தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.3.12

லண்டனில் உள்ள கடாபியின் மகன் மாளிகையை லிபியாவிடம் ஒப்படைக்க உத்தரவு


லிபியாவில் கடந்த 32 ஆண்டுகளாக சர்வாதிகாரியாக இருந்த கடாபி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புரட்சி படையால் கொல்லப்பட்டார். அவரது மனைவி, மகன்கள் மற்றும் மகள் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவரது இளைய மகன் ஷாகி கடாபி (39) நைஜர் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். தற்போது லிபியாவில் ஆளும் புதிய அரசு கடாபியின் குடும்பத்தினர் மீது ஊழல் வழக்கு தொடர்ந்துள்ளது.அரசு பணத்தில் முறைகேடு செய்து அவற்றில்

வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு லிபியா ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் கடாபியின் இளைய மகனும், கால்பந்து வீரருமான ஷாகி கடாபி இங்கிலாந்தில் வடமேற்கு லண்டனில் ஹாம்ஸ்டெட் நகரில் ரூ.70 கோடிக்கு ஒரு ஆடம்பர மாளிகை வாங்கி இருப்பது லிபியா அரசுக்கு அதிகார பூர்வமாக தெரிய வந்துள்ளது.
8 படுக்கை அறைகள், நீச்சல் குளம் மற்றும் வேலைப்பாடுகள் கொண்ட மரச்சாமான்கள், சினிமா தியேட்டர் போன்ற வசதிகள் அந்த மாளிகைக்குள் உள்ளன. இவற்றை லிபியா அரசிடம் 2 வாரத்திற்குள் ஒப்படைக்கும்படி நீதிபதி பாப்லீவெல் உத்தரவிட்டுள்ளார்.

0 கருத்துகள்: