தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.2.11

பதவி விலக வேண்டிய நேரம் வந்துவிட்டது! : ஹுஸேனி முபாரக்


தான் பதவிவிலக வேண்டியதற்கான நேரம் வந்துவிட்டதாக எகிப்தின்
அதிபர் ஹுஸேனி முபாரக் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ABC செய்தி சேவைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,

எனது 62 வருட பொதுச்சேவையிலிருந்து நான் விலகத்தயாராக இருக்கிறேன். நான் ஓய்வு பெறவேண்டிய நேரம் வந்துவிட்டது. எனினும் உடனடியாகை இது நடைபெறுவது தற்போதைய சூழ்நிலையை மேலும் ஆபத்தாக்கி விடும்.

கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்களுக்கு எனது அரசு பொறுப்பல்ல. எனினும் இருகுழுவினருக்கு இடையில் ஏற்பட்ட வன்முறைக்கு வருந்துகிறேன். எகிப்திய மக்கள் தங்களுக்குள்ளேயே அடிபட்டுக்கொள்வது அழகல்ல. இது எனக்கு மிகுந்த் கவலை அளிக்கிறது.

வன்முறையை தூண்டிவிட்ட முஸ்லீம் சகோதரத்துவ கட்சிக்கும் எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். என கூறினார். கெய்ரோவில் முபாரக்கின் அதிபர் மாளிகையை சுற்றி கடுமையான பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் நிலையில், 82 வயதாகும் முபாரக்கை பதவி விலக கோரும் அழுத்தத்தை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமவும் விடுவிப்பார் என கருதப்படுகிறது

கூட்டணி தொடர்பாக பா.ம.க நிலை அந்தோ பரிதாபம்!!!

"வரும் சட்டசபை தேர்தலில் பா.ம.க.,வுக்கு, 18 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும்' என, தி.மு.க., தலைமை திட்டவட்டமாக தெரிவித்துள்ளதால், பா.ம.க., தலைமை மீண்டும் அ.தி.மு.க.,வுக்கு தூது விட்டுள்ளது. தேர்தலுக்கு தேர்தல் அணி மாறும் பா.ம.க., வரும் சட்டசபை தேர்தலிலும், அணி மாறும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில், மரண அடி வாங்கிய பா.ம.க., வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே, கட்சியை தொடர்ந்து நடத்த முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலுக்காக, தி.மு.க., - அ.தி.மு.க., தலைமைக்கு தூது விட்டு சீட் பேரம் நடத்தி வந்தது. அ.தி.மு.க.,விடம் பேச பா.ம.க., தூதராக குருவும், தி.மு.க.,விடம் பேச்சு நடத்த தலைவர் மணியும் களம் இறக்கப்பட்டனர். அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,வுக்கு முதல் வாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளதால், பா.ம.க.,வுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வில்லை. அதனால், தி.மு.க., கூட்டணிக்காக, பா.ம.க., தலைமை காய் நகர்த்தி வருகிறது. தொண்டர்கள் மத்தியில் தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க, ஆதரவு இல்லை.

இந்நிலையில், டில்லி சென்று திரும்பிய முதல்வர் கருணாநிதி, "பா.ம.க., எங்கள் கூட்டணியில் இல்லை' என, அறிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், இடைவெளியை சரி செய்யும் நோக்கில், மணியை தூது அனுப்பினார். மணி, முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து நடத்திய பேச்சு, பா.ம.க.,வுக்கு சாதகமாக அமையவில்லை. பா.ம.க., சார்பில் கேட்கப்பட்ட, 35 சட்டசபை தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட் ஆகியவற்றுக்கு, அவர்கள் சம்மதிக்கவில்லை. அத்துடன், குறிப்பிட்டு எந்த தொகுதியையும் பா.ம.க., கேட்கக் கூடாது' என, தி.மு.க., தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பா.ம.க., சம்மதிக்கவில்லை. பா.ம.க., விரும்பும் தொகுதி வேண்டும் எனில், 18 தொகுதி மட்டுமே தர முடியும் என, தி.மு.க., தலைமை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

எகிப்து, துனிசியா கலவரம் எதிரொலி: ஏமன் அதிபரும் பதவி விலகுகிறார்!!

பிப். 3-துனிசியா நாட்டில் மக்கள் புரட்சியால் அதிபர் நாட்டை விட்டு ஓடி விட்டார். இதை தொடர்ந்து இப்போது எகிப்தில் அதிபரை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர். இரு நாடுகளில் நடக்கும் போராட்டம் நீண்ட காலமாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வரும் பல நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அரபு நாடான ஜோர்டானில் அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்து விட்டனர். இப்போது இன்னொரு அரபு நாடான ஏமன் நாட்டிலும் மக்கள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

இந்த நாட்டில் அதிபராக இருப்பவர் அலி அப்துல்லா சலே இவர் 32 ஆண்டுகளாக அதிபராக இருக்கிறார். துனிசியா நாட்டில் கலவரம் நடந்ததுமே கடந்த மாதம் இங்கும் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அடுத்த கட்டமாக எகிப்து போல பெரிய அளவில் போராட்டம் நடத்த எதிர் கட்சிகள் தயாராகி வருகின்றன.இதையடுத்து நேற்று பாராளுமன்ற அவசர கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பேசிய அதிபர் அலி அப்துல்லா எனது பதவி காலம் 2013-ம் ஆண்டு முடிகிறது. அத்துடன் பதவி விலகி விடுவேன். நாட்டு வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு நான் செயல்படுகிறேன். என்று கூறினார். ஆனாலும் அதிபருக்கு எதிராக திட்டமிட்டபடி பெரிய போராட்டத்தை நடத்த போவதாக எதிர்க் கட்சிகள் அறிவித்து உள்ளன.

இஸ்லாமிய வங்கிக்கு எதிரான அரசியல் கோமாளி சு.சாமியின் வழக்கு தள்ளுபடி!

கேரள அரசு இஸ்லாமிய ஷரியா  அடிப்படையில் அமைக்கவிருந்த இஸ்லாமிய வங்கிக்கெதிராக ஜனதா கட்சித் தலைவர் அரசியல் கோமாளி சுப்ரமணிய சாமி தொடுத்த வழக்கை கேரள உயர்நீதிமன்றம் இன்று, சில மணி நேரங்களுக்கு முன்  தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. இதன் மூலம் நாட்டிலேயே முதன்முறையாக இஸ்லாமிய வங்கி ஒன்று தொடங்கப்படுவதற்கு வழி வகுக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே. ஷலமேஷ்வர்  மற்றும் நீதிபதி P.R. ராமச்சந்திரன் மேனன் அடங்கிய அமர்வு முன் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.  மனுதாரர் "மதச் சார்பற்ற" நாட்டில் 'மத அடிப்படையில்' வங்கிகள் தொடங்கப்படக்கூடாது என்று வாதிட்டதை நீதிமன்றம் நிராகரித்தது. மத அடிப்படையில் அல்லாமல் ஒரு வட்டியில்லா வங்கி நெறி என்ற அடிப்படையிலேயே இதை அணுகுவதாக அரசுத் தரப்பு தெரிவித்திருந்தது.

இந்த வங்கிக்கு முன்னோட்டமாக 'அல் பரகா நிதி நிறுவனம்' ஒன்றை கடந்த இரண்டாயிரத்து  ஒன்பது முதல் கேரள அரசு நடத்தி வருகிறது என்பதும் அதில் 'ஷரியா' சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்று ஆராய அறிஞர் குழு அமைக்கப்பட்டுள்ளதும் குறிக்கத்தக்கது.

தீர்ப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய சுப்ரமணிய சாமி "தாம் மேற்கொண்டு உச்ச நீதிமன்றத்தை அணுக உள்ளதாக" தெரிவித்தார்.

இதோ வருகிறது ஜனநாயகப் புரட்சி !! அரேபியா எங்கும் கலகம் !! தப்பி ஓடும் சர்வாதிகாரிகள் !! அஞ்சி நடுங்கும் ஆளும் வர்க்கங்கள்!! தொடை நடுங்கும் ஏகாதிபத்தியங்கள் !! – பவானி


இந்தக் கட்டுரையின் நோக்கம் டுனிசியா, ஏமன், எகிப்து போன்ற அரபு நாடுகளில் நடக்கும் ஜனநாயகப் போராட்டங்களைப் பற்றிய செய்திகளைத் தருவது மட்டும் அல்ல. மாறாக, அரபு மக்களைப் பற்றிய பொய்ப் பிரச்சாரங்களை தொடர்ந்து மேற்கொண்டு வரும் மேற்கு உலக நாடுகளின் செயல்களை மீறி அரபு மக்களின் போராட்டம் முன்னேறியிருப்பதையும் அது சீனா, இலங்கை, பர்மா, போன்ற சர்வாதிகார நாடுகளில் வாழும் மக்களுக்கு விடுக்கும் செய்தியை வாசகர்களுக்  தொடர்ந்து படிக்க தலைப்பை கிலிக் செய்யவுன்

ஈரானுடன் சிறீலங்கா அரசு நெருக்கம் - அமெரிக்கா எச்சரிக்கை – விக்கிலீக்ஸ் தகவல்

சிறீலங்கா அரசு  சர்ச்சைக்குரிய ஈரானிய அரசு டன் நெருங்கிய உறவு பேணி வந்தமைக்கு அமெரிக்கா சிறீலங்காவிற்கு எச்சரிக்கை செய்திருப்பதாக, விக்கலீக்ஸ் இணையத்தளம் வெளிப்படுத்தியுள்ள  தகவல்களை  ஆதாரம் காட்டி, த ரெலிகிறாஃப் (The Telegraph) பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக விக்கிலீஸ் இணையம் வெளியிட்டுள்ள தகவலில், 2007ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் நாள் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட விபரங்களில், சிறீலங்காவிற்கான அமெரிக்க தூதருக்கும் சிறீலங்காவின் அப்போதைய வெளிவிவகாரச் செயலர் பாலித கோஹென மற்றும் மத்திய வைப்பகத்தின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோருடன் இடம்பெற்ற தனித்தனியான சந்திப்புக்களின் உரையாடல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஈரானுடன் நெருங்கிய வர்த்தக உறவைப் பேணுவது மற்றும் ஆயுதக் கொள்வனை மேற்கொள்ள இருப்பது பற்றியும், அவ்வாறு ஆயுதக் கொள்வனவு இடம்பெற்றால் அது ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானம் 1747ஐ மீறுவதாக அமையும் எனவும், அமெரிக்க - இலங்கை உறவில் பாரிய எதிர்விளைவைத் தோற்றுவிக்கும் என்றும், அமெரிக்க தூதுவரும், துதரக அதிகாரியும் பாலித கோஹென, அஜித் நிவாட் கப்ரால் ஆகியோருக்கு எச்சரிக்கை செய்தனர்.

இதனை மறுத்த அவர்கள் இருவரும் ஈரானிடம் தமது அரசாங்கம் ஆயுதக் கொள்வனவை மேற்கொள்ள எத்தனிக்கவில்லை எனத் தெரிவித்தனர். அதுமட்டுமன்றி 2007ஆம் ஆண்டு நவம்பரில் அரச அதிபர் மகிந்த ராஜகப்ச ஈரானிற்கு மேற்கொள்ள இருக்கும் பயணம் வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டது எனவும் அவர்கள் இருவரும் பதலளித்துள்ளனர்.

ஆனால் சிறீலங்காவின் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தூதரக அதிகாரி ஒருவருக்கு கூறிய இரகசிய தகவலின் அடிப்படையில் 200 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எண்ணையை சந்தை விலையைவிடக் குறைவான விலைவில் ஈரானிடம் இருந்து கொள்வனவு செய்யவும், முக்கிய ஆயுதங்களை ஈரானிடம் கொள்வனவு செய்யவுமே மகிந்த ராஜபக்சவின் பயணம் அமைவது மட்டுமன்றி, இதன் ஊடாக அமெரிக்காவிற்கு ஒரு செய்தியையும் சொல்ல மகிந்த அரசாங்கம் நினைக்கின்றது என சமரசிங்க கூறியிருக்கின்றார்.

ஈரானின் அணுவாயுதத்திட்டம் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளுடான தொடர்புகளைக் கண்டித்து ஐக்கிய நாடுகள் சபையும், அமெரிக்காவும் அதன் மீது தடைகளை விதித்திருந்த காலத்தில் மகிந்த ராஜபக்சவின் பயணம் அமைவது வொசிங்கரனை எதிர்மறையான நிலைப்பாட்டுக்கு தள்ளும் என தூதரக அதிகாரிகள் இந்த சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர். ஈரானுடன் மேலதிக வர்த்தக உறவுகளை ஏற்படுத்த வேண்டாம் எனவும், அவதானமாகச் செயற்படுமாறும் நட்பு ரீதியாக சிறீலங்காவிற்கு இந்த சந்திப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Financial Action Task Force (FATF) அமைப்பு ஈரானின் நிதிக் கையாளுகை பற்றி அண்மையில் வெளியிட்ட அறிக்கை மற்றும் பயங்கரவாத அமைப்புகளிற்கான ஈரானின் இரகசிய நிதி வழங்கல் பற்றி எச்சரிக்கை செய்த அமெரிக்க தூதரக அதிகாரிகள், ஈரானுடனான நிதி மற்றும் வைப்பக உறவுகள் பற்றியும் எச்சரிக்கை செய்திருக்கின்றனர்.

இந்த விடயங்கள் தொடர்பாக அரச அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரியப்படுத்துவதாக இவர்கள் இருவரும் தனித்தனியாக உறுதியளித்துச் சென்றிருப்பதாகவும் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்துள்ள இரகசியத் தகவல் மேலும் தெரிவிக்கின்றது.
ஈரான் தமது தேயிலையைக் கொள்வனவு செய்யும் முக்கிய நாடு என்பதால், அதனுடனான தமது வர்த்தக உறவு தொடரும் எனவும், தனக்குத் தெரிந்தளவில் அந்த நாட்டிடம் ஆயுதம் வாங்கும் எண்ணம் தமது அரசாங்கத்திற்கு இல்லை எனவும் கோஹொன இதன்போது பதிலளித்திருப்பதாகவும் விக்கலீக்ஸ் வெளியிட்ட தகவலில் மேலும் கூறப்பட்டுள்ளது