தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.1.11

ஆர்ப்பாட்டக் காரர்களுடன் இணைந்தார் எல் பராதேய் : எகிப்துக்கு புதிய நெருக்கடி


எகிப்து அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம், நேற்று ஞாயிற்றுக்கிழமை மேலும் தீவிரமடைந்துள்ளது.
ஊழல், வேலை வாய்ப்பின்மை, பொருட்கள் விலையேற்றமென, நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது.
இதனால் 30 ஆண்டுகாலமாக ஆட்சி நடத்தும் அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலக வேண்டும். அவர்  நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என கோரி கடந்த நான்கு நாட்களாக ஆர்ப்பாட்ட காரர்கள் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர்.
தற்போது அவர்களோடு  நீதிபதிகளும், காவற்துறையினரும் இணைந்து கொண்டுள்ளனர். நேற்று தலைநகர் கெய்ரோவின் தஹ்ரிர் மையத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை ஒன்றையும் மக்கள் நடத்தினர்.

ஆளும் அரச வர்க்கத்திற்கு எதிரானவரும், விடுதலை கோரும் அமைப்பின் தலைவருமான முகம்மது எல் பரதேய்யும் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்துகொண்டுள்ளார். நோபல் பரிசு பெற்றவரான எல் பரதேய், இவ்வளவு காலமும் வியன்னாவில் தங்கியிருந்து, தற்போது கெய்ரோ திரும்பிய நிலையில் வீட்டுக்காவலில் சிறைவைக்கப்பட்டிருந்தார்.
அவரும் தற்போது அதிபர் முபாரக்கை பதவி விலக கோரி அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிடம் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர், சிறைகளை உடைத்து தப்பி ஓடினர். மேலும் கடைகள், வணிக நிறுவனங்கள் தொடர்ந்து சூறையாடப்பட்டு வருவதால் கலவரத்தை அடக்குவதற்கு அரசு சார்பான இராணுவ தரப்பினர் பாரிய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதனால் ஆர்ப்பாட்ட காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களில் சுமார் 150 க்கு மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

.

எகிப்திலிருந்து 300 இந்தியர்களுடன் மும்பை வந்திறங்கியது ஏர்-இந்தியா விமானம்!


கலவர பூமியாக மாறியிருக்கும் எகிப்திலிருந்து பத்திரமாக இந்தியர்களை மீட்டுவர புறப்பட்டு சென்ற
ஏர் இந்தியா விமானம் இன்று மாலை 300 இந்தியர்களுடன் மும்பை CST விமானநிலையத்தில் தரையிறங்கியது.

போயிங் 747-800 எனும் இவ்விமானம் எகிப்து தலைநகர் கெய்ரோவிலிருந்து நேற்று புறப்பட்டது. இதேவேளை மீதமுள்ளவர்களை கொண்டுவருவதற்கு மும்பை ஜெத்தாஹ் விமானங்களை கெய்ரோவுக்கு அனுப்புவதற்கு ஏர்-இந்தியா நிறுவனம் தீர்மானித்துள்ளது.

தற்போதைய கணிப்பின் படி 600 இந்தியர்கள் எகிப்திலிருந்து தாய்நாட்டிற்கு திரும்புவதற்காக இன்னும் காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் சுற்றுலா நிமித்தமும், வேலை நிமித்தமும் அங்கு சென்றவர்கள் என அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. வேறு நாடுகள் பலவும் இவ்வாறு தங்கள் நாட்டவர்களை அங்கிருந்து மீட்டெடுக்கும் பணியிலல் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கது

இந்திய மாணவர்கள் கால்களில் கருவி ஏன்? : அமெரிக்கா விளக்கம்


அமெரிக்க Tri Valley பல்கலைக்கழக மோசடி வழக்கில் சிக்கிக்கொண்ட இந்திய மாணவர்களின் கால்களில், அவர்களுடைய நடமாட்டத்தை கண்காணிக்கும் எலக்ட்ரானிக் டேக் எனும் கருவி பொருத்தப்பட்டிருப்பதற்கு அமெரிக்கா விளக்கமளித்துள்ளது.
மாணவர்கள் கால்களில் கருவி பொருத்தப்படுவது அமெரிக்காவின் பல இடங்களிலும் நடைமுறையில் உள்ளது. கருவியை பொருத்தியதால் அம்மாணவர்கள் குற்றவாளிகளோ, சந்தேகப்படும் நபர்களோ என அர்த்தமல்ல. மாணவர்களை ஒரு எல்லைக்குள் கட்டுப்படுத்துவதற்கு பதிலாகவே இக்கருவிகள் பொருத்தப்படுகின்றன என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

குறித்த Tri Valley பல்கலைக்கழகத்தில், படித்துவருவோரில் 90 சதவீதமானோர் இந்திய மாணவர்களாவார்கள். அண்மையில் இப்பல்கலைக்கழகத்தில் சோதனை நடத்திய போது அங்குள்ள மாணவர்களுக்கு போலி விசா அளிக்கப்பட்டிருந்ததும், மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் மாணவர்கள் சேர்க்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

எனினும், இது அப்பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தினதும், விசா செய்து கொடுத்த ஏஜெண்டுக்களினதும் தவறு. ஆனால் பலிக்கடாவாக அகப்பட்டுள்ள இந்திய மாணவர்கள் மீது விசாரணை என்ற பெயரில் தடுப்புமுகாமில் அடைக்கப்பட்டு துன்புறுத்தல், கட்டாயப்படுத்தி காலில் இக்கருவி பொருத்தல் என்பன நடந்தேறியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இது இந்தியர்களை அவமதிக்கும் செயல் என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் வயலார் ரவி ஆகியோர் குற்றம் சுமத்தியிருந்தனர்

போராட்டங்களில் கலந்துக்கொள்ளும் வெளிநாட்டினர் நாடு கடத்தப்படுவர் - குவைத் எச்சரிக்கை

குவைத்,ஜன.30:குவைத் நாட்டில் கண்டனப் போராட்டங்களில் கலந்துக் கொள்ளும் வெளிநாட்டினர் நாடு கடத்தப்படுவர் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

உள்துறை அமைச்சக வட்டாரங்களை மேற்கோள்காட்டி அல்வதன் பத்திரிகை இச்செய்தியினை வெளியிட்டுள்ளது.

குவைத்தில் வாழ்ந்துவரும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில், அரபு, ஆசியா நாடுகள் உள்பட அனைத்து வெளிநாட்டினரும் குவைத் நாட்டின் சட்டங்களை மதித்து நடக்கவேண்டும். குடும்பத்துடன் நாடு கடத்தப்படுவதை தவிர்ப்பதற்கு கண்டனப் பேரணிகளில் கலந்துக்கொள்ளக் கூடாது என அப்பத்திரிகை தெரிவிக்கிறது.

போராட்டங்களில் பங்கேற்போர் அவரவர் நாடுகளுக்கு சென்று போராட்டங்களில் கலந்துக் கொள்ளட்டும் என்பதுதான் குவைத் அரசின் நிலைப்பாடாகும்.

எகிப்தில் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கிற்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள சூழலில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து குவைத்தில் வாழும் எகிப்து நாட்டவர்கள் எகிப்து தூதரகத்திற்கு முன்பாக பேரணி நடத்த தயாரான வேளையில் குவைத் நாட்டு அதிகாரிகள் அவர்களை கைதுச் செய்திருந்தனர். இதன் பின்னர் குவைத் அரசின் அறிக்கை வெளியாகியுள்ளது.

கூட்டம் நடத்தியதாக குற்றஞ்சாட்டி கடந்த ஏப்ரல் மாதம் அல்பராதியின் ஆதரவாளர்களான பல எகிப்து நாட்டைச் சார்ந்தவர்களையும் குவைத் நாடு கடத்தியிருந்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

நன்றி :பாலைவண தூது

அல்ஜஸீரா தொலைக்காட்சிக்கு எகிப்தில் தடை.....

கெய்ரோ,ஜன.30:எகிப்தில் அல்ஜஸீரா தொலைக்காட்சி செயல்பட அந்நாட்டு சர்வாதிகார அரசு தடைபோட்டுள்ளது.

எகிப்தில் கடந்த நான்கு தினங்களாக ஹுஸ்னி முபாரக்கின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக கடுமையான மக்கள் திரள் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் நடைபெற்றுவரும் மக்கள் திரட்ட போராட்டங்களை அல்ஜஸீரா தொலைக்காட்சி உடனுக்குடன் ஒளிபரப்பி வருகிறது.

அல்ஜஸீராவினால் எங்கே தங்கள் நாடுகளிலும் புரட்சி வெடித்துவிடுமோ என பல அரபு நாடுகள் அச்சத்தில் உள்ளன.

இந்நிலையில் அல்ஜஸீரா தொலைக்காட்சிக்கு எகிப்திய அரசு இன்று தடை ஏற்படுத்தியுள்ளது. இதனை MENA செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

இந்த உத்தரவை எகிப்தின் வெளி உலக தகவல் தொடர்பு அமைச்சர் அனஸ் அல்ஃபிக்கி பிறப்பித்துள்ளார். அல் ஃபிக்கி தனது உத்தரவில், "அல்ஜஸீராவின் அனைத்து நடவடிக்கைகளும் எகிப்திய குடியரசில் நிறுத்தப்பட வேண்டும். மேலும் அதன் உரிமங்கள் செல்லாது என அறிவிக்கப்படுகிறது. அல்ஜஸீரா தொலைக்காட்சியின் பணியாளர்களிடமிருந்து பத்திரிகையாளர் அடையாள அட்டைகள்(press cards) வாபஸ் பெறப்படுகின்றன" இவ்வாறு கூறியுள்ளார்.
செய்தி:presstv

ரஷ்ய குண்டுத்தாக்குதலை நடத்தியவன் 20 வயது இளைஞன் : புலனாய்வு பிரிவினர் தகவல்

ரஷ்யாவின் டொமொடெடோவோ விமான நிலையத்தில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத்தாக்குதலுக்கு சூத்திரதாரி 20 வயதான இளைஞன் ஒருவன்ரே என ரஷ்ய புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்(சி.சி.டி.வி.கேமரா பதிவு )இவன் தென் கௌகாசஸ் (Caucasus) மாநிலத்தை சேர்ந்தவன் எனவும், அங்குள்ள மலைகளில் பதுங்கி வாழும், இஸ்லாமிய புரட்சிக்குழுவின்றின் உறுப்பினர்களில் ஒருவன் எனவும் புலனாய்வு பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

இத்தகவல்கள் இக்குண்டுத்தாக்குதல் தொடர்பில் இதுவரை தெளிவடையாத பல குழப்பங்களுக்கு தீர்வு கண்டுவிடும் என கூறியுள்ள அத்தகவல்கள், குறித்த இளைஞனின் பெயரை குறிப்பிட மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

ரஹ்ய குண்டு தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டும், 180 பேர் படுகாயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

'பாலஸ்தீன விட்டுக்கொடுப்பு' - தகவல் கசிவு,குழி பறி வேலைகள்


மஹ்மூத் அப்பாஸ்
கசிந்த தகவல்களால் பாலஸ்தீன தலைவர் மஹ்மூத் அப்பாஸுக்கு சங்கடம் எழுந்துள்ளது

மத்திய கிழக்கு பேச்சுவார்த்தைகளின்போது இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனர்கள் இடையில் பரிமாறப்பட்ட இரகசிய ஆவணங்கள் நூற்றுக்கணக்கானவை ஊடகங்களில் கசியவிடப்பட்டுள்ளன.
கிழக்கு ஜெருசலேத்தில் இஸ்ரேலியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடங்கள் பலவற்றை இஸ்ரேலிகளிடமே தந்துவிட பாலஸ்தீனத் தலைவர்கள் தயாராக இருந்தனர் என்றும், இருக்கின்ற இஸ்ரேலிய குடியிருப்புகள் தொடருவதற்கு அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள் என்று காட்டுவதாகவும் கசிந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலஸ்தீனர்கள் தமது கொள்கையிலிருந்து இறங்கிவந்து இந்த விட்டுக்கொடுப்புகளுக்குத் தயார் என்று கூறியும், இஸ்ரேலியர்கள் இதெல்லாம் போதாது என்று சொல்லி நிராகரித்திருந்தனர் என்பதாகவும் கசிந்த தகவல்கள் காட்டுகின்றன.
இந்த ஆவணங்கள் நிஜமானவை என்னும் பட்சத்தில், பாலஸ்தீனத் தலைவர்கள் வெளியில் பேசும்போது வலிமையாக பேசுவதுபோல காட்டிக்கொண்டாலும், தனிப்பட்ட ரீதியில் பேசும்போது அவர்கள் எந்த அளவுக்கு விட்டுக்கொடுக்க தயாராக இருக்கின்றனர் என்று காட்டுவதாக இவை அமைந்துள்ளன எனலாம்.
கசிந்துள்ள தகவல்களினால் ஏற்படக்கூடிய சேதங்களை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று விளங்காமல் மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனத் தலைவர்களும் ஃபதா இயக்கத்தினரும் தட்டுத்தடுமாறி வருவதாகத் தெரிகிறது.
அல்ஜஸீரா வெளியிட்டுள்ள இந்த தகவல்களை கட்டுக் கதைகள் என்று கூறி பாலஸ்தீன தலைமைப் பேச்சுவார்த்தையாளர் சயேப் எரகாத் புறந்தள்ளியுள்ளார்.
ரமல்லா நகரில் உள்ள அல்ஜஸீரா அலுவலகத்தின் முன்பு கூடி கட்சித் தொண்டர்கள் எல்லாம் ஆர்ப்பாட்டம் செய்யுங்கள் என்று அழைப்பு விடுக்கும் செய்தி ஃபதா கட்சியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலிகளுக்காக உண்மையில் எந்த அளவுக்கு விட்டுக்கொடுப்புகளைச் செய்ய பாலஸ்தீன தலைவர்கள் முன்வந்துள்ளார்கள் என்று காட்டும் தகவல்கள் என்று கூறி வெளியிடப்பட்டுள்ள இந்த தகவல்களைக் கண்டு பாலஸ்தீன மக்கள் பலர் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன நிலப்பரப்புகளில் யூதக் குடியிருப்புகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்ற விவகாரம் தொடர்பில்தான் இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையில் கடைசியாக நடந்த பேச்சுவார்த்தைகள் முறிந்து போயிருந்தன.
யூதக் குடியிருப்புகள் தொடர்ந்து அமைக்கப்படுவது கட்டாயம் நின்றாக வேண்டும் என்று அப்போது பாலஸ்தீனர்கள் அடித்துச் சொல்லியிருந்தனர்.
ஆனால் இந்த இடங்களை இஸ்ரேலிகளிடம் விட்டுக் கொடுத்து விடவும், ஜெருசலேத்தில் உள்ள இஸ்லாத்தில் மிகப் புனித இடங்களாக கருதப்படும் சில இடங்கள் தொடர்பில் ஏதாவது உடன்பாட்டுக்கு வருவது பற்றிப் பேசுவதற்கும் 2008ல் பாலஸ்தீனத் தலைவர்கள் தயாராக இருந்திருந்தனர் என்று கசிந்த தகவல்கள் கூறுகின்றன.
இப்படியான விட்டுக்கொடுப்புகளை செய்வதை பாலஸ்தீன மக்களில் பெரும்பான்மையானவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. தங்களுடைய தலைவர்கள் மிகவும் பலவீனமாக இருக்கிறார்கள் என்பதையே இப்படியான தகவல்கள் காட்டுவதாக அவர்கள் நம்புகின்றனர்                         நன்றி : பி.பி.சி

இலங்கை மகிந்தாவை விசாரிக்க அம்னெஸ்டி கோரிக்கை



மஹிந்த ராஜபக்ஷ
மஹிந்த ராஜபக்ஷ
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச அவசர பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்குற்றங்கள் மற்றும் சித்தரவதை தொடர்பாக அவருக்குரிய பங்கு குறித்து அமெரிக்கா விசாரிக்க வேண்டுமென சரவதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனல் கோரியுள்ளது.
இது பற்றி அந்நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பகுதிக்கான இயக்குனர் சாம் ஜாஃப்ரி பிபிசியிடம் கூறுகையில் இலங்கை இராணுவத்தின் மீது, நம்பத்தகுந்த, பாரதூரமான மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக தெரிவித்தார்.
இலங்கை இராணுவத்தின் தலைமை தளபதியாக அதிபர் மகிந்த ராஜபக்சே இருக்கிறார். எனவே இந்த மனித உரிமை மீறல்கள் நடந்தபோது இராணுவ அதிகார கட்டளைத்தொடரின் அதி உயர் பதவியில் இருந்தவர் என்ற முறையில் பொறுப்பேற்றல் தொடர்பான குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அம்னெஸ்டியின் இந்த கோரிக்கை தவறானது, சட்டரீதியில் சாத்தியமற்றது என்கிறார் இலங்கை ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ராஜீவ் விஜய சிங்க.
இது தொடர்பாக பிபிசியிடம் கருத்து தெரிவித்த அவர், ஒரு நாட்டின் தலைவருக்கு முன்பு ஒருவர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் முன் அவர் மீதான குற்றங்களை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
இதை உலக நீதிமன்றங்கள் செய்ய வேண்டும் என்றும் கூறிய அவர், சூடானின் ஜனாதிபதிக்கு இது போல நடந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், இத்தகைய உலக நீதிமன்றங்கள் செயல்பட உதவும் சர்வதேச ஒப்பந்தங்கள் பலவற்றில் அமெரிக்கா கைச்சாத்திடவில்லை வில்லை என்பதோடு, அமெரிக்கா செய்த போர் குற்றங்கள் தொடர்பில் அந்த நாடு இதுவரை பொறுப்பேற்க விரும்பவில்லை என்பது உலகுக்குத் தெரியும் என்பதால், மஹிந்த மீதான புகார்கள் தொடர்பில் அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை என்றும் ராஜீவ் விஜயசிங்க வாதிட்டார்.
புறக்கணிப்பு கோரிக்கை
இதற்கிடையே, இலங்கையில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள இலக்கிய விழாவை துருக்கியின் நன்கு அறியப்பட்ட எழுத்தாளரான ஆர்ஹான் பாமுக் அவர்களும் மற்றவர்களும் புறக்கணிக்க வேண்டும் என்று சர்வதேச அளவில் புகழ் பெற்ற எழுத்தாளர்களான நோம் சாம்ஸ்கி மற்றும் அருந்ததி ராய் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காலி இலக்கிய விழாவில் எழுத்தாளர்கள் கலந்து கொள்வது, இலங்கையில் பேச்சு சுதந்திரத்தை நசுக்கும் செயலை நியாயப்படுத்துவது போலாகும் என இவர்கள் கூறுகின்றனர்.
ஆயினும் இந்தக் கோரிக்கையை விழா ஏற்பாட்டாளர்கள் விமர்சித்துள்ளனர். இந்த இலக்கிய விழாவானது நன்மை செய்வதற்கான உந்துசக்தி என்று அவர்கள் வர்ணித்துள்ளனர்