தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.10.10

தெலுங்கானா மாநிலம் அமைந்தால்முஸ்லிம்களுக்கு 12 சதவீத ஒதுக்கீடு:சந்திரசேகரராவ் அறிவிப்பு

ஐதராபாத்:''தனி தெலுங்கானா மாநிலம் முஸ்லிம்களுக்கு 12 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும். முஸ்லிம் ஒருவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும்இ'' எனஇ தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்.இ) தலைவர் சந்திரசேகரராவ் கூறியுள்ளார். முஸ்லிம் தலைவர்கள் டி.ஆர்.எஸ்.இ கட்சியில் இணையும் விழா நேற்று ஐதராபாத்தில் நடந்தது.

அப்போது கட்சியில் இணைந்த முஸ்லிம் தலைவர்களை வரவேற்றுப் பேசிய டி.ஆர்.எஸ்.இ தலைவர் சந்திரசேகரராவ் கூறியதாவது:முஸ்லிம் சமுதாயம் மேம்பாடு குறித்து அரசியல் கட்சிகள் முழங்கினாலும்இ அனைத்து தட்டு முஸ்லிம் மக்களும் பின்தங்கிய நிலையில் உள்ளனர் என்பதே உண்மை. ஆந்திராவில் ஆட்சி நடத்திய எந்த ஒரு கட்சியும்இ முஸ்லிம்கள் நலத்திட்டங்களுக்காக போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. டி.ஆர்.எஸ்.இ கட்சி மட்டுமே முஸ்லிம் சமுதாயம் மீது அக்கறை கொண்ட உண்மையான மதசார்பற்ற கட்சி.

இதற்குச் சான்றாகஇ தனி தெலுங்கானா அமைந்தால் முஸ்லிம்களுக்கு 12 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும். டி.ஆர்.எஸ்.இ ஆட்சி அமைக்கும் பட்சத்தில்இ முஸ்லிம் ஒருவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும். தவிரஇ அமைச்சரவையில் நான்கு அல்லது ஐந்து முஸ்லிகள் இடம் பெறுவர்.இவ்வாறு சந்திரசேகரராவ் கூறினார்.

எகிப்து பாராளுமன்றத் தேர்தலில் பங்கேற்கும் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம்

கெய்ரோ,அக்.11:எகிப்து நாட்டின் மிகப்பெரிய மக்கள் இயக்கம் என சிறப்பிக்கப்படும் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் அடுத்த மாதம் நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் பங்கேற்கும்.

சுயேட்சை வேட்பாளர்களை களமிறக்கி 3 இல் ஒரு பகுதி இடங்களை கைப்பற்ற அந்த இயக்கம் திட்டமிட்டுள்ளது. எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவம் தடைச் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த தேர்தலில் கடுமையான முறைகேடுகள் நடந்த பிறகும் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் 20 சதவீத இடங்களை கைப்பற்றி அரசியல் பார்வையாளர்களை ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 500க்குமேற்பட்ட பாராளுமன்ற தொகுதிகளில் 169 இடங்களில் போட்டியிட அவ்வியக்கம் திட்டமிட்டுள்ளது.

முக்கிய எதிர்கட்சி தலைவரும் முன்னால் சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் தலைவருமான முஹம்மது அல் பராதி தேர்தலை புறக்கணிக்க அழைப்பு விடுத்திருந்தார். தேர்தலில் பங்கேற்பது ஹுஸ்னி முபாரக் அரசை அங்கீகரிப்பதற்கு சமம் என பராதி கூறியிருந்தார்.

ஆனால், மக்களுக்கு மாற்று அரசியலைக் குறித்து கல்வியறிவு அளிக்கவேண்டிய வாய்ப்புதான் தேர்தல் என முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் தலைவர்கள் கூறுகின்றனர். அதேவேளையில், தேர்தலில் முறைகேடுகளை நடத்த திட்டமிட்டிருக்கும் ஹுஸ்னி முபாரக் அரசின் முயற்சியைக் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் தலைவர் முஹம்மது பதாஇ அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த தேர்தலுக்கு பிறகு முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை ஒடுக்கும் நடவடிக்கையை அதிகரித்திருந்தது எகிப்திய அரசு.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,

இந்திய தூதரகத்தின் இந்த இரக்கமற்ற செயல்-பாஸ்போர்டடைத் தொலைத்த சென்னை பெண் விமான நிலையத்தில் மரணம்

துபாய்: பாஸ்போர்ட்டை பறி கொடுத்து விட்டு 5 நாட்களாக பரிதவித்து வந்த சென்னையைச் சேர்ந்த பணிப்பெண், மஸ்கட் விமான நிலையத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது பெயர் பீபி லுமடா. 40 வயதான இவர் மஸ்கட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார். மஸ்கட்டிலிருந்து சென்னை செல்வதற்காக இவர் கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் டிக்கெட் எடுத்திருந்தார். அதன்படி மஸ்கட்டிலிருந்து விமானம் சென்னை கிளம்பியது. வழியில் தோஹாவில் அது இறங்கியது.

தோஹாவில் இறங்கி இணைப்பு விமானத்தைப் பிடிப்பதற்காக பீபி சென்றபோது அவரது பாஸ்போர்ட் தொலைந்து போய் விட்டது. இதனால் அவரால் தோஹாவிலிருந்து விமானத்தைப் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் அவர் மீண்டும் மஸ்கட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டார்.

ஆனால் அவர் ஏற்கனவே ஓமனில் குடியிருப்பதற்கான விசாவை ரத்து செய்திருந்ததால் மஸ்கட் விமான நிலையத்தை விட்டு வெளியேற அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.

இதனால் பீபியால் எங்குமே போக முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவரது நிலையை விளக்கி இந்தியத் தூதரகத்திற்கு விமான நிலைய அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். ஆனால் இந்தியத் தூதரகத்திலிருந்து ஒருவர் கூட வந்து பார்க்கவில்லை. இதனால் ஐந்து நாட்களாக அந்த அப்பாவிப் பெண் விமான நிலையத்திலேயே முடக்கப்பட்டிருந்தார்.

அவரது நிலையைப் பார்த்து பரிதாபப்பட்ட கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தினர் அவருக்கு சாப்பாடு, தண்ணீர், படுக்கை உள்ளிட்டவற்றை கொடுத்து உதவியுள்ளனர். மேலும், இந்தியத் தூதரகத்திற்கும் தகவல் தெரிவித்து உடனடியாக அவருக்கு உதவுமாறு கோரியுள்ளனர். ஆனால் மனிதாபிமானம் கொஞ்சம் கூட இல்லாத இந்திய தூதரக அதிகாரிகள் யாருமே வந்து பார்க்கவில்லை.

இந்த நிலையில் தற்போது அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மன உளைச்சல் காரணமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என விமான நிலைய மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கத்தார் ஏர்வேஸ் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், நாங்கள் பலமுறை இந்திய தூதரகத்திற்கு தகவல் அளித்தும் ஒருவர் கூட வந்து பார்க்கவில்லை. விமான நிலையப் போலீஸாரும் பலமுறை இந்திய தூதரகத்தை அழைத்தும் கூட யாருமே வரவில்லை. ஏன் இந்தியத் தூதரகம் இப்படி நடந்து கொண்டது என்று தெரியவில்லை என்றனர்.

எல்லாம் நடந்து முடிந்த பின்னர் பீபியின் மரணம் குறித்து இந்தியத் தூதரகம் வருத்தமும், கவலையும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்தியத் தூதர் அனில் வாத்வா கூறுகையில், இது மிகவும் சோகமானது. எக்ஸ்டி பாஸ் தருவதற்குள் அவர் உயிரிழந்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. நிர்வாக தாமதங்களே இந்த மரணத்திற்குக் காரணம் என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் உள்ள பீபியின் உறவினர்களுக்குத் தகவல் தரப்பட்டுள்ளது.

தனது நாட்டுக் குடிமகளைக் காக்கக் கூட முன்வராத இந்திய தூதரகத்தின் இந்த இரக்கமற்ற செயல் சக இந்தியர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது