கடந்த டிசம்பர் மாதம் நக்கீரன் காமராஜ் வீட்டில் சிபிஐ அதிகாரிகள், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது சிபிஐ அதிகாரிகள் காமராஜின் சிம் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளார்கள். இந்தத் தகவல் ஊடகங்களில் வெளியானதை அடுத்து, காமராஜ் இந்தச் செய்தியை மறுத்தார். ஆனால், இப்போது என்டிடிவி இந்து தொலைக்காட்சி மீதும், நிருபர்களின் மீதும் தொடர்ந்த மான நஷ்ட வழக்கு ஆவணத்தில் "15.12.2010 அன்று, சிபிஐ அதிகாரிகள் மனுதாரரின் இல்லத்திற்கு 'வருகை' தந்தனர். வருகை தந்து சோதனை செய்தனர். பிறகு மனுதாரரின் சிம் கார்டு,
கடன் பத்திரம், வீட்டுப் பத்திரம், மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை எடுத்துச் சென்றனர். இது தொடர்பாக பறிமுதல் பட்டியலையும் வழங்கினர்" என்று அந்த மனுவில் காமராஜ் தெரிவித்துள்ளார். தன்னடைய பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப் படவில்லை என்று ஊடகங்களுக்கு பொய்யான தகவலை தெரிவித்து வந்த காமராஜ், கூறிய பொய், இந்த வழக்கு ஆவணம் மூலம், அம்பலமாகியுள்ளது. இந்தப் பொய்க்கு எந்த நீதிமன்றத்தில் காமராஜ் பதில் சொல்லப் போகிறார் ?

0 கருத்துகள்:
கருத்துரையிடுக