இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் சுதந்திரதினம் கொண்டாடும் வேளையிலும் அந்நாட்டின் பல்வேறுபகுதிகளில் நடந்த போராளிகளின் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
வடக்கு வஸீரிஸ்தானில் மிரான்ஷாவில் ராணுவ முகாமில் போராளிகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் மூன்று ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 22 பேருக்கு காயமேற்பட்டது.
முகாமில் சுதந்திரதின அணிவகுப்பு நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.
வடக்கு வஸீரிஸ்தானில் ரஸ்மகில் இன்னொரு ராணுவ தலைமையகத்தின் மீது ஞாயிற்றுக்கிழமை நடந்த ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்தன. ஆனால் இங்கு எவரேனும் கொல்லப்பட்டதாக தகவல் இல்லை. ஞாயிற்றுக்கிழமை பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 13 பேர் கொல்லப்பட்டனர். மாகாணத்தில் தெரா அல்லாஹ்யார் பட்டினத்தின் அருகில் ஒரு ஹோட்டல் அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. குண்டுவெடிப்பில் ஹோட்டல் முழுமையாக சேதமடைந்தது. கொல்லப்பட்டவர்களில் எட்டு பேரின் உடல்கள் இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளதாக தகவல். மற்றொரு சம்பவத்தில் பஞ்சாப் மாகாணம் லாஸ்பெல்லாவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் இரண்டு தொழிலாளிகளை சுட்டுக்கொன்றான். இப்பகுதியில்அமைந்துள்ள பஸ் ஸ்டேசனில் நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக