தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

த.குன்னம்

முஹம்மது அல் ஃபத்தான் ஜும் ஆ மஸ்ஜித்

உமர் (ரலி) ஜும் ஆ பள்ளிவாசல்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே சுமார்(3 கி.மீ )தூரத்தில் அமைந் துள்ளது.தண்ணீர்குன்னம் இவ்வூரில் இரண்டு ஜும் ஆ பள்ளிவாசல்களும் ஒறு அரசினர்(ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி) பள்ளி கூடமும் பத்து தெருக்களையும் முஸ்லிம்கள் கனிசமாகவும் வாழும் அழகிய கிராமமாகும். இக்கிராமத்தை சுற்றி சுமார் ஏழுக்கும் மேற்ப்பட்ட சிறிய குக்கிராமங்களும் உள்ளன.இக்கிராமங்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். இக்கிராமத்தில் முஸ்லிம்களும் இந்துக்களும் ஆதி திராவிட இனத்தவர்களும் சகோதரத்துவத்துடன் பழகி வாழ்ந்துவருவது இக்கிராமத்திற்க்கு மேலும் பெருமை சேர்க்கிறது.இக்கிராமம் ஓவர்ச்சேரி ஊராட்சி ஒன்றிய பஞ்சாயத்திலும்,நீடாமங்கலம் தாலுக்காவிலும்,மனனார்குடி சட்டமன்ற தொகுதியிலும்,நாகை பாராளுமன்ற தொகுதிலும் அமைந்துள்ளது.