ஆண்களுக்கு தலையில் முடி வளர பயன்படும் புரோபேஷியா மருந்தால் மலட்டுத்தன்மை ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.பிரான்ஸில் கடந்த 2010ம் ஆண்டு 32,000 ஆண்கள் இந்த மருந்தை பயன்படுத்தியுள்ளார்கள்.அவர்கள் இந்த மருந்தின் பயன்பாட்டை நிறுத்தி பல மாதங்கள் கழிந்த பின்பு மலட்டுத்தன்மை உருவானதாகக் கண்டுபிடித்துள்ளார்கள்.இந்த விடயத்தை புரோபேஷியா மருந்தைத் தயாரிக்கும் மெர்க் என்பவர் ஏற்றுக்கொண்டார்.இதுகுறித்து
அவர் கூறியதாவது, புரோபேஷியாவில் உள்ள Finasteride என்ற பொருள் டெஸ்டோஸ்டெரோன் என்ற ஆண்மைச் சுரப்பினைத் தடுத்து விடுகிறது.இதனால் முடி வளரத் தொடங்குகிறது. இந்த மருந்தை நிறுத்தி விட்டால் ஆண் தன்மை பெருகுகிறது. முடி வளர்வது நின்று விடுகிறது என்று கூறியுள்ளார்.
மேலும் சுகாதார உற்பத்தி பாதுகாப்பு என்ற பிரெஞ்சு அமைப்பின் தலைவராக விளங்கும் டொமினிக் மாரஞ்சி கூறியதாவது, புரோபேஷியா மருந்தின் அளவைக் குறைத்துப் பயன்படுத்தலாம் அவ்வாறு நீண்ட நாட்கள் பயன்படுத்தினால் 3 சதவீதம் இழப்பு தான் ஏற்படும்.
மேலும் ஒவ்வொரு மனிதனும் ஒரு சிகிச்சையைத் தொடங்கும் முன்பு அதன் நன்மை தீமையை அறிந்து பின்பற்ற வேண்டும் என்றார்.
அமெரிக்காவில் இந்த மருந்தைப் பயன்படுத்தியவர்கள் Propecia help என்ற இணையதள சங்கத்தைத் தொடங்கி உள்ளனர். ஒருவர், தனக்குத் தெரிந்த சிலருக்கு 80 வயதிலும் ஆண்மை இழப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக