தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.12.10

யூதர்களுக்கு எதிரான நாஜிக்களைப் போன்றவை ஆர்.எஸ்.எஸும், பாஜகவும்-திக்விஜய் சிங்

டெல்லி: யூதர்களுக்கு எதிராக நாஜிக்கள் எப்படி செயல்பட்டனரோ, அதேபோல முஸ்லீம்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்.அமைப்பும், பாஜகவும் துவேஷத்துடன் செயல்படுகின்றன என்று மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

கர்கரே மும்பை தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்படுவதற்கு முன்பு தனக்குப் போன் செய்து, இந்து தீவிரவாதிகளால் தனக்கு ஆபத்து இருப்பதாக தகவலை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் திக்விஜய் சிங் என்பது நினைவிருக்கலாம்.

நேற்று நடந்த டெல்லி காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு திக்விஜய் சிங் பேசுகையில், நாஜிக்கள் எப்படி யூதர்களுக்கு எதிராக துவேஷத்துடன் செயல்பட்டனரோ அதேபோலத்தான் இப்போது ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவை செயல்படுகின்றன.

இந்தியாவில் தீவிரவாதத்தின் வேர் பதியப்பட்டது 1992ல் அத்வானி நடத்திய ரத யாத்திரையின்போதுதான்1930களில் ஹிட்லரின் நாஜிக் கட்சி யூதர்களை வெறித்தனமாக தாக்கியது. அதேபோல ஆர்எஸ்எஸின் கொள்கையும், முஸ்லீம்களைக் குறி வைத்தே உள்ளது. தேசியவாதம் என்ற பெயரில் முஸ்லீ்ம்களை அழிக்க ஆர்எஸ்எஸ் துடிக்கிறது.

இந்தியாவில் தீவிரவாதத்தின் விதையை விதைத்தவர் அத்வானிதான். அவர் 1992ல் நடத்திய ரத யாத்திரைதான் தீவிரவாதத்தின் வேராகும்.

இந்திய வரலாற்றில் மிகப் பெரிய கரும்புள்ளியாக அமைந்துள்ளது பாபர் மசூதி இடிப்பு சம்பவம்.

அனைத்து முஸ்லீம்களும் தீவிரவாதிகள் இல்லை ஆனால் தீவிரவாதிகள் அனைவரும் முஸ்லீம்கள் என்கிறார் அத்வானி. அவர் கூறுவது போலவே, அனைத்து இந்துக்களும் தீவிரவாதிகள் இல்லை, ஆனால் அனைத்து இந்துத் தீவிரவாதிகளும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் என்று நாம் சொல்லலாமா.

சிசு மந்திர் பள்ளிகளில் குழந்தைகளிடம் முஸ்லீம் துவேஷத்தை விதைத்து வருகிறது ஆர்எஸ்எஸ். இது நாட்டுக்குப் பெரும் அபாயமாக உருவெடுத்துள்ளதுஅதிகாரவர்க்கம், காவல்துறை, ஏன் ராணுவத்திலும் கூட ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஊடுறுவியுள்ளனர்.

ஆர்எஸ்எஸ், பாஜகவின் வன்முறை மற்றும் துவேஷக் கொள்கைகள் நாட்டுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. அடுத்த பெரும் சவால்கள், கம்யூனிஸ்டுகளும், பிராந்திய அரசியல் தலைவர்களும் என்றார் திக்விஜய் சிங்.

பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் உள்ள கோவில் இடிப்பு!

பாரதீய ஜனதா கட்சியின் தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள சிவன் - பார்வதி கோவில் அக்கட்சித் தலைவர்களின் முடிவை அடுத்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

டில்லியில் உள்ள பா.ஜ.க.வின் தலைமை அலுவலக வளாகத்தில் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் சிவன் - பார்வதி கோவில் கட்டப்பட்டது. அந்த அலுவலகத்திற்கு அருகில் உள்ள குடியிருப்புவாசிகள், தம்மால் முடிந்த அளவுக்கு சிறிய தொகையை திரட்டி, அந்த சிறிய கோவிலை கட்டினர். கடந்த 18 ஆண்டுகளாக, அங்கு வழக்கமான வழிபாட்டு நிகழ்ச்சிகளும் திருவிழாக்களும் நடந்து வருகின்றன. இவற்றை அந்த பகுதியில் உள்ள பொதுமக்களே செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அலுவலக வளாகத்திற்குள் பொதுமக்கள் கோவிலில் வழிபாடு செய்ய வருவதை, பா.ஜ.க.வினருக்கு இடைஞ்சலாக இருப்பதால், அந்தக் கோவிலை அகற்றி, காம்பவுண்டுக்கு வெளியே கட்டிக்கொள்ளுமாறு அந்தப் பகுதி மக்களிடம் கூறியுள்ளனர். இது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் எங்கேனும் ஓரு மூலையில், நடைபாதையில் உள்ள இந்து கோவில் இடிக்கப்பட்டால் கூட அதற்காக பாஜகவினர் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனர். ஆனால், தங்களது அலுவலக வளாகத்திற்குள் உள்ள இந்து கோவிலையே அவர்கள் இடிக்க வேண்டும் என்று கூறியிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் கூறியுள்ளனர்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட 1992ஆம் ஆண்டுதான் இந்தக் கோவில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கோவிலை கட்டுவதற்கு முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் கார் டிரைவராக இருந்த ஒரு முஸ்லிமும் உதவி செய்திருப்பதாகக் கூறப்படுகிறது
.

அஜ்மீர், மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு & ஆர்.எஸ்.எஸ். அமைப்பு: ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்.

புதுடெல்லி,டிச.19:அஜ்மீர் தர்கா, ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புகளின் சூத்திரதாரியான சுனில் ஜோஷியை கொலைச்செய்தது அவரது ஆர்.எஸ்.எஸ் கூட்டாளிகள்தான் என மத்திய பிரதேச மாநில போலீஸ் தெரிவித்துள்ளது.ராஜஸ்தான் ஏ.டி.எஸ் கைதுச்செய்த குண்டுவெடிப்புடன் தொடர்புடைய ஹர்ஷத் பாய் சோலங்கிதான் இந்த வாக்குமூலத்தை அளித்துள்ளான்.

அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் அப்ரூவராக மாற சுனில் ஜோஷி திட்டமிட்டிருந்த காரணத்தினால் கொலைச் செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸ் கருதுகிறது. ஆனால், ஜோஷி தன்னை தனிப்பட்ட ரீதியில் அவமதித்ததற்காகத்தான் இந்த கொலை நடந்தது என சோலங்கி வாக்குமூலம் அளித்துள்ளான். கடந்த இரண்டு வாரமாக சோலங்கி போலீஸ் காவலில் உள்ளான். சோலாங்கியுடன் அவனது இரண்டு கூட்டாளிகளான ஆனந்த் கட்டாரியா, வசுதேவ் பார்மர் ஆகியோரையும் போலீஸ் கைதுச் செய்துள்ளது.

ஹிந்துத்துவா தீவிரவாதிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்களும், காணாமல் போன மொபைல் ஃபோன்களும் கைப்பற்றப்பட்டன. கொலைக்கு பிறகு குற்றவாளிகள் குஜராத்தின் பல பகுதிகளிலும் தலைமறைவாக இருந்ததாக போலீஸ் கூறுகிறது.கடந்த 2007 ஆம் ஆண்டு அக்டோபரில் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. 2007 டிசம்பரில் சுனில் ஜோஷி கொல்லப்படுகிறார். அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பை நிகழ்த்திய பிறகு திவாஸ் மாவட்டத்தின் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள சுனா கடனில் வசித்துவந்தார் ஜோஷி.

ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததைத் தொடர்ந்து வீட்டிலிருந்து வெளியே வந்த சில நிமிடங்களுக்குள்ளாகவே துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து போனார். சுனில் ஜோஷி கொல்லப்படுவதற்கு முன்பு அவரை அழைத்தது சோலங்கி என்பது தொலைபேசி அழைப்புகளை பரிசோதித்தபோது தெரியவந்தது. சோலங்கிதான் சுனில் ஜோஷியை துப்பாக்கியால் சுட்டுள்ளார். கட்டாரியா, பார்மர், மோஹன், மெஹுல் ஆகியோர் சோலங்கிக்கு உதவியுள்ளனர்.

கைதுச் செய்யப்பட்ட ஆனந்த இந்தூரைச் சார்ந்தவராவார். பார்மர் திவாஸ் மாவட்டத்தைச் சார்ந்தவர். குஜராத்தைச் சார்ந்த மோஹன், மெஹுல் ஆகியோர் உட்பட ஐந்துபேர் தலைமறைவாக உள்ளனர். அஜ்மீர் குண்டுவெடிப்புடன் புனே, பெஸ்ட் பேக்கரி வழக்குகளிலும் குற்றவாளியான சோலங்கி குஜராத்தைச் சார்ந்தவனாவான். மேலும் குற்றவாளிகளை கைதுச் செய்வதற்காக போலீஸ் தேடுதல் வேட்டை நடத்திவருகிறது.

கொலைக்காக பயன்படுத்திய மாருதி வேனும், ஆயுதங்களும் கண்டெடுக்கப்படவில்லை. கொல்லப்பட்ட சுனில் ஜோஷி உள்ளூர் காங்கிரஸ் தலைவரை கொலைச்செய்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாவார். கட்சி வட்டாரங்களில் குருஜி என்றழைக்கப்படும் இவன் ராகுல், மோகன், மெஹுல், ஜயந்தி உஸ்தாத் ஆகிய போலி பெயர்களில் செயல்பட்டுள்ளான்.
இரண்டு வாரங்களுக்கு முன்பாக கைதுச் செய்யப்பட்ட சோலங்கியை ராஜஸ்தான் ஏ.டி.எஸ்ஸிடம் ஒப்படைத்த பிறகு மத்திய பிரதேச மாநில போலீஸ் இத்தகவல்களை வெளியிட்டுள்ளது.

செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

எல்லா தீவிரவாத செயல்களில் ஆர்.எஸ்.எஸ். தொடர்பு: விசாரணை தேவை?

தீவிரவாத செயல்களில் ஆர்.எஸ்.எஸ்., அதன் சகோதர அமைப்புகளுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் சுமார் 15 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ள 2 நாள் மாநாடு புது தில்லியின் புறநகர்ப் பகுதியான புராரியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இந்த மாநாட்டின் தலைமை உரையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:

வகுப்புவாத செயல்களிலும், தீவிரவாத செயல்களிலும் ஈடுபட்டுவரும் அமைப்புகள் பெரும்பான்மைச் சமூகமா அல்லது சிறுபான்மைச் சமூகமா என காங்கிரஸ் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும் அமைப்பு எந்த மதத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் அது அபாயகரமானது. அத்தகைய சக்திகள் அனைத்தும் தோற்கடிக்கப்பட வேண்டும். வகுப்புவாதம் எந்த உருவத்தில் வந்தாலும் அதை காங்கிரஸ் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது. குறுகிய அரசியல் லாபங்களுக்காக வகுப்புவாதச் செயல்களில் ஈடுபடுவதும், வெறுப்புணர்வைப் பரப்புவதும், மதவெறியைத் தூண்டுவதும் மதத்தை அவமதிக்கும் செயலாகும்.

மதத்தை கேடயமாகப் பயன்படுத்தி மக்களை வன்முறையில் ஈடுபடத் தூண்டுவது, மற்ற மதங்களைப் பற்றி அவதூறுப் பிரசாரம் செய்வது, வரலாற்றைத் திரித்து மக்கள் மனங்களில் கேடு விளைவிக்கும் தனிநபர்கள், அமைப்புகள், கொள்கைகளை புறந்தள்ள முடியாது.
ஊழலைக் களைய 5 அம்சத் திட்டம்: ஊழல் ஒரு நோய் போல சமூகத்தின் எல்லாநிலைகளிலும் பரவியுள்ளது. அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்குகள் உள்பட அனைத்து வழக்குகளும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விரைவாக விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். நிரபராதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.

2-வதாக, வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளுக்கு அரசே நிதி அளிக்க வேண்டும்.

ஊழலுக்கு மிக முக்கிய ஊற்றாக விளங்குவது நில ஒதுக்கீடு செய்வதற்கு உள்ள அதிகாரம். இத்தகைய அதிகாரத்தை எல்லா முதல்வர்களும், அமைச்சர்களும் கைவிட வேண்டும்.
மாநில அரசுகள் கொள்முதல் செய்யும் அனைத்தும் வெளிப்படையாக நடைபெறுவதற்கான தெளிவான வரைமுறைகள் வகுக்கப்பட வேண்டும். இயற்கை வளங்களை சுரண்டுவதைத் தடுக்க தகுந்த வெளிப்படையான நடைமுறை உருவாக்கப்பட வேண்டும். தங்களது நேர்மை மீது எந்தவிதமான சந்தேகத்தின் நிழலும் விழாதவகையில் காங்கிரஸ் நிர்வாகிகள் செயல்பட வேண்டும். எளிமை, பொறுமை, சிக்கனம் போன்றவையே நமது தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமுறையாக இருக்க வேண்டும். இதை நாம் சட்டமாகக் கொண்டு வரமுடியாது. வறுமை நிறைந்திருக்கும் நாட்டில், நமது வளத்தை கூச்சமில்லாமல் வெளிப்படுத்துவதைத் தவிர்க்கும் சமூக உணர்வு நமக்கு இருக்க வேண்டும்.

பா.ஜ.க.வுக்கு சவால்: எந்தவிதமான குற்றச்சாட்டும் உறுதி செய்யப்படாத நிலையிலும், விசாரணை மட்டுமே நடைபெறும் நிலையிலும் நமது முதல்வர்கள், அமைச்சர்களை பதவி விலக ஆணையிட்டுள்ளோம். இதுபோன்று எத்தனைக் கட்சிகள் உரிமை கோர இயலும்? கர்நாடகத்தில் ஊழல் புகார் எழுந்துள்ள நிலையில், முதல்வரையோ, அமைச்சர்களையோ பாரதிய ஜனதா கட்சியால் விலகச் சொல்ல முடியுமா? நாடாளுமன்ற முடக்கம் குறித்து...: நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கியதற்கு எப்படி நியாயம் கற்பிக்கப் போகின்றன? அரசியல் காரணங்களுக்காக நாடாளுமன்றத்தை பிணைக் கைதியாக எதிர்க்கட்சிகள் பயன்படுத்தக் கூடாது. மிக முக்கியமான பிரச்னைகள் குறித்து விவாதிக்கவும், முடிவு எடுக்கவும் நாடாளுமன்றமே மிகச் சரியான இடமாகு
ம்