தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.8.11

விசாரணை பூர்த்தியான பிறகே வஸ்தன்வி வெளியேற்றப்பட்டார்-தேவ்பந்த்



Darul-230211-ra1
முஸஃபர்நகர்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடியை புகழ்ந்து பேட்டியளித்ததாக கூறப்படும் தாருல் உலூம் தேவ்பந்த் இஸ்லாமிய கல்வி கலாசாலையின் துணைவேந்தர் குலாம் முஹம்மது வஸ்தன்வியை விசாரணை பூர்த்தியான பிறகே நீக்கியதாக தேவ்பந்த் தாருல் உலூம் தெரிவித்துள்ளது.
வஸ்தன்விக்கு எதிராக குற்றச்சாட்டுகளையெல்லாம் விசாரணைச் செய்த அறிக்கையை மஜ்லிஸே ஷூரா விவாதித்தபிறகே அவரை வெளியேற்றியது

ஹிந்துத்துவா பயங்கரவாதிகளை ஒடுக்க புதிய சட்டம் வருகிறது!


மும்பை: ""மத்திய அரசு கொண்டு வர உள்ள மத வன்முறை தடுப்புச் சட்ட மசோதா அபாயகரமானது மற்றும் ஜனநாயகத்திற்கு விரோதமானது,'' என, விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பயங்கரவாதி அசோக் சிங்கால் கூறியுள்ளார்

காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையிலான தேசிய ஆலோசனைக் குழு, "மத வன்முறைகள் மற்றும் குறிப்பிட்ட பிரிவினரை குறிவைத்து தாக்கும் வன்முறைகள் தடுப்புச் சட்ட வரைவு மசோதாவை' தயாரித்துள்ளது. பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. புதிய சட்டத்தை இயற்றி, சிறுபான்மையோரை திருப்திபடுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது.

காந்தி சிலையை உடைத்த சம்பவம்:ஹிந்துத்துவ தீவிரவாதிகள் கைது


கோயம்புத்தூர்:ஆர்.எஸ்.புரம் காந்தி பார்க்கில் அமைந்துள்ள காந்தி சிலையை உடைத்த சம்பவத்தில் ஹிந்துத்துவ  அமைப்பான பாரதீய சேனாவின் பொதுச்செயலாளர் சுரேஷ்ராஜன்(வயது 37) இன்னொரு தலைவரான மின்னல் நாகராஜ்(வயது 47) ஆகியோரை கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் போலீஸ் கைதுச் செய்தது.
பாபா ராம்தேவை கைதுச் செய்த சம்பவத்தை கண்டித்து காந்திசிலையை உடைத்ததாக சிலையை உடைத்த பிறகு குற்றவாளிகள் சம்பவ இடத்தில் வீசிச்சென்ற துண்டுபிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

போரில் அப்பாவி தமிழ்மக்களை கொன்றது உண்மைதான் !இலங்கை

கொழும்பு, ஆக.2- இலங்கை இறுதிக்கட்ட போரின்போது, அப்பாவிமக்கள் கொல்லப்பட்டது உண்மைதான் என்று சிங்கள அரசு முதல்முறையாக ஒப்புதல் அளித்துள்ளது.

அந்த நாட்டின் ராணுவ அமைச்சகம் சார்பாக மனிதாபிமான நடவடிக்கை உண்மை பகுப்பாய்வு என்ற பெயரில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், இறுதிக்கட்ட போரின்போது அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டது உண்மைதான்.

விடுதலைப்புலிகளுடன் நடைபெற்ற கடுமையான சண்டையின்போது, பொதுமக்களின் இறப்பு தவிர்க்க முடியாததாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 மணி நேரம் வீடியோ கேம் விளையாடிய வாலிபர் பலி

லண்டன், ஆக. 2-   12 மணி நேரம் இடைவிடாமல் வீடியோ கேம் விளையாடிய வாலிபர் பலியானார்.
 
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் டேவிட். இவரது மகன் கிறிஷ் ஸ்டேனிபோர்த் (20). வீடியோகேம் விளையாடுவதில் இவருக்கு அலாதி பிரியம். அதில் ஈடுபட்டால் தன்னையே மறந்து விடுவார். நேரம் போவது தெரியாமல் மணிக்கணக்கில் விளையாடுவார். அது போன்று சமீபத்தில் வெளியான மராத்தான் விளையாட்டு சம்பந்தப்பட்ட வீடியோகேம்

துபாயில் அர‌பிய‌ரும் விரும்பி அருந்தும் த‌மிழ‌க‌ நோன்புக் க‌ஞ்சி

துபாய்: துபாய் இந்திய‌ன் முஸ்லிம் அசோஷியேஷ‌ன் (ஈமான்) வ‌ருட‌ந்தோறும் த‌மிழ‌க‌ பார‌ம்ப‌ர்ய‌த்துட‌ன் கூடிய‌ நோன்புக் க‌ஞ்சியினை வ‌ழ‌ங்கி வ‌ருகிற‌து.

இத‌ை த‌மிழ‌ர்க‌ள் ம‌ட்டும‌ன்றி வ‌ட இந்திய‌ர்க‌ள், அரேபிய‌ர், ஆப்பிரிக்க‌ர், ப‌ங்களாதேஷ், பாகிஸ்தான், சீன‌ர்க‌ள் உள்ளிட்ட‌ ப‌ல‌ரும் இன‌, ம‌த‌ வேறுபாடின்றி அருந்தி வருகின்றனர்.