தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.7.11

ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாயின் சகோதரர் மெய்க்காப்பாளரால் சுட்டுக்கொலை

காந்தஹார்: ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாயின் சகோதரர் அகமது வாலி கர்சாய் இன்று தனது மெய்க்காப்பாளரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாயின் ஒன்றுவிட்ட சகோதரர் அகமது வாலி கர்சாய். அவர் கந்தகார் மாகாண கவுன்சிலின் தலைவராக இருந்தார். தெற்கு ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்தவர்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சூழ்ச்சிகளை முறியடிப்பேன்!

புனே: எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு எதிரான எனது தாக்குதல் தொடரும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக் விஜய் சிங் கூறியுள்ளார். ஃபேஸ்புக்கில் தனக்கு எதிரான நிந்தனைகளுக்கு பதிலளிக்கையில் பதிலளித்தார் அவர்.

எனக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்ஸின் தாக்குதல் இன்றோ நேற்றோ துவங்கியது அல்ல. மலேகான், அஜ்மீர் குண்டுவெடிப்புகளில்

சல்மானுக்கு சட்டம், இ.அஹ்மதுக்கு கூடுதல் பொறுப்பு-அமைச்சரவை மறுசீரமைப்பில் 7 பேருக்கு கல்தா 8 பேருக்கு வாய்ப்பு

salman_khurshid_link
புதுடெல்லி:கேபினட் அமைச்சர்களை நியமித்து தற்போதைய அமைச்சர்களின் துறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி பிரதமர் மன்மோகன்சிங் அமைச்சரவையை புனரமைத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் உள்பட நான்குபேர் தனி பொறுப்புடைய இணை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். புதியவர்கள் 4 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கேரளாவைச் சார்ந்த முஸ்லிம் லீக் கட்சியைச் சார்ந்த இ.அஹ்மதிற்கு தனிப்பொறுப்பு வழங்கப்படவில்லை. மாறாக, மனித வள மேம்பாட்டுத்துறையில் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பட்டபகலில் இளைஞரை கல்லால் தாக்கி கொன்ற நண்பர்கள் கைது

கோவை, ஜூலை. 13-   சிக்னலில் நின்றிருந்த நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகள் முன்னிலையில், வாலிபரை கல்லால் தாக் கொன்ற கி நண்பர்கள் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாநகர போலீஸ் சார்பில் சாலை சந்திப்புகளில் சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு தொடர்ந்து, அபராதம் வசூலிக்க, நகரின் முக்கிய ரோடுகளில் அமைந்துள்ள சிக்னல்களில், 186 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மட்டுமல்லாது, குற்றச் செயலில் ஈடுபடுபவர்களையும் பிடிக்க, கூடுதலாக சில இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த, போலீஸ் கமிசனர் அமரேஷ் பூசாரி உத்தரவிட்டுள்ளார். கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் அனைத்தையும் கமிசனர் அலுவலக வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே 24 மணி நேரமும் போலீசார் கண்காணித்து, நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.

19ம் தேதி சென்னைக்கு வருகிறார் ஹில்லாரி கிளிண்டன்

சென்னை: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் வருகிற 19ம் தேதி சென்னைக்கு வருகிறார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் இந்தியா வருகிறார். தனது பயணத்தின் ஒரு பகுதியாக அவர் சென்னைக்கும் வருகிறார். 19ம் தேதி அவர் சென்னை வருகிறார்.

இதுவரை வெளியுறவுத்துறை

ஒரே ஊசியில் உடலை இளைக்கவைக்கலாம் !!!

மெல்பர்ன் : குண்டானவர்கள் ஒரே ஒரு ஊசி மூலம் இளைக்கலாம் என்று ஆஸ்திரேலிய வாழ் இந்திய டாக்டர் தலைமையிலான ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் தேசிய சுகாதார ஆய்வு நிறுவனத்தில் டாக்டராக இருப்பவர் சுசில் ரானே. இவரது தலைமையிலான ஆராய்ச்சி குழு, உடல் பருமனை குறைப்பதற்கான வழிகள் பற்றி தீவிர ஆய்வு நடத்தியது. அதில் முன்னேற்றம்