தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.5.11

அமைச்சர் மரியம் பிச்சை சாவில் மர்மம் விசாரணைக்கு ஜெ. உத்தரவு


சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை அமைச்சர் மரியம் பிச்சையின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் ஜெயலலிதா, மரியம் பிச்சையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பரபரப்புத் தகவலை வெளியிட்டார். மேலும் இது குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்று சில நாட்களே ஆன நிலையில் நேற்றுகாலை திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் அமைச்சர் மரியம் பிச்சை பரிதாபமாக உயிரிழந்தார்.

தேர்தலில் ஜாதி கட்சிகளுக்கு பெரும் அடி


தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், கொ.மு.க., உள்ளிட்ட ஜாதிக் கட்சிகள் அனைத்தும் பெரும் சரிவை சந்தித்துள்ளன. ஒட்டுமொத்தமாக தமிழக வாக்காளர்கள் ஜாதிக் கட்சிகளுக்கு, மரண அடி கொடுத்து, பாடம் புகட்டி உள்ளனர்.
தமிழகத்தில் வன்னியர் சங்கமாக துவக்கப்பட்டு, பின் அரசியல் கட்சியாக பா.ம.க., உருவெடுத்தது. ஆரம்ப கட்டத்தில் சுயேச்சையாக நின்று, அதிகபட்சம் நான்கு தொகுதிகள் வரை வெற்றி பெற்று, தங்களது பலத்தை நிரூபித்தனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீது வழக்கு?


மதுரை, மே.24- ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் தொலைதொடர்பு நிறுவனத்திற்கு விற்கப்பட்ட விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்ய உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு ஏர்செல் நிறுவனத்தை வெளிநாட்டு வாழ் இந்தியரான சிவசங்கரன் என்பவர் நடத்தி வந்தார்.

கர்நாடகாவில் கந்தலாகிப்போன பாரதிய ஜனதா!!

 புதுடில்லி: கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக்கோரிய கவர்னர் பரத்வாஜின் சிபாரிசை, மத்திய அரசு நிராகரித்துள்ளது.

கர்நாடகாவில், கடந்த அக்டோபரில், முதல்வர் எடியூரப்பா அரசு நம்பிக்கை ஓட்டெடுப்பு கோரிய போது, அவரை எதிர்த்து, 11 பா.ஜ., மற்றும் 5 சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளிக்க திட்டமிட்டிருந்தனர்.