தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.9.11

கூகுள் இணையதங்களை பாகிஸ்தானில் தடை செய்வோம்: ரகுமான் மாலிக்

கராச்சி, செப். 20  தீவிரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கூகுள் மற்றும் யூடியூப் இணையதளங்களை பாகிஸ்தானில் தடை செய்வோம் என்று உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் அவ்வப்போது சில கருத்துகளை சொல்லி சர்ச்சையில் சிக்கி வருகிறார்
. கராச்சியில் தீவிரவாதிகள், கிரிமினல்களால் பெரும்பாலான கொலைகள் நடக்கவில்லை. பொறாமை பெண்கள், மனைவிகளால் தான் கொலைகள் நடக்கின்றன என்று கூறி சமீபத்தில் சர்ச்சையில் சிக்கினார் மாலிக்.
இந்நிலையில் தீவிரவாதிகள் தாக்குதல், சதி திட்டங்கள், தகவல் பரிமாற்றங்களுக்கு இணைய தளங்களை பயன்படுத்துகின்றனர். அதிகாரிகளின் விசாரணைக்கு கூகுள் மற்றும் யூடியூப் இணைய தளங்கள் ஒத்துழைப்பு வழங்காவிட்டால் பாகிஸ்தானில் அவற்றை தடை செய்வோம் என்று நேற்று தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக எதுபோன்ற தகவல்களை அளிக்கவில்லை என்ற விவரங்களை மாலிக் தெரிவிக்கவில்லை.

0 கருத்துகள்: