தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.1.11

திரைத் துறையினரை ஆட்சிக்கு வர அனுமதிக்கக்கூடாது: ராமதாஸ் அதிரடி!

"தமிழகத்தில் இனிமேல் திரைத்துறையினரை ஆட்சிக்கு வர அனுமதிக்கக்கூடாது. இளைஞர்களை அம்மாயையிலிருந்து திருப்பி பாமகவில் இணைக்க முயற்சிக்க வேண்டும்" என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கட்சி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில் ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,
"தமிழகத்தில் 1967ம் ஆண்டுக்குப் பிறகு திரைத்துறை தொடர்பானவர்தான் முதல்வராகின்றனர். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நடிகர்கள் நாடாள வேண்டும் என்று நினைக்கவில்லை. அப்படி நினைத்தாலும் அது போணியாகாது. விதி விலக்காக 10 ஆண்டுக்கு முன் வரை ஆந்திர மாநிலத்தில் நடிகர் ராமராவ் முதல்வராக இருந்தார். இங்கு மட்டும் தான் இந்தக்கூத்து தொடர்கிறது.
சினிமா நடிகர்கள் மாயையிலிருந்து இளைஞர்களை விடுவித்து பாமக - வில் அவர்களை இணைக்க, கிராமங்கள் தோறும் பாமக கிளை அலுவலகங்கள் ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் 1967 வரை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. 67க்குப் பிறகு திரைத்துறையிலிருந்து வந்த அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஆட்சி நடத்தினர்.
தற்போது திரைத் துறையில் உள்ள விஜயகாந்த் போன்றோர் தமிழக ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர். இதுபோன்ற எண்ணங்களுக்கு இளைஞர்கள் வாய்ப்பளித்துவிடக் கூடாது. இந்த நிலையை மாற்ற பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஒவ்வொரு கிராமத்திலும் 5 பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். கல்வி, விளையாட்டு, விவசாயம், நூலகம், மருத்துவத்துக்கு எனக் குழுக்களை அமைக்க வேண்டும்.
வளர்ந்து வரும் இளம் தலைமுறையினருக்கும் கிராம மக்களுக்கும் இந்தக் குழுவினர் வழிகாட்ட வேண்டும். இதுபோன்ற செயல்களை மேற்கொண்டால் இளைஞர்கள் அசைக்க முடியாத சக்தியாக இருப்பர்" என்று பேசினார்.
  இந்த இடுகை(post)தங்களை கவர்ந்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி

0 கருத்துகள்: