தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.5.11

படையப்பா........ படுத்திரியப்பா!!!!

செய்திதாள்களில், இணையதளங்களில், தொலைகாட்சிகளில் எங்கு திரும்பினாலும் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை அவர் நலம் அடைய பிராத்தனை, அவர் நலமாக இருக்கிறார் யாரும் கவலைபட வேண்டாம் இப்படி போகிறது செய்திகள்.

யார்? இந்த ரஜினிகாந்த் இவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உங்களுக்கு என்ன? ரஜினியின் மனைவி, குடும்பத்தார் படவேண்டிய கவலையை ஏன்? மொத்த தமிழகமும் பட வேண்டும்.

ஜாமீன் தள்ளுபடி; கனிமொழி கைது !


புதுடெல்லி, மே.20- 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ள கனிமொழி முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து அவரை சிபிஐ கைது செய்து திஹார் சிறைக்குக் கொண்டு செல்கிறது.
அதே போல கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமார் ரெட்டியும் கைது செய்யப்பட்டார்.
இதனால், தமிழக சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த திமுகவும் அதன் தலைவர் கருணாநிதி குடும்பமும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு-கோலாலம்பூரில் இன்று தொடங்குகிறது


 இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் நெறியாளர் அப்துல் ரகுமான் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு, மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் 20.05.2011  அன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாட்டை மலேசிய பிரதமர் முகம்மது நஜீப் தொடங்கி வைக்கிறார்.

மின்வெட்டைத் தீர்ப்பது குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் ஜெயலலிதா இரண்டாவது நாளாக ஆலோசனை


மின்வெட்டைத் தீர்ப்பது உட்பட முக்கிய விஷயங்களை நிறைவேற்றுவது குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் ஜெயலலிதா இரண்டாவது நாளாக ஆலோசனை நடத்தினார்.
அமைச்சர்கள் பொறுப்பேற்ற இரண்டாவது நாளில், அவரவர் துறை சார்ந்த இடங்களில் நேரடி களஆய்வு நடத்தினர். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், சமூக நலத் துறை அமைச்சர் உட்பட பலரும் சென்னையின் பல்வேறு இடங்களுக்கு புதன்கிழமை சென்று ஆய்வு நடத்தினர்.
இதன்பின், மாலையில் முதல்வர் ஜெயலலிதா ஏற்பாடு செய்திருந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர்கள் பங்கேற்றனர். சுமார் இரண்டரை மணி நேரம் வரை கூட்டம் நடைபெற்றது.

தலைமை செயலக விவகாரம்!! சர்ச்சையில் சிக்கிய ஜெயலலிதா!!

 தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்றத்தை மாற்றக் கூடாது என்று உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வரும் 16ஆம் தேதிக்குள் இதுதொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

திமுக அரசால் அனைவரும் வியக்கும்

உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்


நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க., அணியின் படுதோல்விக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், உளவுத்துறை உண்மை தகவல்களை மறைத்து, பொய்யான தகவல்களை முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு தெரிவித்தது தான் முக்கிய காரணம்’ என்று தி.மு.க.,வினரே புலம்பி வருகின்றனர்.
கடந்த 2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க., ஆட்சியை பிடித்தபோது, மத்திய மண்டல ஐ.ஜி.,யாக ஜாபர்சேட் பணியாற்றி வந்தார். அவருடைய பணியைக் கண்ட அப்போதைய முதல்வர் கருணாநிதி, ஜாபர்சேட்டுக்கு உளவுத்துறை ஐ.ஜி., பதவி வழங்கினார். இதையடுத்து சென்னை சென்று பொறுப்பேற்ற அவர்