தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.1.11

டாக்டர் சென்னின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று. விசாரணையை கண்காணிக்க அனுமதிக்க வேண்டுமென ஐரோப்பிய யூனியன்

புதுடெல்லி,ஜன.24:அநியாயமாக தேசத்துரோக குற்றஞ்சாட்டி, ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட மனித உரிமை ஆர்வலர் டாக்டர் பினாயக் சென்னின் மேல்முறையீட்டு மனுவை சட்டீஷ்கர் உயர்நீதிமன்றம் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கிறது.

மேல்முறையீட்டு மனு விசாரணையை கண்காணிக்க தங்கள் பிரதிநிதிகளை அனுமதிக்க வேண்டுமென ஐரோப்பிய யூனியன் இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பெல்ஜியம், டென்மார்க், ஜெர்மனி, ஹங்கரி,பிரான்சு, சுவீடன், பிரிட்டன் ஆகிய நாடுகளின் தூதரக அதிகாரிகளை நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என கோரியதாக ஐரோப்பிய யூனியனின் பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.

சென்னின் சிறைத் தண்டனைக் குறித்து தங்களது கவலையை இந்திய அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளதாகவும் அக்குழு தெரிவிக்கிறது.

ஐரோப்பிய யூனியனின் கோரிக்கையை வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கும் சட்டீஷ்கர் மாநில அரசுக்கும் அளித்துள்ளது.

சட்டீஷ்கர் முதல்வர் ரமண் சிங் இதுத் தொடர்பான விபரங்களை உயர்நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

பினாயக் சென்னிற்கு ஆயுள்தண்டனை விதித்தைக் கண்டித்து இந்தியாவிலும், வெளிநாட்டிலும் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தன.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
இந்த இடுகை(post)தங்களை கவர்ந்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி

திரைத் துறையினரை ஆட்சிக்கு வர அனுமதிக்கக்கூடாது: ராமதாஸ் அதிரடி!

"தமிழகத்தில் இனிமேல் திரைத்துறையினரை ஆட்சிக்கு வர அனுமதிக்கக்கூடாது. இளைஞர்களை அம்மாயையிலிருந்து திருப்பி பாமகவில் இணைக்க முயற்சிக்க வேண்டும்" என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கட்சி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில் ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,
"தமிழகத்தில் 1967ம் ஆண்டுக்குப் பிறகு திரைத்துறை தொடர்பானவர்தான் முதல்வராகின்றனர். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நடிகர்கள் நாடாள வேண்டும் என்று நினைக்கவில்லை. அப்படி நினைத்தாலும் அது போணியாகாது. விதி விலக்காக 10 ஆண்டுக்கு முன் வரை ஆந்திர மாநிலத்தில் நடிகர் ராமராவ் முதல்வராக இருந்தார். இங்கு மட்டும் தான் இந்தக்கூத்து தொடர்கிறது.
சினிமா நடிகர்கள் மாயையிலிருந்து இளைஞர்களை விடுவித்து பாமக - வில் அவர்களை இணைக்க, கிராமங்கள் தோறும் பாமக கிளை அலுவலகங்கள் ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் 1967 வரை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. 67க்குப் பிறகு திரைத்துறையிலிருந்து வந்த அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஆட்சி நடத்தினர்.
தற்போது திரைத் துறையில் உள்ள விஜயகாந்த் போன்றோர் தமிழக ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர். இதுபோன்ற எண்ணங்களுக்கு இளைஞர்கள் வாய்ப்பளித்துவிடக் கூடாது. இந்த நிலையை மாற்ற பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஒவ்வொரு கிராமத்திலும் 5 பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். கல்வி, விளையாட்டு, விவசாயம், நூலகம், மருத்துவத்துக்கு எனக் குழுக்களை அமைக்க வேண்டும்.
வளர்ந்து வரும் இளம் தலைமுறையினருக்கும் கிராம மக்களுக்கும் இந்தக் குழுவினர் வழிகாட்ட வேண்டும். இதுபோன்ற செயல்களை மேற்கொண்டால் இளைஞர்கள் அசைக்க முடியாத சக்தியாக இருப்பர்" என்று பேசினார்.
  இந்த இடுகை(post)தங்களை கவர்ந்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி

தேசிய வாக்காளர் தினம்: தலைமைத் தேர்தல் அதிகாரி பேட்டி

சென்னை, ஜன.24    மேலவை தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தயார் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்துள்ளார். நாளைய தினம் (ஜன.25) தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாநில தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.          பேட்டியின்போது அவர் கூறியதாவது, தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க புதிய விதிமுறைகள் இன்னும் 15 நாளில் அறிவிக்கப்படும் என்றார்.
மேலும் அவர் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 18 வயது பூர்த்தி அடைந்த இளைஞர்களில் 23 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை.  அவர்களைவாக்காளர் பட்டியலில் இடம் பெறச் செய்யவும், தேர்தலில் பங்கு பெற்று தங்கள் ஜனநாயக கடமையை நிறை வேற்றவும் இந்த வாக்காளர் தினத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தப் போகிறோம்.

அத்துடன் தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற வேண்டியதின் அவசியத்தையும் அவர்களுக்கு வலியுறுத்தப்படும். எந்தவித நிர்ப்பந்தத்திற்கும் ஆளாகாமல்  மக்கள் தங்கள் மனச்சாட்டிப்படி வாக்களிக்க வேண்டும். நடந்து முடிந்த பீகார் தேர்தலில் புதிய நடைமுறைகளை தேர்தல் ஆணையம் அமுல்படுத்தியது. அதில் உள்ள குறைபாடுகளை நீக்கி புதிய விதிமுறைகளை தலைமை தேர்தல் ஆணையம் உருவாக்கி வருகிறது.

இன்னும் 15 நாளில் அந்த விதி முறைகள் அறிவிக்கப்படும். இந்த புதிய விதிமுறைகளின்படி தமிழகம், பாண்டிச்சேரி, கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டசபைதேர்தல் நடைபெறும்.  இந்த புதிய விதிமுறைகள் மூலம் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கப்படும்.

மிகவும் பதட்டத்திற்குரிய பகுதிகளில் வெப்கேமிரா பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு பதிவு செய்யப்படுகிறது. தேர்தல் கமிஷன் அதனை கண்காணிக்கும். எல்லா இடங்களுக்கும் இத்தகைய ஏற்பாடுகளை செய்ய இயலாது.  ஆனால் வீடியோ கேமிரா மூலம் வாக்குச்சாவடிகளில் பதிவு செய்யப்படும்.

கடந்த முறை நடைபெற்ற தேர்தலின் போது 6000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் பெரும்பாலும் சுவர்களில் அனுமதியின்றி தேர்தல் வாசகங்களை எழுதிய புகார்களாகும். தற்போது வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டாலும் வாக்காளர்களை சேர்க்க இன்னும் அவகாசம் இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பாளர்கள் வேட்பு மனுவை விலக்கிக்கொள்வதற்கு 10 நாள் முன்பு வரை கூட வாக்காளர்களை சேர்க்க முடியும். 

மேலவை தேர்தலை நடத்துவதற்கு அனைத்தை ஏற்பாடுகளும் தயார். வாக்குச்சாவடிகளும் தயார் செய்யப் பட்டுள்ளன.  தேர்தல் அலுவலர்க ளுக்கு முதல் கட்ட பயிற்சியும் அளிக்கப்பட்டுவிட்டது. தேர்தல் கமிஷன் எப்போது தேதியை அறிவிக்கிறதோ அப்போது தேர்தல் நடத்த நாங்கள் தயார். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
இந்த இடுகை(post)தங்களை கவர்ந்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை-தேர்தல் ஆணையம் பரிசீலனை

திருவனந்தபுரம்: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரி்மை அளிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு மத்திய அரசு பரிந்துரை அனுப்பியுள்ளது என்று மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி நேற்று தெரிவித்தார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைச்சர் வயலார் ரவி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது,

தற்போது அமலில் உள்ள சட்டவிதிப்படி வெளிநாட்டில் 6 மாதங்களுக்கு மேல் தொடர்ந்து வசிக்கும் இந்தியர்களுக்கு வாக்குரிமை கிடையாது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரி்மை அளிப்பது தொடர்பாக மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய பாஸ்போர்டு வைத்திருந்தால் அவர்களுக்கு வாக்குரிமை அளிக்கலாம். இதற்காக அவர்கள் இமெயில் மூலம் வி்ண்ணப்பிக்கலாம். இந்த வாக்காளர்களின அடையாளத்தில் சந்தேகம் ஏற்பட்டால் வழக்கமான முறையில் அரசியல் கட்சிகள் புகார் கொடுக்கலாம் என மத்திய அரசு கருதுகிறது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு மத்திய சட்ட அமைச்சகமும், வெளிநாட்டு இந்தியர் விவகாரத்துறை அமைச்சகமும் பரிந்துரைத்துள்ளன. தேர்தல் ஆணையம் இது பற்றி பரீசிலித்து வருகிறது. தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு பின் விரைவில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்இந்த இடுகை(post)தங்களை கவர்ந்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி