோமோ என பயந்த அவர்கள், குழந்தைகளை கொடூரமாக தண்ணீரில் தள்ளி விட்டு கொலை செய்தான்.


கோவையை உலுக்கிய சம்பவம் : கோவை நகரையே உலுக்கிய இந்த கொடூரத்தை அரங்கேற்றிய அரக்க கொலையாளிகளான ‌கால்டாக்ஸி டிரைவர் மோகன்ராஜி என்ற மோகனகிருஷ்ணன் (33), அவரது நண்பன் மனோகரன் (23) ஆகியோரை போலீசார் துரிதமாக செயல்பட்டு கைது செய்தனர்.பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். ஒன்றுமே அறியாத குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொன்ற கொலையாளிகள் என கேள்விப்பட்டதும், சிறையில் இருந்த மற்ற குற்றவாளிகள், அவர்களை அடிக்க பாய்ந்த சம்பவமும் நடந்தது.


சிறுமி முஸ்கினை பாலியல் பலாத்காரம் செய்து ஈவு இரக்கமின்றி கொன்ற கொலையாளி மோகன்ராஜையும், அவனது நண்பனையும் விசாரணை இன்றி தூக்கில் போட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்திருந்தனர். முஸ்கின் மற்றும் ரித்திக்கின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற பலரும், இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்கக் கூடாது ; குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், வழக்கில் உ‌டனடியாக தீர்ப்பு வழங்கி தூக்கில் போட வேண்டும் என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மோகன்ராஜ் போலீசாரால் சுட்டுக்கொன்ற சம்பவம் கோவை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

9.11.10

அமைதிப் பேரணியினர்மீது இஸ்ரேலின் அடாவடித் தாக்குதல்

மேற்குக் கரையைச் சேர்ந்த கிராமமொன்றில் தமக்குச் சொந்தமான நிலத்தைப் பலவந்தமாக அபகரித்து, அதைச் சூழ இஸ்ரேலிய பிரிவினைச் சுவரைக் கட்டியுள்ள இஸ்ரேலின் அத்துமீறலை எதிர்த்து அமைதிப் பேரணியில் கலந்துகொண்ட பலஸ்தீன் பொதுமக்கள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் அடாவடித் தாக்குதல் நடாத்தியதில் பலர் படுகாயமுற்றனர்.


கடந்த வெள்ளிக்கிழமை (05.11.2010) அதிகாலையில் நபி ஸாலிஹ் கிராமத்தைத் திடீரென சுற்றிவளைத்துக் கொண்ட ஆக்கிரமிப்புப் படையினர், பலஸ்தீன் மக்களின் வீடுகளை நோக்கி சரமாரியான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களால் தமக்கு இழைக்கப்பட்டு வரும் அட்டூழியங்களுக்கு சாத்வீகமான முறையில் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மக்களை ஒருங்கிணைத்து வரும் பலஸ்தீன் செயற்பாட்டாளர்களான பாஸிம், முகம்மது தமீமி ஆகிய இருவரின் வீடுகளும் கடும் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளன. வெள்ளிக்கிழமை தோறும் இடம்பெறும் இஸ்ரேலிய பிரிவினைச் சுவருக்கு எதிரான அமைதிப் பேரணியில் கலந்துகொள்ளும் பட்சத்தில் அவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

எனினும், இந்த அச்சுறுத்தல்களை எல்லாம் மீறி வழமை போலவே குறிப்பிட்ட நேரத்தில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் செயற்பாட்டாளர்கள் அனைவரும் பலவந்தமாக அபகரிக்கப்பட்டுள்ள பலஸ்தீன் நிலப்பகுதியில் ஒன்று திரண்டனர். அவர்களை அங்கிருந்து கலைக்குமுகமாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் கண்ணீர் புகைக்குண்டுகளையும் கைக்குண்டுகளையும் எறிந்ததோடு, துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டனர்.

இத் தாக்குதல் சம்பவத்தின்போது மூன்று பலஸ்தீனர்கள் படுகாயமுற்றதோடு மற்றும் பலர் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டனர். இதேவேளை, கண்ணீர்ப் புகைக்குண்டு வந்து விழுந்ததில் அமெரிக்கப் பிரஜையான பெண் செயற்பாட்டாளர் ஒருவரும், 16 வயதுப் பலஸ்தீன் சிறுவன் ஒருவனும் படுகாயமுற்றுள்ளனர். இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை பலஸ்தீன் வீடுகள்மீது மேற்கொண்ட குண்டுவீச்சுக்களின் விளைவாக வீட்டுக்குள் இருந்த 21 வயதான பலஸ்தீன் பெண்மணி ஒருவர் படுகாயமுற்று மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் இடம்பெற்ற எதிர்ப்புப் பேரணி, முன்னாள் பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலாளர் ஆர்தர் ஜேம்ஸ் பெல்ஃபர், லோர்ட் ரொத்சைல்ட் அவர்களுக்கு 'பலஸ்தீனம் யூதர்களின் தாயகம்' என்பதைத் தாம் முழுமனதோடு அங்கீகரிப்பதாய் பகிரங்கமாகத் தெரிவித்து உத்தியோகபூர்வ மடலொன்று அனுப்பியதன் மூலம் 1917 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பெல்ஃபர் பிரகடனத்தின் 93 ஆம் ஆண்டு நிறைவை நினைவுகூர்வதாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி கிராமத்தில் அமைதிப் பேரணியினர்மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களால் ஊடகவியலாளர்களும், உள்ளூர் புகைப்படப்பிடிப்பாளர் ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர். பலஸ்தீன் பொதுமக்களின் நியாயமானதும் சாத்வீகமானதுமான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதைக் கைவிட்டு, நபி ஸாலிஹ் கிராமத்திலிருந்து விட்டு வெகுவிரைவில் வெளியேற வேண்டும் என்று ஊடகவியலாளர்களுக்கு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களால் பெரும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது