தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.8.11

முபாரக் விசாரணையில்கூச்சல் குழப்பம்

எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் மீதான விசாரணை, இரண்டாவது முறையாக நடந்தது. இவ்விசாரணையில், வழக்கறிஞர்கள் பலர் ஒரே நேரத்தில் வாதிட்டதால், குழப்பம் ஏற்பட்டது. அடுத்த மாதம் 5ம் தேதிக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள போலீஸ் அகடமி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கோர்ட்டில், இம்மாதம் 3ம் தேதி முதன் முறையாக, முபாரக் ஆஜர்படுத்தப்பட்டார். அதில்,”புரட்சிக் காலத்தில்
போலீசாரை ஏவி மக்களைக் கொன்றார்’ என்ற தன் மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.
இதையடுத்து, இரண்டாவது முறையாக விசாரணை நடந்தது. “ஸ்ட்ரெச்சரில்’ படுத்த நிலையில், முபாரக் கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டார். அவருடன், அவரது மகன்கள் அலா, கமால், நிதி மோசடியில் 12 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள முன்னாள் உள்துறை அமைச்சர் ஹபீப் அல் அட்லி ஆகியோரும் வந்தனர்.விசாரணையில், கொல்லப்பட்டோர் சார்பில் ஏராளமான வழக்கறிஞர்கள் வாதாடியதால், கோர்ட்டில் குழப்பம் நிலவியது.
மக்கள் மீது போலீசாரை ஏவ, முபாரக் பிறப்பித்த உத்தரவை தெரியப்படுத்த வேண்டும் என, அவர்கள் கோரினர். இதில், தற்போதைய ராணுவ ஆட்சியின் தலைவரான முகமது உசேன் டன்டாவி, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என, அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
முபாரக் ஆட்சியில், அவர் தான் ராணுவ தளபதியாக இருந்தார் என்பதால், முபாரக்கின் உத்தரவு பற்றி டன்டாவி தான் தெளிவுபடுத்த முடியும் என்பது, அரசுத் தரப்பின் வாதம். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி அகமது ரபாத், அடுத்த மாதம் 5ம் தேதிக்கு, விசாரணையை தள்ளி வைத்தார்.இதற்கிடையில், கோர்ட் வாசலில் கூடியிருந்த முபாரக் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

0 கருத்துகள்: