தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.3.11

TNTJ :திமுகவை ஆதரிக்க என்ன காரணம் ?


அதிமுக ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தருவேன் என திருச்சியில் ஜெயலலிதா அவர்கள் திருச்சி மேற்கு வேட்பாளர் மரியம் பிச்சையை ஆதரித்து பிரச்சாரம் செய்த செய்தி வெளியாகியுள்ளது . ஆனால் இந்தச் செய்தி வந்த பிறகும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய பொதுக்குழுவில் திமுகவிற்கு ஆதரவு என்ற நிலையை எடுத்துள்ளது. இந்த இரண்டு விசயங்களையும் நோக்கும் பொதுமக்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படும். அதாவது ஜெயலலிதா

TNTJ வின் பொதுக்குழுவும் முதல்வர் சந்திப்பும் – தினத்தந்தி செய்தி


தினத்தந்தியில் இன்று (27-3-11) வெளியான செய்தி:
இடஒதுக்கீட்டை அதிகரிப்பதாக உறுதி அளித்ததால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தி.மு.க.வுக்கு ஆதரவு
கருணாநிதியை சந்தித்து தெரிவித்தனர்.

முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் செயல்படுவதில் அதீத கவனம் செலுத்த வேண்டும் – மக்கா இமாம்


தேவ்பந்த்(உ.பி.):முஸ்லிம்கள் பரஸ்பரம் ஐக்கியமாக செயல்படுவதில் அதீத கவனம் செலுத்த வேண்டுமென மக்காவில் மஸ்ஜிதுல் ஹராமின் தலைமை இமாம் அப்துல் ரஹ்மான் ஸுதைஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க இஸ்லாமிய கல்விக் கலாச்சாலையான தேவ்பந்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுற்றஷீதில் நேற்று ஜும்ஆ தொழுகைக்கு தலைமை வகித்து உரை நிகழ்த்தினார் மக்கா இமாம்.
அவர் தனது உரையில், இந்திய முஸ்லிம்கள் உலகிற்கு அளித்த

தலைமைக்கு எதிராக மாற்றுக் கருத்து: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிலிருந்து ஃபாத்திமா முஸஃபர் நீக்கம்


சென்னை:இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் பெண்கள் பிரிவின் தலைவியும், அக்கட்சியின் அவை உறுப்பினருமான சகோதரி ஃபாத்திமா முஸஃபர் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் தலைமைக்கு எதிராக மாற்றுக் கருத்து தெரிவித்து பிரச்சாரம் செய்ததால் அவர்மீது இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது.

மதுரை "மாட்டின் தலை" ஒரு சதித்திட்டம்!!

மதுரை: மதுரையில் எஸ்.எஸ் காலனியிலுள்ள ஆர்.எஸ்.எஸ்ஸின் அலுவலக வளாகத்தில் மாட்டின் தலையை கண்டெடுத்த சம்பவம் கலவரத்தை உருவாக்குவதற்கான தீவிரவாத சங்க்பரிவாரின் சதித்திட்டம் என சந்தேகிப்பதாக உண்மைக் கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தைக் குறித்து க்ரைம் ப்ராஞ்ச் விசாரணை நடத்த வேண்டுமென நேசனல் கான்ஃபெடரேசன் ஆஃப் ஹியூமன் ரைட்ஸ்

ஜப்பானில் அணுஉலை கதிர்வீச்சு அதிகரிப்பு


டோக்கியோ, ஜப்பானில் புகுசிமாவில் பாதிப்புக்கு உள்ளான அணுஉலையில் கதிர்வீச்சு கடந்த வாரத்தை விட அதிகரித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஜப்பானில் கடல் நகரமான புகுசிமாவில் பாதிப்புக்கு உள்ளான அணுஉலையில் கதிர்வீச்சு கடந்த வாரத்தை விட 8 மடங்கு அதிகரித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிரிய ஆர்பாட்டங்களில் பெரும் முன்னேற்றம் !


சிரிய ஆர்பாட்டம் முன் எதிர்பார்க்காத அளவுக்கு வெள்ளம் போல பெருக்கெடுத்து வருவதாக சிரியாவில் இருந்து டேனிஸ் தூதுவர் கிறஸ்ரீனா லாசன் தெரிவிக்கிறார். பரபரப்பான வெள்ளிக்கிழமையானாலும் சிரியாவின் தலைநகர் டமாஸ்கசில் நடந்து போக முடியும். ஆனால் இன்றோ வீதியால் போக முடியாதளவு ஜனத்திரள் குவிந்து போயுள்ளதாக அவர் தெரிவிக்கிறார். மக்களும், வாகனங்களுமாக தலைநகரே

லிபியா:அட்ஜாபியா நகருக்குள் மறுபடியும் போராளிகள்


சென்ற வாரம் கேணல் கடாபியின் ஆதரவுப் படைகள் கைப்பற்றி முக்கிய எரிகொருள் குதங்கள் உள்ள நகரமான அட்ஜாபியா சற்று முன்னர் போராளிகள் தரப்பால் கைப்பற்றப்பட்டுள்ளது. கடாபியின் படைகள் வாகனங்களை விட்டுவிட்டு தலைதெறிக்க ஓடுவதாக போரளி ஒருவர் அங்கிருந்து தெரிவிக்கிறார். தற்போது பீ.பீ.சி நிருபரும் அல் ஜஸீரா நிருபரும் அங்கு நிற்கிறார்கள். இந்த நகரம் போராளிகளின் கைகளில் விழுந்துவிட்டதென அவர்கள் ஊர்ஜிதம் செய்கிறார்கள். கடாபி நிலைகொண்டுள்ள திரிப்போலி நோக்கிப் போவதற்கு