எனக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்ஸின் தாக்குதல் இன்றோ நேற்றோ துவங்கியது அல்ல. மலேகான், அஜ்மீர் குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ். எஸ்ஸின் பங்கினைக்குறித்து பேசியபொழுது அவர்கள் என்னை பரிகாசம் செய்தார்கள். ஆனால் பின்னர் அஸிமானந்தா அனைத்தையும் வெளிப்படுத்தினார்.’-திக் விஜய்சிங் கூறுகிறார்.
ஏ.டி.எஸ் தலைவர் ஹேமந்த் கர்கரேயை தேசத்துரோகி என்று அழைத்த நரேந்திரமோடி பின்னர் அவருடைய மனைவி கவிதா கர்காரேயை ஒருகோடி ரூபாய் செக்குடன் சென்று சந்தித்ததை நினைவுக் கூறினார் திக்விஜய்சிங்.
மலேகான் குண்டு வெடிப்புகளின் பின்னணியில் செயல்பட்ட கரங்களை வெளிக்கொணர்ந்ததன் மூலம் நாட்டில் ஹிந்துத்துவா சங்க்பரிவார்களின் தூண்டுதலால் நடைபெற்ற தாக்குதல்களுக்கு முடிவு ஏற்பட்டுள்ளது என திக்விஜய் சிங் சுட்டிக்காட்டினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக