
ஸ்ரீநகர்:ஜம்மு கஷ்மீர் மாநிலத்தில் அங்க சுத்தி(தொழுகைக்காக ஒழு) செய்ய வீட்டிலிருந்து வெளியே வந்த முஸ்லிம் இளம் பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த காம வெறிப்பிடித்த இந்திய ராணுவத்தினர் இருவர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக ட்விட்டரில் அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லாஹ் உறுதியளித்துள்ளார். சி்றப்பு ஆயுத அதிகாரச் சட்டம் இதற்கு தடையாக இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.