தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.3.11

மொகாலியில் மீண்டும் நம்பிக்கை துளிர்க்கிறது


மும்பை தாக்குதலுக்குப் பிறகு நிலவும் கடுமையான பிணக்குகளையும், போர் சூழலையும் முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக நாளை பாகிஸ்தான் பிரதமர் யூசுஃப் ராஸா கிலானி இந்தியாவுக்கு வருகை தருகிறார்.
இரு நாடுகளுக்கிடையேயான உறவில் நிலவும் இறுக்கமான சூழலை பாக்.பிரதமரின் வருகை தணியச் செய்யும் என எதிர்பார்க்கலாம்.

இந்தியர்களின் மரணத் தண்டனையை ரத்துச் செய்தது ஷார்ஜா நீதிமன்றம்


ஷார்ஜா:எட்டு இந்தியர்களுக்கான மரணத் தண்டனையை யு.ஏ.இயின் ஷார்ஜா மாநில நீதிமன்றம் ரத்துச் செய்தது. இவர்களின் தாக்குதலில் கொல்லப்பட்ட பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்தவரின் குடும்பத்திற்கு துபாயில் இந்திய ஹோட்டல் அதிபர் ஒருவர் ஈட்டுத்தொகை அளித்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கையை நீதிமன்றம் மேற்கொண்டது.
எஸ்.பி.சிங் ஓபராய் என்பவர் கொலை வழக்கில் மரணத்தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு பாகிஸ்தானியர்கள்

குவைத் இடையீட்டை ஏற்றுக்கொள்வோம்: பஹ்ரைனின் முக்கிய எதிர்கட்சி அறிவிப்பு


மனாமா:பஹ்ரைனில் எதிர்கட்சியான ஷியா பிரிவினருக்கும், அரசுக்குமிடையே பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தராக செயல்படலாம் என குவைத் நாட்டின் அறிவிப்பை ஏற்றுக்கொள்வதாக முக்கிய எதிர்கட்சியான விஃபாக் அறிவித்துள்ளது.
பஹ்ரைனில் நிலவும் அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர தங்களுடைய கட்சி இதனை ஏற்றுக்கொள்ளும் என அக்கட்சியின் தலைவர் ஜாஸிம் ஹுஸைன் தெரிவித்துள்ளார்.
பஹ்ரைன் அரசு மற்றும் எதிர்கட்சியின் பேச்சுவார்த்தைகளில்

லிபியாவில் புரட்சி வெல்லும் – எதிர்ப்பாளர்கள் தலைவர் தேஜஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டி


4093534
தோஹா:கத்தாஃபியின் மோசமான ஆட்சிக்கெதிராக லிபியா மக்கள் நடத்திவரும் போராட்டம் வெற்றிப் பெறுமென எதிர்ப்பாளர்களின் தலைவர்களில் ஒருவரான டாக்டர்.அலி ஸல்லாபி தேஜஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:”லிபியாவில் அனைத்து பிரிவைச் சார்ந்த மக்களும் அரசுக்கெதிரான போராட்டத்தில் பங்கேற்கிறார்கள். பல கோத்திரங்களிலிருந்து வந்த இளைஞர்கள் தற்பொழுது போராட்டத்தை வழி நடத்துகிறார்கள். ஆதலால்,

அருண் ஜெட்லியிடம் விசாரணை வேண்டும்!! பஸ்வான்!!

மார்ச் 28, புதுடெல்லி: ஹிந்துத்துவா சக்திகள் தீவிரவாதத்தை அரசியல் ஆதாயத்திற்காக உபயோகிப்பதாக லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஹிந்துத்துவா தேசிய வாதத்தை பா.ஜ.கவின் சந்தர்ப்பவாதம் என அருண் ஜெட்லி அமெரிக்க தூதரிடம் தெரிவித்ததை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்த சூழலில் அவரை தீவிரவாத வழக்குகளை கையாளும்

லிபியா மீதான அமெரிக்க ஆக்ரமிப்பு : ஒரு மாற்றுப் பார்வை


லிபிய விவகாரம் இன்று, தினந்தோறும் மேற்குலக செய்தி நாளிதழ்களின் முதற்பக்க செய்திகளில் இடம்பிடித்திருக்க வேண்டியளவு வளர்ந்திருக்கிறது(வளர்க்கப்பட்டிருக்கிறது?).
தம்மை பக்கசார்பற்ற செய்தி ஊடகங்கள் எனக்கூறிக்கொள்ளும், சி.என்.என், பி.பி.சி (மேற்குலக செய்தி தளங்கள்) போன்ற தளங்கள் கூட சிலவேளைகளில், கடாபியினதும், அவரது அரச படைகளினதும் விமான குண்டுவீச்சுக்களில் 40,50 என பொதுமக்கள் உயிரிழப்பதாக கூறும்

இனி எந்தக் காலத்திலும் அ.தி.மு.க., கூட்டணி கிடையாது: வைகோ சுய புராணம்


தி.மு.க.,வையே ஜீவனாக, வாழ்வாக, உயிராக நினைத் திருந்தவன் நான். என் மீது கொலைப் பழி சுமத்தப்பட்டு, 1993ம் ஆண்டு தி.மு.க., விலிருந்து வெளியேற்றப் பட்டேன். இதனால், 1994ம் ஆண்டு ம.தி.மு.க., உதயமானது. 1996 தேர்தலில் தனித்துப் போட்டியிட்டோம். வெறும், 316 ஓட்டு வித்தியாசத்தில் நான் தோல்வியடைந்தேன். 1998 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டோம்.
அடுத்த ஆண்டு, நாங்கள் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தி.மு.க.,

இனவெறி பேச்சு: ஆப்கானிஸ்தானிடம் ஆஸ்திரேலியா மன்னிப்பு கேட்டது கான்பெரா, மார்ச். 26-


கான்பெரா,  ஆப்கானிஸ்தான் மக்களைப் பற்றி அவதூறு கருத்துகளை கூறியதற்கு ஆஸ்திரேலியா மன்னிப்பு கேட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான அமெரிக்க கூட்டுப் படையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 1500 வீரர்கள் உள்ளனர். ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள திரின் கோட்டில் முகாமிட்டிருக்கின்றனர். அவர்களில் சிலர், `பேஸ்புக்' இணைய தளத்தில் ஆப்கானிஸ்தான் மக்களைப் பற்றி இனவெறி அவதூறு கருத்துகளை தெரிவித்திருந்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் ஆப்கானிஸ்தான் அரசிடம் ஆஸ்திரேலியா மன்னிப்பு கேட்டது. இது தொடர்பாக, ஆப்கானிஸ்தான் ராணுவ மந்திரி அப்துல்