தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கணிணி தகவல்கள்

இணையத்தின் வேகத்தை அதிகரிக்க உதவும் மென்பொருள்!                                                              

இணையத்தை பயன்படுத்தும் ஏராளமானோருக்கு அதன் வேகத்தை அதிகரிப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை கணினியில் மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.


Auslogics Internet Optimizer என்ற மென்பொருளின் மூலம் சாதரண பாவனையாளரும் கூட இணைய வேகத்தை அதிகரிப்பதற்கான ஆட்டோ ஆப்டிமைசேஷன் செயற்பாடுகளை மேற்கொள்ளலாம்.


Auslogics Internet Optimizer கணினியில் நிறுவிய பின்னர் முதலில் உங்கள் இணைய வேகத்தை தேர்வு செய்து Analyze அழுத்துங்கள். இதன் மூலம் இணைய வேகம் பரீசிலிக்கப்பட்டு மாற்றங்கள் செய்ய வேண்டிய செட்டிங்குகளின் விபரங்கள் திரட்டப்பட்டு பட்டியலிடப்படும்.


அதில் விரும்பிய அல்லது அனைத்தையும் தேர்வு செய்து Optimize அழுத்துங்கள். அதன் பின்னர் கணினியை ரீ-ஸ்டார்ட் (Restart ) செய்தல் வேண்டும். Manual Optimization தேர்வு செய்து விரும்பிய செட்டிங்குகளை மட்டும் மாற்றிக்கொள்ளலாம்.


இணையதள முகவரி : Auslogics 

ஹாட்டிஸ்க் பார்ட்டிஷனை இலகுவாக்க Wondershare டிஸ்க் மனேஜர்!                    

விண்டோஸில் ஹாட்டிஸ்க்கின் பார்ட்டிஷனை இலகுவாக கையாள்வதற்கு உதவுகிறது Wondershareடிஸ்க் மனேஜர். இதன் மூலம் Resize, Delete, Copyமற்றும் டிஸ்க் பார்ட்டிஷனை ரீகவர் செய்யவும் முடியும்.


இதில் இருக்கும் Expert Mode ஐ தேர்வு செய்தால் Manually ஆகவும் Wizard Mode இன் மூலம் ஒவ்வொரு படிமுறையாகவும் டிஸ்கை மனேஜ் செய்துகொள்ளலாம். 



இணையதள முகவரி : Wondershare









வீடியோ மின்னஞ்சல் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்         


நீங்கள் சொல்ல நினைக்கும் தகவலை வீடியோ வடிவில் பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு விருப்பமான நபர்களுக்கு அனுப்பலாம்.

இதற்கு உங்கள் கணணியில் வெப் கமெரா வசதி இருந்தால் மட்டுமே போதுமானது. ஆனால் குறைந்தது 60 வினாடிகள் மட்டுமே பேச முடியும்.

இவ்வாறு வீடியோ வடிவில் நண்பர்களை தொடர்பு கொள்வது புதுமையாக இருப்பதுடன், நேரில் சந்திப்பது போன்ற ஒரு நினைவை ஏற்படுத்தும்.

இந்த சேவையில் உள்ள மற்றும் ஒரு சிறப்பம்சம் மின்னஞ்சல் போன்றே, இதிலும் கோப்புகளை இணைத்து அனுப்பலாம்.

ஆகையால் நாம் அனுப்பும் கோப்புகளுக்கான அறிமுக உரை அல்லது விளக்க உரையாக வீடியோ மின்னஞ்சலை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் இணைப்புகளின் சாரம்சத்தை எளிதாக புரிய வைக்கலாம்.
இணையதள முகவரி                           








உங்கள் கணனியின் அதி உயர் பயணைப்பெற - இலவசமாக ஒரு மென்பொருள். 




SysCheckUp 3.15

உங்கள் கணனியின் அதி உயர் பயணைப்பெற விரும்புகுகிறீர்களா?
அப்படியானால் நிச்சயம் இந்த மென்பொருள் உங்கள் கணனியில் நிறுவப்பட்டிருக்கவேண்டும்.
தேவையற்று ஒழிந்து நிறைந்திருக்கும் ரிப்பயாரிங் கோப்புக்கள், ரெஜிஸ்ட்ரி கோப்புக்களை துள்ளியமாக அழிப்பதே இவ் மென்பொருளின் முக்கிய பணியாக உள்ளது. மேலும், தரவுகள் அழிக்கப்பட்ட பின்னர் கோப்புக்களை சீராக ஒழுங்கு படுத்தி கணனியின் வந்தட்டிற்குள் நடைபெறும் தொடர்பாடலை இலகுவாக்குகிறது. இதனால், உங்கள் கணனி என்றுமில்லாத அளவிற்கு புத்துணர்ச்சி பெறும்.
சிறிய மென் பொருள் தான் பயண்படுத்திப்பாருங்கள்.
இயங்குதளம் : வின்டோஸ் மட்டும்.
அளவு : 3.3 Mb
தரவிறக்க : சுட்டி அழுத்தவும்







ஆச்சரியங்கள் நிறைந்த மாய உலகம் -1


(இணைய உலகின் வரலாறு -1)

  ந்த தகவல் கேட்டாலும் அள்ளி கொண்டு வந்து கொட்டும் அற்புதவிளக்காக இருக்கிற அற்புத உலகம்.நாம் அனைவரையும் உலகத்தின்எந்த மூலையில் எங்கே இருந்தாலும் இணைத்து வைக்கிற சாதனம்.நான்இந்த கட்டுரையை எழுதவும் நீங்கள் இந்த கட்டுரையை வாசிக்கவும்துணையாக இருக்கும் இந்த மாய உலகம்.எப்படிஉருவானது?, ஏன்உருவானது?,அதன் செயல்பாடு என்னஎன்றெல்லாம் இந்ததொடர்பதிவின் மூலம் கொஞ்சம் விரிவாக நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.வாசகர்கள் நன்பர்கள் தங்கள்ஆதரவையும் ,கருத்துக்களையும் மறக்காமல் தெரிவிக்கவும்.

இணைய உலகம் தோன்ற அவசியம் என்ன ??
   “மனிதன் ஒரு சமூக விலங்கு” என்று புகழ்பெற்ற வாசகம் ஒன்று உண்டு.  தன் கருத்துக்களை,எண்ணங்களை,மற்றும் தகவல்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்,பிற மனிதர்களோடு,உறவுகளோடு தொடர்பு கொள்ள வேண்டும் என்று மனித மனம் குரங்கிலிருந்து மனிதனாக மாறத் துவங்கியதிலிருந்தே சிந்திக்க துவங்கியிருந்தது.
  தகவல் தொடர்பு ஆதிமனிதர்களிடமிருந்து சைகைகள்,புகை குறியீடுகள்,தூதுவர்கள்,புறா விடு தூது என படிப்படியாக வளர்ந்து இன்று நாம் பயன்படுத்தும் இந்த இணையம் வரை வளர்ந்திருக்கிறது.
  இணையம் என்கிற இந்த மாய உலகம் உருவாக மையப்புள்ளியாக இருந்தது தகவல் தொடர்பு தான்..,ஆனால் இணைய உலகம் உருவாக முக்கிய காரணமாக இருந்த விசயம் பயம் ! .


இணையத்திற்கு அச்சாரம் இட்ட அமெரிக்காவின் அச்சம்:
  

   ரஷ்ய அரசாங்கம் (USSR) அக்டோபர் 4, 1957 ஆம் வருடம் பூமியின் வளிமண்டலத்தை ஆராய்ச்சி செய்து பூமிக்கு தகவல் அனுப்ப கூடைபந்தைவிட சற்றே அளவில் பெரியதான ஸ்புட்னிக் என்ற ஒரு செயற்கைகோளை விண்ணில் ஏவியது.

இதுதான் அந்த ஸ்புட்னிக்-1

 விண்ணுக்கு செலுத்தப்பட்ட உலகின் முதல் செயற்கைகோள் இதுவே.ரஷ்யாவின் இந்த செய்கையை கண்டு அமெரிக்கா திடுக்கிட்டது. இதற்கு போட்டியாக ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்கிற விடாப்பிடியான எண்ணத்தில் இருந்தது.ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சியின் பிடியில் இருந்து அமெரிக்கா மீள்வதற்குள் லைக்கா எனும் நாய்குட்டியுடன் அதே வருடம் நவம்பர் 3 -ல் ஸ்புட்னிக்-2எனும் அடுத்த செயற்கைகோளை அனுப்பியது. 

அமெரிக்காவின் அச்சம்

அதிர்ச்சி,ஆச்சரியம் இவைகளுடன்  அச்சமும் அமெரிக்காவை கவ்விக்கொண்டது.ரஷ்யா விண்ணில் செயற்கை கோள் அனுப்புகின்றதென்றால் தன் நாட்டின் மீது ஏவுகணை அனுப்ப முடியுமே என்று பயம் கொண்டது அமெரிக்கா.
அமெரிக்காவின் பயத்தின் விளைவாக அமெரிக்க பாதுகாப்பு துறையின் (DOD)உட்பிரிவாக ஆர்பா (ARPA) Advanced Research Project Agency என்ற அமைப்பு 1958 ல் துவங்கப்பட்டது.
  ஆர்பா துவங்கப்பட்டு 18 மாதங்களில் ஆர்பாவின் விஞ்ஞானிகளால் ஸ்பட்னிக் செயற்கைகோளிற்கு போட்டியாக எக்ஸ்ப்ளோரர்-1 என்ற செயற்கைகோள் தயாரிக்கப்பட்டது. இது ஸ்புட்னிக்கை விட கொஞ்சம் மேம்பட்டதாக தயாரிக்கப் பட்டிருந்தது 1958 ஜனவரி 31 –ம் திகதி வின்னை தொட்டது அமெரிக்காவின் முதல் செயற்கை கோளான எக்ஸ்ப்ளோரர்-1

எக்ஸ்ப்ளோரர்-1

அமெரிக்க ராணுவத்தின் உட்பிரிவாக துவங்கப்பட்ட இந்த ஆர்பா தான் இப்போது நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் இணையத்திற்கான விதையாக அமைந்தது.
ஆர்பா-இணையத்தின் விதை:

   
 ஆர்பா அமைப்பானது விண்வெளி ஆராய்ச்சி,தகவல் தொடர்பு மற்றும் பாதுகாப்பு போன்ற விசயங்களுக்காக அமைக்கப்பட்டிருந்தது. ஆர்பா அமைப்பு, பாதுகாப்பு துறையின் பிரிவாக மட்டும் இருக்கும் விதமாக, முதல் செயற்கைகோளை ஏவிய கையோடு விண்வெளி ஆராய்ச்சிக்காக NASA எனும் அமைப்பை தனியாக உருவாக்கியது அமெரிக்கா.
   அச்சமயத்தில் அமெரிக்காவில் பனிப்போர் காலம்.போர் காலங்களில் தகவல் தொடர்பு சாதனங்களுக்கான(Electronic-Communication)இணைப்புகள் சில இடங்களில் அவ்வப்போது துண்டிக்க படுவதுண்டு.இதனால் மொத்தமாக அனைத்து ரானுவ தளவாடங்களிடையேயும். தகவல் பறிமாற்றம் தடைப்பட்டது.தனது ராணுவத் தளவாடங்களிடையே தகவல் தொடர்பு தங்கு தடையின்றி நல்ல முறையில் அமைய வேண்டும்   என விரும்பிய அமெரிக்க அரசு இந்த செயற்திட்டத்தை(Project)ஆர்பாவின் கையில் ஒப்படைத்தது.
   ஆர்பா பலமாக ஆராய்ச்சி செய்து ஆர்பாநெட் என்கிற திட்டம் ஒன்றை சமர்ப்பித்தது.இந்த ஆர்பாநெட் தான் இன்றைய இணையத்தின் தாத்தா. நம் முன்னே பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கும் இணையத்தின் காரணகர்த்தாவான ஆர்பாநெட் பற்றியும் அதன் வளர்ச்சிகள் பற்றியும் விவரமாக தெரிந்து கொள்ள அடுத்த வாரம் வரை காத்திருங்கள்...

ஆச்சரியங்கள் நிறைந்த மாய உலகம்-2




  டந்த பதிவில் இணையத்திற்கு துவக்கப்புள்ளி வைத்த அமெரிக்காவின் அச்சம் பற்றியும்,இன்று நம்மிடையே மாபெரும் ஊடகமாக (media) அவதாரம் எடுத்திருக்கிற இந்த இணையத்தின் தாத்தா ஆர்பாநெட் பற்றிய அறிமுகத்தையும் பார்த்தோம்...
  அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே நடந்த பனிப்போர் காரணமாக அமெரிக்க பாதுகாப்பு துறையால்(D.O.D) ஆர்பாவின் கையில் ஒரு செயற்திட்டம் கொடுக்கப்பட்டது என்று கடந்த பதிவிலேயே கூறி இருந்தேன்.

 D.O.D(அமெரிக்க பாதுகாப்பு துறை)

  சில நன்பர்கள் பனிப்போர் என்றால் என்ன என்று என்னிடம் வினவியிருந்தார்கள்,அவர்களுக்காகவும்.,பனிப்போர் பற்றிய வினா மனதிற்குள் எழுந்த இன்ன பிற வாசகர்களுக்காகவும் அது பற்றி ஓரிரு வரிகளில் அடுத்த தலைப்பில் பார்த்துவிடுவோம்.. பனிப்போர் விவரம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் அடுத்த தலைப்பிற்கு தாவி விடலாம்.

பனிப்போர் (Cold War):


பொதுவாக போர்களை ஆங்கிலத்தில் மூன்று வகையாக பிரிக்கின்றனர்.
1.Hot War(ரத்த களமாக,ஆயுத பிரயோகங்களுடன் நடக்கும் போர்.)
2.Warm War (இரு நாடுகளிடையேயும் பேச்சுவார்த்தை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது ஆனாலும்,இரு நாடுகளின் தரப்பும் போரிட தயார் நிலையில் இருக்கின்றன,இவர்களிடையே எந்த நேரத்திலும் போர் நடக்கலாம் என்கிற நிலை.)
3.Cold War (இரு நாடுகளுக்கிடையேயும் நேரடியாக சண்டை நடக்காது,ஆனால் இரண்டும் தங்கள் எதிர்ப்பையும் ,ராணுவ முன்னேற்றங்களையும் காட்டி தங்களை பலமான நாடாக காட்டிக்கொள்ளும்.தங்களுக்கு பிடித்த நாடுகளுக்கு உதவியாகவும் ,பிடிக்காத நாடுகளுக்கு எதிரணியாகவும் நின்று பிற நாடுகளுக்கு உதவும்(??) .தங்கள் போரை பிற நாடுகளில் நிகழ்த்தும்,நேரடி சண்டை இருக்காது).

அமெரிக்க-ரஷ்ய பனிப்போர்:


  இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இணைந்துதான் செயல்பட்டன அப்போதே இவைகளிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்தன,இரண்டாம் உலகப்போரின் முடிவில் கருத்து வேறுபாடுகள் தீவிரமடைந்தன இவ்விரு நாடுகள் இடையே நடந்த அரசியல் மற்றும் ராணுவம் சார்ந்த முன்னேற்றங்கள் மற்றும் சாதனைகள் போன்றவற்றில் நடந்த நெறுக்கடிகள்,போட்டாப்போட்டிகள்,அணு ஆயுத சோதனைகள் போன்றவையே அமெரிக்க-ரஷ்யப் பனிப்போர் .இரண்டாம் உலகப்போரின் முடிவு தொடங்கியதிலிருந்தே அமெரிக்க-ரஷ்ய பனிப்போரும் துவங்கியிருந்த்து. 1945 முதல் 1980 வரை இது தொடர்ந்தது.
  ரஷ்யா 1957-ல் ரஷ்யா தனது முதல் செயற்கைகோளை செலுத்தியது,கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை சோதனை செய்தது,அமெரிக்கா அணு அயுதங்கள் தயாரித்தது, விண்வெளி ஆராய்ச்சி செய்தது, நிலவுக்கு மனிதனை அனுப்பியது,இவை எல்லாமே பனிப்போரின் பாகமே...இணையமும் இந்த பனிப்போர் பெற்று தந்த பரிசு தான்.பனிப்போருக்கு நம் நன்றிகளை தெறிவித்துக்கொள்வோம்...

ஆர்பா:

னிப்போர் போரின் முன்னோடியாக அமைய முடியும் என்பதை நாம் அறிவோம்.இதனால் அமெரிக்க அரசாங்கம் ரஷ்யா செய்த ஒவ்வொரு நடவடிக்கையையும் எச்சரிக்கை உணர்வுடன் கண்காணித்தது. ரஷ்யா தனது ரானுவத் தகவல் தொடர்பை துண்டித்து விட்டால் என்ன செய்வது.போர் திட்டத்தை செயல்படுத்தும் சிக்கலை எப்படி நிவர்த்தி செய்வது ,தகவல் தொடர்பு அறுபடாமல் இருக்க புதிய வழிமுறை உள்ளதா? என்கிற ஆராய்ச்சியில் ஈடுபட்டு ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்துமாறு ஆர்பா(ARPA) வை கேட்டுக்கொண்டது.ஆர்பா சில பல வருடங்களாக ஆராய்ச்சி செய்து 1969-ல் ஆர்பாநெட் எனும் ஒரு திட்ட அறிக்கையை சமர்ப்பித்தது.

இணையத்தின் தாத்தா – ஆர்பாநெட்:


  துண்டிப்பிலாத தகவல் தொடர்பை தருவதற்காக ஆர்பாநெட் Packet Switching எனும் கருத்துருவை (Concept)பயன்படுத்தியது.உலகின் முதல் தகவல் துணுக்கு பரிமாற்றம் [த.து.பரிமாற்றம்] (packet switching) ஆர்பா இணையத்தில் தான் நிகழ்ந்தது. Packet Switching  பற்றி பிரிதொரு பதிவில் விளக்கமாக சொல்கிறேன்,தங்களை குழப்பிக்கொள்ள வேண்டாம்...
  முன்னிருந்த தொழில்நுட்ப கருவிகள் மின்சுற்று விசை அமைவை (Circuit Switching)அடிப்படையாக கொண்டு இயங்கியவை தொலைபேசி,தந்தி போன்றவை. த.து பரிமாற்றத்தின் அடிப்படையில் தான் இன்றைய இணையமும் செயல் பட்டு கொண்டிருக்கிறது.இதனால் தான் ஆர்பா-நெட்டை இணையத்தின் தாத்தா என்று செல்லமாக அழைக்கிறார்கள்.

இணையத்தின் வளர்ச்சியை அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்...

இனி இத்தொடர் வாரம் தோறும் திங்கள் கிழமைகளில் தொழிற்களத்தில் வெளிவரும்... தொடர்ந்து வாசித்து ஆதரவு தாருங்கள்.தங்கள் சந்தேகங்கள்,கேள்விகள்,கருத்துக்கள் போன்றவைகளை எனக்கு மின்னஞ்சல் செய்யலாம்...


ஆச்சரியங்கள் நிறைந்த மாய உலகம்-5


கடந்த பதிவில் லிங்க் கொடுப்பதில் தவறு நிகழ்ந்து விட்டது.தவறுக்கு வருந்துகிறேன்.இம்முறை பகுதி- 5 நம் தொழிற்களத்தில் வாசிக்க தவறாதீர்கள் நன்பர்களே....

இந்த பதிவில்.....

போர்காலங்களில் இணையம் பாதிக்க படாதா?,அணு ஆயுதங்களின் வீச்சுகளால் ஆர்பாநெட்அழிந்துவிடாதா?,ரஷ்யாவிற்கு பயந்து அமெரிக்கா தயாரித்த ஆர்பாநெட் அணு ஆயுத போர்களின்அக்கப்போர்களை சமாளிக்க வல்லதாவாருங்கள் விடை தேடுவோம்.....

பாகம்-5 http://tk.makkalsanthai.com/2012/09/internethistory5.html


இனி இத்தொடர் வாரம் தோறும் திங்கள் கிழமைகளில் தொழிற்களத்தில் வெளிவரும்... தொடர்ந்து வாசித்து ஆதரவு தாருங்கள்.தங்கள் சந்தேகங்கள்,கேள்விகள்,கருத்துக்கள் போன்றவைகளை எனக்கு மின்னஞ்சல் செய்யலாம்...

மின்னஞ்சல் முகவரி:vijayandurairaj30@gmail.com

கடந்த பாகம்: பாகம்-4  http://tk.makkalsanthai.com/2012/09/internethistory424.html