தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.9.11

யேமன் அதிபருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் : துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் பலி?


யேமன் அதிபர் அலி அப்துல்லா சாலா பதவி விலக கோரியே நேற்று இந்த மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது. இராணுவத்தினரின் துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் மூலம் ஆர்ப்பாட்டம் கலைக்கப்பட்ட போதும் அதிபர் பதவி விலகும் வரை தமது போராட்டம் தொடரும் என கிளர்ச்சி குழுவினர் தெரிவித்துள்ளனர்.பாதுகாப்பு படையினர் மீது ஆர்ப்பாட்ட
காரர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியதாகவும், இஸ்லாமிய குழுவொன்றே துப்பாக்கிச்சூடு நடத்தியது எனவும், பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனிமும் தாம் அமைதியாகவே போராட்டத்தை நடத்தியாகவும், இராணுவத்தினரே தம்மீது தாக்க்குதல் நடத்தியதாகவும், ஆர்ப்பாட்ட காரர்கள் அறிவித்துள்ளனர்.

துனிசியா, சிரியா, எகிப்து போன்ற நாடுகளில் அரசுக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் போன்று யேமனிலும் ஆர்ப்பாட்டம் தற்போது தீவிரமடைந்துள்ளது தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்: