தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.11.10

துபாயில் அதிக சொத்து முதலீடு செய்வதில் இந்தியர்கள் முதலிடம்

உலக பொருளாதார நெருக்கடியில் பின்தங்கிய துபாய், இந்தியர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதுவரை ஐரோப்பியர் ஆதிக்கம் செய்து வந்த நிலை மாறி அங்கு இந்தியர்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றனர்.
முக்கியமாக இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் நாடாக மட்டும் இல்லாமல் துபாய் இந்திய நிறுவனங்களுக்கும், முதலீட்டார்களுக்கும் சிறந்த இடமாக மாற தொடங்கியுள்ளது. சீனாவிடம் போட்டி போட்டு கொண்டு வரும் இந்தியா சீனாவை போலவே துபாயில் தனது உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்யவும், உலக சந்தையில் விற்பனை செய்வத்ற்கும் சிறந்த இடமாக துபாயை கருதுகிறது.

ராகுல், அருந்ததி மீது வழக்கு

ராஞ்சி : ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்., தொண்டர் ஒருவர், காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் மற்றும் சமூக ஆர்வலர் அருந்ததி ராய் ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளார். ராஞ்சியைச் சேர்ந்த ஆஷிஷ் சிங், ஆர்.எஸ்.எஸ்., தொண்டர். "சிமி'யைப் போல, ஆர்.எஸ்.எஸ்., ஒரு பயங்கரவாத அமைப்பு என்று, காங்., பொதுச் செயலர் ராகுல் விமர்சித்ததால், அவர் மீதும், காஷ்மீர் விவகாரத்தில் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக அருந்ததி ராய் பேசியிருப்பதால், இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 124 ஏ பிரிவின் கீழ் அவர் மீதும், ராஞ்சி நகர, ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், ஆஷிஷ் சிங் வழக்கு பதிவு செய்துள்ளார்

அருந்ததிராய் இல்லம் தாக்கப்பட்டது.(வீடியோ இணைப்பு)

பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி குண்டகிகளால் மக்கள் போராளியும் எழுத்தாளருமான அருந்ததிராய் இல்லம் தாக்கப்பட்டது