தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.9.11

குஜராத்தில் உள்ள 5 கோடி மக்களுக்கு நீதி செலுத்த முடியாதவர் எவ்வாறு இந்திய நாட்டில் உள்ள 125 கோடி மக்களுக்கு நீதி செலுத்துவார்


மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி 3 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த நரேந்திர மோடியின் செயல்பாட்டை பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கடுமையாக விமர்சித்து உள்ளது.
நரேந்திர மோடியின் உண்ணாவிரதம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய ஜனதா தள தேசிய செய்தித் தொடர்பாளர் சிவானந்த் திவாரி, ''குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நடுநிலையைக் கடைப் பிடிக்க தவறி விட்டார். குஜராத்தில் உள்ள 5 கோடி மக்களுக்கு நீதி செலுத்த முடியாதவர் எவ்வாறு இந்திய நாட்டில் உள்ள 125 கோடி மக்களுக்கு நீதி செலுத்துவார்" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

குஜராத் மக்களிடையே இன்னும் ஒரு வித அச்சமும், பாதுகாப்பற்ற நிலையில் நிலவுவதாக சிவானந்த் தெரிவித்துள்ளார். பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் ''பாஜக பிரதமர் பதவிக்கான வேட்பாளரை அறிவிக்கும் நிலையில் தான் ஐக்கிய ஜனதா தளம் அது பற்றி கருத்து தெரிவிக்கும்" என்றும் "நாடாளுமன்றத் தேர்தலுக்கான காலம் தொலைவில் உள்ளது'' என்றும் தெரிவித்துள்ளார்.

பீகார் சட்டமன்றத் தேர்தலில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்துக்கு வரக் கூடாது என்று நிதிஷ் குமார் தடை போட்டது குறிப்பிடத் தக்கது.

0 கருத்துகள்: