தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.11.11

பள்ளிகளிலும் பகவத் கீதா கட்டாயம்-காவிமயமாக்கும் முயற்சி


மத்திய பிரதேச மாநிலத்தில் அனைத்து பள்ளிகளிலும் பகவத் கீதா கற்று கொடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் சிவ்ராஹ் சிங் செளஹான் அறிவித்துள்ளார். இதற்கு அம்மாநில எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சி மற்றும் சிறுபான்மை மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பகவத் கீதா பள்ளியில் கற்று கொடுப்பது, மாநிலத்தை காவிமயமாக்கும் முயற்சி என்றும், இந்தியாவின் மத சார்பின்மை கொள்கைக்கு எதிரானது என்றும் காங்கிரஸ் கட்சியின் பத்திரிக்கை தொடர்பாளர் மானக் அகர்வால் தெரிவித்துள்ளார்.எனினும் முதல்வர் சிவ்ராஜ் சிங், எதிர்கட்சிகள் மற்றும் சிறுபான்மை மக்களின் எதிர்ப்பு குறித்து கவலைப்படாமல், பகவத் கீதாவில்

கடாபியின் மகன் சைஃப் அல் இஸ்லாம் கைது


லிபியாவின் முன்னாள் அதிபர் மௌமர் கடாபியின், மகன் சைப் அல் இஸ்லாம் தெற்கு லிபியாவில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.இதனை தேசிய இடைக்கால கவுன்சிலும் உறுதிப்படுத்தியுள்ளது.லிபியாவின் தெற்கு பாலைவன நகரமான சின்ரனில் இவர் சுற்றி வளைக்கப்பட்டுள்ளார். அரேபிய உடையில் சாதாரணமாகவே இருந்துள்ளார். இவர் கைது செய்யப்பட்டதை

கோலாகலமாக நடக்கும் 30வது ஷார்ஜா புத்தகக் கண்காட்சி!


ஷார்ஜா:ஷார்ஜாவில் 30வது புத்தகக் கண்காட்சி நவம்பர் 16ம் தேதி துவங்கியது. ஷார்ஜா ஷேக் ஸுல்தான் பின் முஹம்மத் அல் காஸிமி இந்தக் கண்காட்சியைத் துவக்கி வைத்தார். பல நாடுகளின் பதிப்பகங்கள் பங்குபெறும் இந்தக் கண்காட்சியில் இந்திய பதிப்பகங்கள் அதிக ஸ்டால்களைப் போட்டுள்ளதால் அனைவரின் கவனமும் அங்கே திரும்பியுள்ளது.

முத்த விவகாரம்: சட்ட நடவடிக்கை-வாடிகன் முடிவு

பிரபல எகிப்து இமாம் ஒருவரை போப் பெனடிக்ட் உதட்டோடு உதடாக முத்தமிடுவது போன்று வெளியிடப்பட்ட பெனட்டன் நிறுவனத்தின் விளம்பரம் தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாடிகன் அறிவித்துள்ளது.எகிப்து நாட்டின் அல்-அஸார் மசூதி இமாம் முகமது அகமது அல் தயீபை போப் உதட்டில் முத்தமிடுவது போன்ற படத்துடன் மிகப்பெரிய

கோர்ட் வளாகத்தில் முன்னாள் அமைச்சர் சுக்ராமுக்கு அடி, உதை

புதுடெல்லி, நவ. 20 -  தொலைத் தொடர்புத் துறைக்கு கேபிள் வழங்குவதற்காக தனியார் நிறுவனத்திடம் லஞ்சம் பெற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் சுக்ரா முக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி அறித்த சில நிமிடங்களில் கோர்ட் வளா கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காரணம் தண்டனை பெற்ற சுக்ராமுக்கு கோர்ட் வளாகத்தில் அடி, உதை விழுந்தது

மப்புக்கு ஆப்பு!! வருகிறது புது சட்டம்!?


புதுடில்லி:போக்குவரத்து விதிகளை கடுமையாக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா, பார்லிமென்டில் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். குடித்து விட்டு வாகனம் ஓட்டினால், ஓட்டுனர் உரிமம் ரத்து அல்லது மூன்று மாத சிறைத் தண்டனை ஆகிய கடுமையான தண்டனைகள் உண்டு.

பாகிஸ்தான் தூதர் அமெரிக்காவில் தஞ்சம் கேட்டாரா?


அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் உசேன் ஹக்கானி ஒரு சர்ச்சையில் சிக்கி கொண்டார். பாகிஸ்தான் அதிபர் சர்தாரி அமெரிக்க முன்னாள் ராணுவ தளபதி மைக் முல்லனுக்கு எழுதிய கடிதத்தை ஹக்கானி தான் கொண்டு போய் கொடுத்தார் என்றும் அந்த கடிதத்தையே இவர் தான் வடிவமைத்து கொடுத்தார் என்றும் வதந்திகள் வெளியாகி உள்ளன. இதனால்

தமிழ்நாடு பஸ் கட்டண உயர்வு: கட்டண விவரங்கள்!


தமிழ்நாட்டில் பஸ் கட்டண உயர்வு நேற்று முதல் உடனடியாக அமலுக்கு வந்தது. சென்னையில் இருந்து திருச்சிக்கு ரூ.235-ம், மதுரைக்கு ரூ.325-ம், நெல்லைக்கு ரூ.440-ம், கோவைக்கு ரூ.395-ம், தஞ்சாவூருக்கு ரூ.280-ம் வசூலிக்கப்படுகிறது. தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி கொடுக்காததால், மரணப்படுக்கையில் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களை