வாஷிங்டன், நவ. 1- செவ்வாய் கிரகத்துக்கு விண்வெளி ஓடத்தை அனுப்பி அமெரிக்காவின் நாசா விண்வெளி விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக இந்த ஆய்வு நீடிக்கிறது. இதன் மூலம் கிடைத்த புகைப்படங்களை ஆய்வு செய்தபோது செவ்வாய் கிரகத்தில் மணல் குன்றுகள் மற்றும் அடுக்கடுக்கான மணல் அலைகள் இருப்பது தெரியவந்தது.
இது பற்றி ஜோன்ஸ்காப்கின்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானி நாதன்பிரிட்ஜஸ் கூறுகையில், "செவ்வாய் கிரகத்தில் பலத்த புயல் காற்று வீசுகிறது. அதனால் அங்கு பறக்கும் மணல்கள் குவிந்து குன்றுகளாக உருவாகியுள்ளன. அவை அலைகளாக மாறி அடுக்கடுக்காக தெரிவிக்கின்றன" என்கிறார்.
ஏற்கனவே செவ்வாய் கிரகத்தில் மணல் குன்றுகள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருந்தனர். ஆனால் அவை எவ்வாறு உருவானது என்பதை தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக