தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.3.11

இந்திய ஊடகங்களா? இந்துத்துவா கேடயங்களா?

கசாப் என்ற பெயர் சில மாதங்களுக்கு முன் இந்தியா முழுவதும் அனைவராலும் உச்சரிக்கப்பட்ட பெயர். இந்தியாவிலுள்ள அனைத்து ஆங்கில ஊடகங்களாலும் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தப்பட்ட பெயர். மும்பையில் அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகளில் ஒருவன்தான் கசாப். சரி இது அப்படியே இருக்கட்டும். ‘சாத்வி பிரக்யா’ என்கிற பெயரை இந்தியாவில் எத்தனை பேருக்கு தெரியும்? மாலேகன் குண்டு வெடிப்பு சம்பவம் பொதுமக்கள் எத்தனை பேருக்கு தெரிந்திருக்க வாயப்பு இருக்கிறது? மேலே குறிப்பிட்ட அந்தப் பெயரும், அந்த சம்பவமும், திரளான மக்களுக்கு சென்றடையாத செய்திகளாகவே இன்றளவும் உள்ளன.

2007, பிப்ரவரி 18ல் தில்லி – லாகூர் இடையிலான சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி உள்ளிட்டோர்க்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது


புதுடெல்லி, மார்ச். 4- பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மற்றும் 20 பேர்களுக்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், மசூதியை இடிக்க கரசேவகர்களை தூண்டிவிட்டதாக அத்வானி மற்றும் 20 பேர்களுக்கு

கண்டுகொள்ளுமா தேர்தல் கமிஷன்?


ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களின் இறுதித் தேர்வு மார்ச் 2ம்தேதி துவங்கி 25ம் தேதி வரை நடைபெறுகிறது. 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு வரும் 22ம் தேதி துவங்கி ஏப்ரல் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வை 11லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.பல்கலைக் கழக தேர்வுகள் ஏப்ரல் 5ம்தேதி துவங்கி மே 2ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த நிலையில் மார்ச் 20ம் தேதியில் இருந்து ஏப்ரல் 11ம்தேதி வரை தேர்தல் பிரசாரத்திற்கான உச்சக்கட்ட

நக்கீரன் காமராஜ் பாஸ்போர்ட் முடக்கம்

கடந்த டிசம்பர் மாதம் நக்கீரன் காமராஜ் வீட்டில் சிபிஐ அதிகாரிகள், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக அதிரடி சோதனை நடத்தினார்கள்.   அப்போது சிபிஐ அதிகாரிகள் காமராஜின் சிம் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளார்கள்.  இந்தத் தகவல் ஊடகங்களில் வெளியானதை அடுத்து, காமராஜ் இந்தச் செய்தியை மறுத்தார்.  ஆனால், இப்போது என்டிடிவி இந்து தொலைக்காட்சி மீதும், நிருபர்களின் மீதும் தொடர்ந்த மான நஷ்ட வழக்கு ஆவணத்தில் "15.12.2010 அன்று, சிபிஐ அதிகாரிகள் மனுதாரரின் இல்லத்திற்கு 'வருகை' தந்தனர்.   வருகை தந்து சோதனை செய்தனர்.  பிறகு மனுதாரரின் சிம் கார்டு,

முதல்வர் கருணாநிதி குறித்த விபரங்களுக்கு இணையதளத்தில் தடை


சென்னை, மார்ச். 4- முதல்வர் கருணாநிதி, அமைச்சர்கள், மாநகர மேயர்கள் குறித்த விவரங்கள், தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அரசு இணையதளத்தில் வெளியிட தேர்தல் ஆணையம் தடை செய்துள்ளது.     தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க தொடங்கியுள்ளது. 
இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக தமிழக அரசின் இணையதளத்தில் முதல்வர், அமைச்சர்கள், மாநகர மேயர்கள் குறித்த

சவூதியில் இஸ்லாமிய அரசியல் கட்சி?


சவூதியில் முதலாவது இஸ்லாமிய அரசியல் கட்சியாக ஹிஸ்புல் உம்மா அல் இஸ்லாமிய்யா’ என்ற பெயரில் கட்சி யொன்றைப் பதிவுசெய்யுமாறு கோரப்பட்டுள்ளது.
இதன் வருகை சவூதியில் அரசியல் சுதந்திரத்தினை கோரி நிற்பதனை எடுத்துக் காட்டுகின்றது. இதுவரையும் நிலவி வருகின்ற மன்ன ராட்சி அல்லது சவூதியின் குடும்ப ஆட்சியில் மாற்றம் வேண்டும் என்பதனை இது குறிப்பிட்டுக் காட்டுகின்றது.
"மன்னர் குடும்பம் நாட்டினை ஆட்சி செய்வதனை எங்களால் நியாயம் காண முடியாது. இந்த விடயத்தினை

எகிப்திலிருந்து முபாரக் குடும்பத்தினர் வெளியேற தடை


கெய்ரோ, மார்ச். 2 எகிப்தில், அரசியல் சாசனத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் குறித்த பொதுமக்கள் ஓட்டெடுப்பு, பார்லிமென்ட் மற்றும் அதிபர் தேர்தல் நடக்கும் தேதிகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே சமயம் முபாரக் குடும்பத்தினர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
எகிப்தில், சமீபத்தில் அரசியல் சாசனத்தின் 11 பிரிவுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. அதிபரின் பதவிக் காலத்தைக் குறைப்பது, அவசர நிலைச் சட்டத்தைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள்