தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.12.11

இந்தியாவில் மிகவும் பாதுகாப்பான நகரமாக சென்னை தெரிவு


இந்தியாவில் மக்கள் பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் வாழக்கூடிய நகரங்களில்சென்னை மாநகரம் முதலிடம் பிடித்துள்ளது. மெர்சர் நிறுவனம் நடத்திய உலகின் பிரதான நகரங்களின் தரம் பற்றிய கருத்துக்கணிப்பின் முடிவில் இத்தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த ஆண்டுக்காக மொத்தம் 221 நகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் உலகளவில், மக்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய நகரமாக பெல்ஜியம்
நாட்டின் லக்சம்பேர்க் நகரம் முதலிடம் பெற்றது. சென்னை 108 வது இடத்தை பிடித்தது. எனினும் இந்தியாவில் சென்னை மாநகரமே பாதுகாப்பான நகரம் என மெர்சர் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதற்கு அடுத்த இடத்தில் பெங்களூர் உள்ளது. சர்வதேச அளவில் அந்நகருக்கு 117 வது இடமும், டெல்லி கொல்கத்தா நகரங்களுக்கு 127 வது இடமும் கிடைத்துள்ளன.

இதே போன்று அமைதியான சுற்றுச்சூழல், செலவு, கட்டமைப்பு போக்குவரத்து வசதி, மருத்துவ வசதி என அனைத்து தரமான வசதிகளும் உள்ளடக்கிய நகரங்கள் பட்டியலில் ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னா முதலிடத்தை பிடித்துள்ளது. 2 வது இடத்தை சுவிற்சர்லாந்தின் சூரிச் நகரமும், 3 வது இடத்தை நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரமும் இடம்பெற்றுள்ளது.

வழமையாக சிங்கப்பூர் இப்பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கும். எனினும் இம்முறை 25 வது இடத்துக்கு பின் தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் பெங்களூருக்கு 141 வது இடம் கிடைத்துள்ளது.

0 கருத்துகள்: