தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.3.11

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி உள்ளிட்டோர்க்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது


புதுடெல்லி, மார்ச். 4- பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மற்றும் 20 பேர்களுக்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், மசூதியை இடிக்க கரசேவகர்களை தூண்டிவிட்டதாக அத்வானி மற்றும் 20 பேர்களுக்கு
எதிராக பதிவு செய்யப்பட்ட கிரிமினல் குற்றச்சாட்டுகளை நீக்குமாறு இவ்வழக்கை விசாரித்த மத்திய புலனாய்வுக் கழகமான சிபிஐக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது. அம்மனுவில், அத்வானி உள்ளிட்டவர்களுக்கு எதிரான கிரிமினல் சதி குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் சரியான முடிவுக்கு வரவில்லை என்றும், எனவே அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் சிபிஐ கூறியுள்ளது.
இந்நிலையில் இம்மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், அத்வானி மற்றும் 20 பேர்களும் நான்கு வார காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று தாக்கீது அனுப்ப உத்தரவிட்டது. 

0 கருத்துகள்: