தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.12.11

இன்று (டிசம்பர் 1) சர்வதேச எயிட்ஸ் தினம் : விழிப்புணர்வு நடவடிக்கையில் நீங்களும் பங்குபெறுங்கள்

எய்ட்ஸ் நோயை உருவாக்கும் எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வுஏற்படுத்தும் விதமாக இன்று (டிசம்பர் 01) சர்வதேச எயிட்ஸ் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.பாதுகாப்பற்ற உடலுறவு, மருத்துவ சிகிச்சை அல்லது ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் தூய்மையற்ற ஊசிகள்,
தாய்ப்பால், குழந்தை பிறப்பின் போது தாயிலிருந்து சேய்க்கு கடத்தப்படுதல் போன்ற பிரதான

ஈரான் மீதான தடையை எதிர்த்து தெஹ்ரானில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் தாக்கி அழிப்பு

ஈரான் மீது மேலும் பொருளாதார தடைகளை விதிக்க பிரிட்டன் முடிவு செய்ததைஅடுத்து, தெஹ்ரானில் அமைந்துள்ள பிரிட்டிஷ் தூதரகம் கடுமையாக தாக்கப்பட்டுள்ளது. தெஹ்ரானில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஈரானிய மாணவர்கள், அங்குள்ள பிரிட்டிஷ் தூதரகத்தை கடுமையாக தாக்கி சேதப்படுத்தியதுடன், அங்கு பறக்கவிடப்பட்டிருந்த பிரித்தானிய கொடியையும் அகற்றி எரித்துள்ளனர்.இந்நடவடிக்கை கடுமையான

இந்தியாவில் மிகவும் பாதுகாப்பான நகரமாக சென்னை தெரிவு


இந்தியாவில் மக்கள் பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் வாழக்கூடிய நகரங்களில்சென்னை மாநகரம் முதலிடம் பிடித்துள்ளது. மெர்சர் நிறுவனம் நடத்திய உலகின் பிரதான நகரங்களின் தரம் பற்றிய கருத்துக்கணிப்பின் முடிவில் இத்தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த ஆண்டுக்காக மொத்தம் 221 நகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் உலகளவில், மக்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய நகரமாக பெல்ஜியம்

ஜாக்சன் மரணம்: டாக்டருக்கு 4 ஆண்டுகள் சிறை


மைக்கேல் ஜாக்சன் மரணத்துக்கு காரணமான டாக்டருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் 2009ஆம் ஆண்டு மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரது சாவு பற்றிய மர்மம் அதிகரித்த வேளையில் அவரது சாவுக்கு அவரது மருத்துவர்தான் காரணம் என்று போலீசாரால் துப்பறியப்பட்டது.அவரது குடும்ப டாக்டர் கான்ராடு முர்ரே அளவுக்கு அதிகமான சக்தி வாய்ந்த மாத்திரை வழங்கியதுதான் காரணம் என்று

ஜிம்பாவேயில் மயக்க ஊசி போட்டு கற்பழிக்கப்படும் ஆண்கள். போலீஸ் பிடியில் சிக்கிய பெண்கள்.

தென்ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயில் பாலியல் பலாத்கார செயல்களால் ஆண்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. காரில் லிப்ட் கொடுப்பது போல ஏற்றிச் சென்று பலாத்காரம் செய்ததாகவும் எதிர்பாராத நேரத்தில் முகத்தில் தண்ணீரை ஊற்றிவிட்டு மயக்க ஊசி போட்டு பின்னர் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் பல ஆண்கள் புகார் கூறினர். அதிர்ஷ்டம் மற்றும் செல்வ செழிப்பை ஏற்படுத்துவதாக கூறி சிறப்பு சடங்குகள், வழிபாடுகள்

இந்திய சீனப் போர் மீண்டும் ஆரம்பிக்குமா? இரகசியங்கள் அம்பலம் ?


சீன அரசானது இரகசியமாக இந்திய எல்லையில் கட்டிவரும் விமானப்படைத் தளத்தை இந்தியா கண்டு பிடித்து புகைப்படங்களையும் எடுத்துள்ளது. சீன இந்திய எல்லைக் கிராமமான பூக் ஷேயில் சீனா தனது விமானப்படை தளத்தை இரகசியமாக நிர்மானித்துவருகிறது என்ற செய்திகள் ஏற்கனவே இந்தியப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்திருந்தது. இருப்பினும்

செவ்வாய் கிரகத்தில் மணல் குன்றுகள்!


வாஷிங்டன், நவ. 1-  செவ்வாய் கிரகத்துக்கு விண்வெளி ஓடத்தை அனுப்பி அமெரிக்காவின் நாசா விண்வெளி விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக இந்த ஆய்வு நீடிக்கிறது. இதன் மூலம் கிடைத்த புகைப்படங்களை ஆய்வு செய்தபோது செவ்வாய் கிரகத்தில் மணல் குன்றுகள் மற்றும் அடுக்கடுக்கான மணல் அலைகள் இருப்பது தெரியவந்தது.

மலையாளிகளுக்கு இருக்கும் அச்சம் பயம் தமிழனுக்கு இல்லையா?


முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் 155 அடி. 1979-ம் ஆண்டு வரை இந்த அணையில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் 152 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கப்பட்டு வந்தது. ஆனால், அணைப் பகுதியில் நிலநடுக்கம் என்ற தவறான செய்தி ஏற்படுத்திய பீதியின் காரணமாக, நீரைத் தேக்கிவைக்கும் அளவை 136 அடி உயரமாகக் குறைத்துக்கொள்ள தமிழக அரசு முன்வந்தது. 
படித்த தமிழர்களே இந்தப் பிரச்னையைப்

ஆப்கானை விட்டு வெளியேறும் நேட்டோ படைகள்

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளின் படை வீரர்கள் 40 ஆயிரம் பேர் அடுத்தாண்டின் இறுதிக்குள் தங்கள் சொந்த நாடு திரும்புவர் என அந்நாடுகள் தெரிவித்துள்ளன.
ஆப்கானிஸ்தானில் பத்தாண்டுகளுக்கு முன் தலிபான்களுக்கு எதிராக தொடங்கப்பட்ட போரில் அமெரிக்கா தலைமையில் 49 நாடுகளின் கூட்டணிப் படைகள் ஈடுபட்டுள்ளன.