தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.3.12

ஆஸ்திரேலியாவில் 50 கோடி ஆண்டுக்கு முன் வாழ்ந்த கடல் வாழ் உயிரினம் கண்டுபிடிப்பு


அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள குவின்கேன்யான் தேசிய கற்கால ஆராய்ச்சி மையத்தின் நிபுணர் எரிகா கிளிட்ஸ் தலைமையிலான குழுவினர் தெற்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரை பகுதியில் பூமியை தோண்டி ஆய்வு செய்தனர். அப்போது அங்கு ஒருவித கடல்வாழ் உயிரினத்தின் எலும்பு கூடுகள் கண்டெடுக் கப்பட்டன. நூற்றுக்கணக்கான அந்த எலும்பு கூடுகளை அவர்கள் ஆராய்ச்சி செய்தனர்.
 
அது 0.6 இஞ்ச் உயரமும், 0.9 இஞ்ச் அகலமும் கொண்டதாக இருந்தது. அதன் உடல் மிகவும் மிருது வானதாக இருந்திருக்க வேண்டும். அது கடல் நீரில் வாழும் மிக நுண்ணிய உயிரினங்களை சாப்பிட்டு உயிர் வாழ்ந்திருக்கின்றன. இவை சுமார் 55 கோடி முதல் 56 கோடி ஆண்டு களுக்கு முன்பு வாழ்ந்து இருக்க வேண்டும். இதற்கு கரோனா கோலிகா அகுலா என விஞ்ஞானிகள் பெயரிட் டுள்ளனர். உலகம் உருவாகிய போது தோன்றிய உயிரினங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் எனவும் அவர்கள் கருதுகின்றனர்.

0 கருத்துகள்: