தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.7.11

ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி கொடுப்போம்

BRIG GEN amir-ali
டெஹ்ரான்:ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் அமெரிக்க விமானங்கள் மீது கடுமையான எதிர்விளைவுகள் ஏற்படும் என ஈரானின் புரட்சி படையின் மூத்த தலைவர் ஆமிர் அலிஹாஜி ஸாதஹ் தெரிவித்துள்ளார். ஐ.நாவின் சட்டங்களை புறக்கணித்து ஈரான் அணு ஆயுதங்களை சோதனை நடத்துவதாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டியதை தொடர்ந்து அவர் இந்த எச்சரிக்கையை ஆமிர் அலி ஹாஜி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

சிறுவனை கொன்ற ராணுவ அதிகாரி பரபரப்பு வாக்குமூலம்!

ஜூலை 11, சிறுவன் தில்ஷானை சுட்டுக் கொன்றதாக கைதான ராணுவ அதிகாரி ராமராஜ் பாண்டியன் போலீசில் அளித்த வாக்குமூலம் வருமாறு:எனது சொந்த ஊர் மதுரை அருகே உள்ள எழுமலை. 

40 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் ஆயுதங்களை பராமரிக்கும் பிரிவில் ஹவில்தாரராக பணிபுரிந்தேன். பட்டப்படிப்பை முடித்துள்ள நான் லெப்டினன்ட் கர்னலாக இருந்து கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி பணி ஓய்வு பெற்றேன்.

இனி ஆண்டுக்கு 4 சிலிண்டருக்கு மேல் வாங்கினால், கேஸ் விலை ரூ.800!!

சென்னை: ஆண்டுக்கு 4 சமையல் கேஸ் சிலிண்டருக்கு மேல் வாங்குவோர், ஒவ்வொரு கூடுதல் சிலிண்டருக்கும் இனி ரூ.800 விலை தர வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 


சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தற்போது சிலிண்டர் ஒன்றுக்கு சென்னையில் ரூ.393.50 எனவும் மற்ற மாநிலங்களில் தூரத்தைப் பொறுத்து சராசரியாக ரூ.400 எனவும் விற்கப்படுகிறது. இந்த கேஸ் சிலிண்டர்களை 3 வாரங்களுக்கு ஒரு முறை வாங்கிக் கொள்ளலாம்.

கூகிளுடன் இந்திய அரசு மோதல்


கூகிள் இணையத் தேடல் வலைத்தளம், கோடிக்கணக்கானோருக்கு தகவல்களை வழங்கும் முக்கியத் தளமாக உள்ள நிலையில், இந்தியாவில் பல முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் தலைவலியாகவும் இருக்கிறது. இந்தியாவில் மட்டும் கடந்த ஆண்டு கடைசி 6 மாதங்களில், இணையத் தேடல் வலைத் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களை அல்லது படங்கள் உள்பட 282 அம்சங்களை நீக்குமாறு கோரி 67 கோரிக்கைகள் வந்ததாக கூகிள் தெரிவித்துள்ளது.

இந்தியாவிலும் ஒரு நயாகரா நீர்வீழ்ச்சி


இந்தியாவில் இருக்கும் இந்த நயாகரா நீர்வீழ்ச்சி பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? சில மலையாளிகளை தவிர வேறு எவருக்கும் பெரிதாக தெரிந்திருக்காது.
கேரளாவின் கொச்சி விமான நிலையத்தில் இருந்து 30 கி.மீ தொலைவிலும் திரிச்சூரிலிருந்து 30 கி.மீ தொலைவிலும் அமைந்திருக்கும் இந்நீர்வீழ்ச்சி செம்டெம்பருக்கு பின்னரான காலப்பகுதியில் இன்னமும் வேகமாக பாயும்.
எப்போது இங்கு சென்று வரப்போகிறீர்கள்?


லஞ்சமா? 9840983832 என்ற செல்போன் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்

லஞ்சம் வாங்கும் போலீசார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், 9840983832 என்ற செல்போன் எண்ணில் பேசி தகவல் தெரிவிக்கும் திட்டம் சென்னை போலீசில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
 
இது போன்ற திட்டத்தை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்த பொதுமக்கள் டி.ஜி.பி.க்கும் வேண்டுகோள்