தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.12.10

பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் உள்ள கோவில் இடிப்பு!

பாரதீய ஜனதா கட்சியின் தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள சிவன் - பார்வதி கோவில் அக்கட்சித் தலைவர்களின் முடிவை அடுத்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

டில்லியில் உள்ள பா.ஜ.க.வின் தலைமை அலுவலக வளாகத்தில் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் சிவன் - பார்வதி கோவில் கட்டப்பட்டது. அந்த அலுவலகத்திற்கு அருகில் உள்ள குடியிருப்புவாசிகள், தம்மால் முடிந்த அளவுக்கு சிறிய தொகையை திரட்டி, அந்த சிறிய கோவிலை கட்டினர். கடந்த 18 ஆண்டுகளாக, அங்கு வழக்கமான வழிபாட்டு நிகழ்ச்சிகளும் திருவிழாக்களும் நடந்து வருகின்றன. இவற்றை அந்த பகுதியில் உள்ள பொதுமக்களே செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அலுவலக வளாகத்திற்குள் பொதுமக்கள் கோவிலில் வழிபாடு செய்ய வருவதை, பா.ஜ.க.வினருக்கு இடைஞ்சலாக இருப்பதால், அந்தக் கோவிலை அகற்றி, காம்பவுண்டுக்கு வெளியே கட்டிக்கொள்ளுமாறு அந்தப் பகுதி மக்களிடம் கூறியுள்ளனர். இது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் எங்கேனும் ஓரு மூலையில், நடைபாதையில் உள்ள இந்து கோவில் இடிக்கப்பட்டால் கூட அதற்காக பாஜகவினர் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனர். ஆனால், தங்களது அலுவலக வளாகத்திற்குள் உள்ள இந்து கோவிலையே அவர்கள் இடிக்க வேண்டும் என்று கூறியிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் கூறியுள்ளனர்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட 1992ஆம் ஆண்டுதான் இந்தக் கோவில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கோவிலை கட்டுவதற்கு முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் கார் டிரைவராக இருந்த ஒரு முஸ்லிமும் உதவி செய்திருப்பதாகக் கூறப்படுகிறது
.

0 கருத்துகள்: